011 202 4848

செய்திகள்

உலக சிறுவர் தினத்தை ‘யாலு’ சிறுவர் கணக்குடன் கொண்டாடும் HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியை உலக சிறுவர்கள் தினமாக அறிவிக்கப்பட்ட அந்த தினத்தில் HNB Financeஇன் சிறுவர் சேமிப்புக் கணக்கான ‘யாலு’ கணக்கின் அனுசரணைக்கான மேம்பாட்டு நடவடிக்கையை முன்னெடுத்தது.

இந்த திட்டம் HNB FINANCEஇன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தொடங்கப்பட்டதுடன் மற்றும் எவர் யார் வேண்டுமானாலும் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கிறது. #HNBFChildrensDay2021 என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையிலான குழு புகைப்படத்தை உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யுமாறு பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இத்திட்டம் முழுக்க முழுக்க இணையத்தில் செயற்படுத்தப்படுவதுடன், இதனால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து எவ்வித ஆபத்து இல்லாமல் இணைந்து கொள்ள முடியும். இங்கே, #HNBFChildrensDay2021 திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்கள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து HNB FINANCE சிறந்த 10 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அந்த வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் மாதத்தில் பரிசுகளையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCEஇன் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி உதார குணசிங்க, நிகழ்ச்சித் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ‘சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கம் இருப்பது அவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமானது, மேலும் அந்த பழக்கத்தை அவர்களிடம் சுவாரசியமான மற்றும் உற்சாகமான வழிகளில் வளர்க்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ‘யாலு’ சேமிப்புத் திட்டம் நிலையான மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது மற்றும் வயலின் மற்றும் கிடார் போன்ற இசைக்கருவிகள் மற்றும் ட்ரோன்கள், ஸ்கூட்டர்கள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பல மதிப்புமிக்க பரிசுகளை குழந்தைகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.’ என தெரிவித்தார்.

‘எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த சமுதாயத்தையும் உலகையும் உருவாக்குவதற்கு குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவளிப்பது எங்கள் பொறுப்பு மற்றும் கடமையாக நாங்கள் பார்க்கிறோம். குழந்தைகளிடம் நல்ல பண்புகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு பெரும் பங்கு உள்ளது, மேலும் ஒரு பொறுப்பான நிதி நிறுவனமாக, சிறந்த எதிர்காலத்திற்காக குழந்தைகளை ஊக்குவிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.’ என அவர் மேலும் தெரிவித்தார்.

HNB Finance தொடர்பில்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 60 கிளைகள் மற்றும் 10 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.