நிதி சுதந்திரம் என்பது நீங்கள் உங்கள் பிள்ளைக்கு கற்பிக்கக் கூடிய மிகச்சிறந்த பாடமாக இருக்கலாம். உங்கள் பிள்ளை அந்த நிலையை அடைய உதவுதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. எளிமையாக கூறின், சிறுவர் சேமிப்புக் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதில் தொடங்கி பகுதிநேரத் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு ஊக்குவித்தல் வறையான எண்ணற்ற வழிமுறைகள் காணப்படுகின்றன. உங்கள் பிள்ளையை நிதி சுதந்திரத்திற்காக தயார்படுத்தும் பிரபலமான சில வழிகள் இங்கே தரப்படுகின்றன.
பெற்றோர் என்ற வகையில், உங்கள் பிள்ளை வயது முதிர்ச்சி அடையும்போது வெற்றியை தனதாக்கிக் கொள்ளத் தேவையான கருவிகளை வழங்கியிருத்தல் முக்கியமானது. முக்கியமாக நிதியைச் செலவு செய்வதற்குள்ள வாய்ப்பு மூலமே நிதிச் சுதந்திரம் ஆரம்பமாகிறது.
சிறுவர் சேமிப்பு கணக்கு மூலம் அவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதால், இதன்மூலம் அவர்கள் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் HNB FINANCE கம்பனியின் யாலு சிறுவர் சேமிப்புக் கணக்கு போன்ற சிறுவர்களுக்கான மிகச்சிறந்த சேமிப்புக் கணக்கொன்றைத் தெரிவு செய்தல் மிகவும் முக்கியமானது. வைப்பிலிடும் தொகைக்கு ஏற்ப கவர்ச்சிகரமான வட்டி மற்றும் பயனுள்ள பரிசுகள் வழங்கப்படுவதால் எமது சேமிப்புக் கணக்கு மூலம் பண சேமிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. அதுமாத்திரமன்றி அவ்வாறான கணக்குகளை மிகவும் எளிமையாக ஆரம்பிக்கவும் முடியும்.
உங்கள் பிள்ளை பொறுப்புகளை ஏற்க தயாராகும்போது பணத்தை செலவழிக்க வேண்டிய விதத்தை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் அவசியமான செலவுகள் எவை என்பதையும் அத்தியமற்ற செலவுகள் எவை என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் இது நுட்பமான ஒன்றாகத் தென்படினும், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது நடைமுறையில் அது பற்றிய புரிதலை உங்கள் பிள்ளைக்கு ஏற்படுத்தல் அவ்வாறான திறன்களை கற்றுக்கொள்ளும் மிகச்சிறந்த வழிமுறையாக அமையும். பிள்ளைகள் எடுத்துக்காட்டுகள் மூலம் கற்பதில் வல்லவர்கள். ஆகவே நீங்கள் மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
பயன்பாட்டு கட்டண பட்டியல்களைச் செலுத்தும் முறை பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். ( உதாரணம் – நீர்க் கட்டண பட்டியல், மின்சார கட்டண பட்டியல், தொலைபேசிக் கட்டணப்பட்டியல் போன்ற) விதிக்கப்படும் வரிகள் பற்றி அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். அது அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிந்துகொள்ள உதவும். அதேபோல், அது வரவு செலவு திட்டத்தின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வை பெறுவதற்கும் தேவையான கொடுப்பனவுகளைச் செலுத்த பணத்தை சேமித்து வைப்பதற்கும் அவர்களை ஊக்குவிக்கும்.
சுயமான அபிவிருத்தியை மையப்படுத்திய வாழ்க்கை முறை எளிய நுகர்வோர் செலவுகளைவிட கூடுதலான முதலீடுகளுக்கு வழிவகுக்கின்றது. எந்த ஒருவருக்கும் கல்வியே மிகச்சிறந்த மூலதனம். தங்களுடைய திறன்கள் மற்றும் அறிவை விருத்தி செய்து கொள்வதற்காக செலவு செய்ய உங்கள் பிள்ளையை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் செலவுகளில் பல்லினத் தன்மையை ஏற்படுத்துவதற்கும், அவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளியுங்கள். அவர்கள் திறனாய்வுடன் உலகத்தைக் காண கல்வி உதவுகிறது.
இது உங்கள் பிள்ளைகளை பொருளாதாரம் வழங்கியுள்ள சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்வதற்கும், இயல்பாகவே அவர்களுடைய அறிவை பயன்படுத்துவதற்கும் வழி செய்கிறது. அதன் பயனாக காலப்போக்கில் ஸ்திரத்தன்மயை உறுதிப்படுத்தும் பலவேறு வருமான மார்க்கங்களை கண்டறிய வாய்ப்பு கிடைக்கின்றது.
விடுமுறை காலத்தில் எளிமையான பகுதி நேர தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும். அவர்கள் தமக்காக பணத்தை ஈட்டுவதற்கு அது வழிவகுக்கும். அதேபோல் கல்வி நடவடிக்கைகள் முடிந்தபின்னர் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி உணர்வதற்கான புரிதலைத் தருகிறது. அவர்கள் உழைக்கும் பணத்தின் பெறுமதியைப் புரிந்து கொள்ளச் செய்யும் இரண்டு வழிமுறைகள் காணப்படுகின்றன.
அவர்களுக்கு நீண்டகாலம் உதவக்கூடிய வகையில் அந்தப் பணத்தை சிறிய முதலீடுகளாக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை தெளிவுபடுத்துதல் முதலாவது வழிமுறையாகும். அதேபோல், அந்தப் பணத்தைச் சேமித்து தேவையான உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்துவதன் மூலமும் அவர்களுக்கு உதவலாம்.
அந்தவகையில், தொடக்கத்திலேயே அவர்களுடைய தொழிலில் தவறுகள் ஏற்பட வாய்ப்பளித்தல் இரண்டாவது வழிமுறையாகும். அதன் மூலம் அவர்க்கு எப்போது பணத்தை செலவு செய்ய வேண்டும், எப்போது சேமிக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்படும். மௌனம் காத்தல் சிரமமானதாக இருந்தாலும் அவர்கள் விடும் தவறுகள் அவர்களை நிதி விடயத்தில் சுதந்திரமாக செயல்படுவதற்கு படிப்பினையாக அமையும்.
உங்கள் பிள்ளையை நிதி சுதந்திரத்தின் பொருட்டு வழிநடத்த உதவும் பல வழிமுறைகள் காணப்படுகின்றன. அது எளிமையாக பணத்தைச் சேகரிக்கும் உத்திகள், மிகச் சிறந்த சிறுவர் சேமிப்பு கணக்கு அல்லது பகுதி நேர தொழில் ஒன்றாகவும் இருக்கலாம். இந்த படிப்பினைகள் அவர்களை நல்ல நிலைக்கு இட்டுச் செல்லும் அதேநேரம் எதிர்காலத்தில் அவர்கள் அதைப் பாராட்டவும் கூடும்.