இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance கடந்த வருடத்தைப் போன்றே டிஜிட்டல் தளத்தில் இவ்வருடமும் தமிழ் – சிங்கள புதுவருடத்தை கொண்டாடுவதற்காக மகிழ்ச்சி நிறைந்த சம்பிரதாய புதுவருட விளையாட்டுக்களை நடத்தியது. 2020ஆம் ஆண்டில் தமிழ் சிங்கள புதுவருடத்திற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தள விளையாட்டு நடவடிக்கைகள் வெற்றியளித்ததன் காரணமாக இந்த வருடமும் அதனை சிறப்பாக நடத்த HNB Finance நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
HNB Financeஇன் ‘அபே கெதர அவுருது’ டிஜிட்டல் தளத்தில் சம்பிரதாயபூர்வ புதுவருட விளையாட்டுக்கள் பல அடங்கியதுடன் அதற்கு இலங்கை வாழ் அனைவரும் அவர்களது வீட்டில் இருந்த வண்ணம் பாதுகாப்பாக அதில் பங்குகொள்ள முடிந்தது. தலையணை சண்டை, கனாமுட்டி உடைத்தல், சருக்கல் மரம், யானையின் கண்ணில் புள்ளடியிடுதல் உள்ளிட்ட பல்வேறு வினோதமான போட்டிகள் பல இதில் அடங்கின. மேலும் இந்த டிஜிட்டல் தளத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்காக பதிவு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் அதனை பதிவிரக்கம் (download) செய்யக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட புதுவருட பஞ்சாங்கம் மற்றும் புதுவருடச் செய்தியும் இதனுடன் வழங்கப்பட்டது.
இந்த புதிய வேலைத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த HNB Financeஇன் விற்பனைப் பிரதானி உதார குணசிங்க, ‘கொவிட்-19 தொற்று நோய் தற்போது சுகாதார, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாக இருப்பதுடன் கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக இலங்கையர்களான நாம் வீட்டில் அடைப்பட்டு புதுவருடத்தை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. HNB Financeஇன் ‘அபே கெதர அவுருது’ டிஜிட்டல் தொழில்நுட்ப தளம் காலத்தின் தேவையைப் புரிந்து கொண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் அறிமுகம் செய்த சிறந்த வேலைத்திட்டமாக இருந்ததுடன் கடந்த வருடம் 100,000க்கும் அதிகமான போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டதனால் இம்முறை தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த டிஜிட்டல் புதுவருட வேலைத்திடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்தோம்.’ என தெரிவித்தார்.
HNB Financeஇன் ‘அபே கெதர அவுருது’ டிஜிட்டல் தள விளையாட்டுப் போட்டிகளில் போட்டியாளர்கள் பங்குபற்றுவதற்காக மே மாதம் இரண்டாம் வாரம் வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு கவர்ச்சியான பல பரிசில்களும் HNB Financeஇனால் வழங்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE PLC இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால A(lka) தரப்படுத்தலை நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. 60 கிளைகள் மற்றும் 10 சேவை மத்திய நிலையங்களைக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள HNB FINANCE PLCஇனால் திட்டமிடப்பட்டுள்ள நிதி சேவைகளுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) கடன்கள், லீசிங் சேவைகள், தங்கக் கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், கல்விக் கடன், சேமிப்பு மற்றும் நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட நிதிச் சேவைகள் இதில் பிரதானமானவையாகும்.