நீங்கள் உங்களுடைய நாளாந்த செலவுகளுக்காக கிடைக்கின்ற பணத்தை சேமித்து வைக்கின்ற ஒரு மாணவராக அல்லது ஒரு மழைநாளில் செலவிடுவதற்கு பணத்தை சேமிக்கின்ற, வீட்டில் இருக்கும் பெற்றோராக இருக்கலாம். பணச் சேமிப்பு என்பது நீங்களாகவே கட்டியெழுப்பக்கூடிய உங்கள் வாழ்க்கை முழுவதற்கும் முக்கியமான மிகச்சிறந்த பழக்கங்களில் ஒன்று. நீங்கள் புதிய மோட்டார் வாகனம் ஒன்றை அல்லது வீடு ஒன்றை வாங்கும் கனவுடன் பாடுபட்டு உழைக்கின்ற ஒரு பணியாளர் என்றால், உங்களுடைய மாதாந்த வருமானத்தில் ஒரு தொகை பணத்தை சேமித்து வைப்பதே அந்தக் கனவை நனவாக்குவதற்கான மிகச் சிறந்த வழி.
ஒரு வங்கியில் அல்லது நிதி நிறுவனம் ஒன்றில் சேமிப்பு கணக்கொன்றை பேணி வருவதன் மூலம் உங்களுடைய அனைத்து தனிப்பட்ட சேமிப்புகளையும் இலகுவாக வைப்பிலிட்டு பாதுகாக்க முடிவதோடு, தேவையான எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அந்தப் பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும். உங்களுக்கு ஒரு சேமிப்புக் கணக்கு அவசியம் இல்லையென நீங்கள் நினைத்தால், இந்த வழிகாட்டல் உங்கள் மனதுக்கு நிம்மதியை தரும்.
நீங்கள் ஒரு சேமிப்புக் கணக்கை வைத்திருக்க வேண்டியதற்கான 05 காரணங்கள் பின்வருமாறு,
நீங்கள் சேமிப்புக் கணக்கில் பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் கிடைக்கும் வட்டி உங்களுக்கான மேலதிக வருமானமாகும். வட்டி என்பது, உங்களுடைய பணத்தை வைத்திருக்கின்ற நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற வட்டி வீதத்தினை அடிப்படையாகக்கொண்ட குறிப்பிட்ட ஒரு காலம் முடிவடையும்போது உங்களுக்கு வழங்கப்படுகின்ற, நீங்கள் பைப்புச் செய்துள்ள பணத்தின் குறிப்பிட்டதொரு சதவீதமாகும். நிதி நிறுவனத்திற்கு ஏற்ப சேமிப்புக்கான வட்டி விகிதம் மாறுபடலாம். அதற்கு மேலதிகமாக, உங்களுடைய சேமிப்பு எல்லையின் அடிப்படையில் கூடுதலான வட்டி விகிதத்தை எதிர்பார்க்கலாம்.
பொதுவாக, ரூபா 100,000 இற்கும் அதிகமான சேமிப்புகளுக்கு 4.5% அளவிலான உயர்ந்த வட்டி விகிதத்தை வழங்கும் HNB பினான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்ற வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது. ஆகவே, நீங்கள் ஒரு சாதாரண வங்கியில் பணத்தை சேமித்து வைப்பதை விட உயர் வட்டி விகிதம் வழங்கப்படுகின்ற சேமிப்புக் கணக்கொன்றை பேணி வருவதன் மூலம், குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் இவ்வாறு வட்டி சேர்வதால் நீங்கள் அறியாமலேயே கூடுதலான ஒரு தொகையை ஈட்ட முடிகிறது.
உங்களுடைய நாளாந்த மீதிக்கு வட்டி கணிக்கப்பட்டு, அவை மாதாந்தம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுதல் HNB பினான்ஸ் கம்பனியின் சாதாரண சேமிப்பு கணக்கிலுள்ள முக்கியமான ஓர் அம்சமாகும். அதற்கு மேலதிகமாக, நீங்கள் HNB தானியங்கி ரெலர் இயந்திர (ATM) அட்டை மூலம் 24 மணி நேரமும் உங்கள் கணக்கினை அணுகமுடியும். மேலும், உங்களுடைய சகல கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய தகவல்களை குறுந் தகவல் சேவை (SMS) ஊடாக இலவசமாக அறிந்து கொள்ள முடியும்.
சேமிப்புக் கணக்கின் மூலம் உங்களுடைய பணம் வெளிச் சக்திகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்படுதோடு, உங்கள் பணத்திற்கு காப்புறுதி உண்டு என்பதால் இது உங்கள் நீதியைப் பேணி வருவதற்கு மிகவும் பொருத்தமான வழிமுறையாகும். அத்தோடு, அது உங்கள் மூலதன முதலீட்டுக்கு மிகவும் பாதுகாப்பான முறையாக உள்ளது. உறுதியில்லாத சந்தை நிலவரங்கள் காரணமாக உங்களுக்கு பாரிய இழப்பு ஏற்படக்கூடிய பங்குகள் மற்றும் முறிகள் மீது முதலீடு செய்வதைப் போலல்லாது, சேமிப்பு கணக்கு ஒன்றை பேணி வருவதால் நீங்கள் எவ்விதத்திலும் சூதாட்டத்துடன் தொடர்புபட மாட்டீர்கள்.
அதற்கு மேலதிகமாக, சேமிப்பு கணக்குகள் வாடிக்கையாளர்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் தங்களுடைய பணத்திற்கு அணுகுவதற்கான வாய்ப்பை தருகின்றன. நடைமுறைக் கணக்கு அல்லது நிலையான வைப்பு போலல்லாது தேவையான எச்சந்தர்ப்பத்திலும் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.
HNB பினான்ஸ் கம்பனியில் சேமிக்கும்போது உங்களது சேமிப்பின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. HNB பினான்ஸ் என்பது இலங்கையில் உள்ள மிகப்பெரிய தனியார் வணிக வங்கியான HNB என்ற பெயரில் அனைவரும் அறிந்த ஹட்டன் நஷனல் வங்கியின் இணை நிறுவனமாகும். HNB பினான்ஸ் பீ.எல்.சி கம்பனி 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்திற்கு ஏற்ப இலங்கை மத்திய வங்கியில் உரிமம் பெற்ற ஒரு நிறுவனமாகும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை நிறுவனமொன்றில் வைப்பில் இடுவதற்கு முன்னர், அனைத்து சந்தர்ப்பத்திலும் அந்த நிறுவனத்தின் தகுதி பற்றிய பின்புலத்தை ஆராய்ந்து பாருங்கள்.
நீங்கள் உடன்படிக்கை அடிப்படையில் செயற்படும் ஒருவரானால், உங்களுக்கு வருமதியாக உள்ள பணத்தை பல்வேறு நிறுவனங்களிலிருந்து சேகரித்துக் கொள்வது பெரும் சிரமமாக இருக்கலாம். ஆகவே, நீங்கள் ஒரு சேமிப்புக் கணக்கை வைத்திருந்தால் உங்களுடைய பணத்தை நேரடியாக அதில் வைப்புச் செய்யலாம். அதேபோல் உங்களுக்கு பணத்தைச் சேகரிக்க பல இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.
மேலும், நீங்கள் பெற்றுக் கொண்டுள்ள சேவைகளுக்காக கொடுப்பனவை செலுத்த வேண்டியிருந்தால், சேமிப்பு கணக்கின் ஊடாக இலகுவாக பணப்பரிமாற்றத்தைச் செய்ய முடியும். நீங்கள் நேரடியாக இணையவழி வங்கிச் சேவை ஊடாக அல்லது எந்த ஒரு வங்கிக் கிளையிலும் கொடுப்பனவைச் செலுத்த முடியும்.
சேமிப்புக் கணக்கு ஒன்றை பேணிவரும்போது உங்களுக்கு உங்களுடைய மேலதிக பணம் அனைத்தையும் வைப்புச் செய்வதற்கு குறிப்பிட்ட ஓர் இடம் இருப்பதாலும், வங்கி கொடுக்கல் வாங்கல்களின் வரலாற்றை பரிசோதிப்பதன் மூலம் உங்களுடைய சேமிப்பு பழக்கம் தொடர்பான மேலோட்டமான ஒரு கருத்துக்கு வரமுடிவதாலும் உங்களுடைய நிதி நடவடிக்கைகளை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இது உங்களுடைய பணம் எங்கே செல்கிறது என்பதை தீர்மானிக்க உதவுவதால், அதன்படி உங்களுடைய எதிர்காலத்திற்கான நிதித் திட்டமிடல்கள் மற்றும் அவசர நிலைமைகளுக்கான பணத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
உதாரணமாக உங்களுடைய பிள்ளைக்கு யாலு Yalu – Children’s Savings Account ஆரம்பிப்பதன் மூலம் அவர்களுடைய எதிர்காலத்தை திட்டமிட முடியும் என்பதுடன், அதன்மூலம் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சேமிப்பு பழக்கத்தைக் கொண்டு வர உதவுவது மாத்திரமன்றி, அவர்கள் வயது வந்தவுடன் சுயமாக எழுந்து நிற்பதற்கு நிதி ரீதியான பலம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. HNB பினான்ஸ் யாலு சிறுவர் சேமிப்பு கணக்கு இலங்கையில் சிறுவர்களுக்கான மிகச்சிறந்த சேமிப்பு கணக்காக இருப்பதோடு அதில் அதிகூடிய வட்டி, சிறுவர்களின் பொழுதுபோக்கினை நிறைவு செய்வதற்கான வயலீன், ட்றோன் மற்றும் சைக்கிள் போன்ற பெறுமதியும் கவர்ச்சியும் கொண்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
HNB பினான்ஸ் சேமிப்பு கணக்கின் மூலம் நிலையான கட்டளை வசதி, HNB பினான்ஸ் ATM அட்டைகள் மூலம் 24 மணி நேரமும் கணக்கை அணுக முடியும் என்பதுடன், உங்களுடைய சகல கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய தகவல்கள் இலவச குறுந்தகவல் சேவை உங்களை வந்தடையும்.
HNB பினான்ஸ் சாதாரண சேமிப்பு கணக்கு மற்றும் மியுலெசி மகளிர் சேமிப்பு கணக்கு என்பன உங்கள் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக அதிகப்படியான வட்டி விகிதத்தை வழங்குகிறன.
நீங்கள் இன்றே HNB பினன்ஸ் சாதாரண சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கையிலுள்ள மிகச்சிறந்த சேமிப்பு கணக்குடன் இணையுங்கள். சந்தையில் மிகவும் போட்டியான வட்டி விகிதத்தை வழங்குகின்ற எமது சேமிப்பு கணக்கு மாற்றீடுகள் மூன்றில் ஒன்றைத் தெரிவு செய்யுங்கள்.
HNB பினான்ஸ் கம்பனியில் உங்கள் சேமிப்பு கணக்கை ஆரம்பிப்பது தொடர்பான மேலதிக தகவல்களை here.பெற்றுக்கொள்ள முடியும்.