011 202 4848

வலைப்பதிவு

நீங்கள் கல்விக்கடன் ஒன்றைப் பெறுவதற்குரிய ஐந்து காரணங்கள்

கல்வி என்பது உங்கள் எதிர்காலத்திற்கான மிகச்சிறந்த முதலீடுகளில் ஒன்று. எனினும், பல்கலைக்கழக பட்டமொன்றைப் பெறுவதற்கு மிகுதியான செலவைத் தாங்க வேண்டியுள்ளது. உங்களுடைய பட்டப் படிப்புக்குத் தேவையான பணத்தை முதலீடு செய்வதற்கு ஒரு கொடை அல்லது புலமைப்பரிசில் பெறுவதே மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கின்றது. ஆனால், எல்லோருக்கும் அதற்கான வாய்ப்பு கிட்டுவதில்லை. இத்தகைய ஒரு சூழ் நிலைமையில் உங்களுக்கு கல்விக்கடன் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நீங்கள் உயர்கல்வி கற்பதற்கு ஆவலுடன் இருக்கின்ற மாணவர் எனில், கல்விக்கடன் ஒன்றுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக அமையும் 5 காரணங்களை பின்வருமாறு வரிசைப்படுத்துகிறோம்.

பெற்றோருடன் இணைந்து கூட்டாக விண்ணப்பித்தல்

புதிதாக ஊழியப் படையில் இணைகின்ற தொழில் வாய்ப்பற்ற மாணவர்கள் அல்லது ஆட்களுக்கு கல்விக் கடன் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. HNB FINANCEஇல் கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான கடனைப் பெற தத்தமது பெற்றோருடன் கூட்டாக விண்ணப்பிக்க முடியும். பெற்றோர் தமது வருமானத்திற்கான சான்றுகளைச் சமர்ப்பித்து தமது பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதற்கான கடனைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் தொழில் செய்யும் ஒருவராக இருந்தால், கடன் பெறுவதற்கான தகுதியை பெற உங்கள் தொழில் வழங்குநரின் உறுதிப்படுத்தல் கடிதம், பிந்திய மூன்று மாதங்களுக்கான சம்பளச் சீட்டு மற்றும் வங்கி கூற்று போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கவர்ச்சிகரமான வட்டி வீதம்

நீங்கள் HNB FINANCE இல் “நெணசர கல்விக் கடன்” பெறுவதனால், உங்களுக்கு இலங்கையில் பெறக்கூடிய மிகச்சிறந்த வட்டிவீதம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். தங்களின் நிதி உறுதிப்பாடு மற்றும் சம்பந்தப்பட்ட ஆபத்து வரவு நிலைமைகளின் அடிப்படையில் உயர் வட்டி வீதம் உங்கள் எதிர்கால நிதி உறுதிப்பாட்டுக்கு பாதிப்பைக் கொண்டு வரலாம். மாதாந்த இலகு தவணைக் கட்டணத் திட்டம், எங்களுடைய கவர்ச்சிகரமான வட்டி வீதத்துடன் மாணவர்கள் தமது எதிர்கால நிதிச் செயற்பாட்டை வெற்றிகரமாக முகாமை செய்துகொள்ள முடியும். மாறாத மாதாந்த தவணைக் கட்டணம் மூலம் உங்களுடைய செலவுகளைச் சிறந்த முறையில் திட்டமிடுவதற்கும் செலவுகளில் திடீர் அதிகரிப்பு ஏற்படாததை உறுதி செய்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.

நீண்ட கால மீளச் செலுத்துகை

உங்களுடைய கல்வி நடவடிக்கையை மேலும் தொடர்தல் நிதிச் சுமையாக அல்லாது முதலீடாக அமைய வேண்டும். பட்டதாரி மாணவர்கள் தமது பட்டப்படிப்பின் இறுதி நிலையை அடையும்போது நிதிக் கடன் சுமையால் அவதிப்படுவது பெரும்பாலும் நிகழ்கிறது. உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் கல்வி கற்பதற்கு ஏற்புடைய நமது கல்விக் கடனைக் கொண்டு உங்களுடைய கற்கை நெறியை நிறைவு செய்த பின்னர், உங்கள் உழைப்பைக் கொண்டு கடனை மீளச் செலுத்த ஆரம்பிக்கக் கூடிய வகையில் மீளச் செலுத்துவதற்கான 07 வருடகாலம் வழங்கப்படும்.

பரந்த வயதில்லை

கல்வியைப் பொறுத்தமட்டில் நீங்கள் 20 – 30 இடைப்பட்ட வயதுடைய ஒருவராக இருந்தால் மட்டுமே உயர்கல்வி பயில முடியும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. எவ்வாறாயினும், சமகால உலகில் நாம் அனைவரும் அனுதினம் கற்பவர்களாகவும், விருத்தி அடைபவர்களாகவும் இருப்பதால், ஒருவருக்கு கல்விக்காக நிச்சயக்கப்பட்ட ஒரு வயதெல்லை உண்டு என்ற விடயம் வலுவிழந்துவிட்டது. சமகாலத்தில் கல்விக் கடன் பெறுவதற்கு உரிய வயதெல்லை 18 – 55 வரை விரிவடைந்துள்ளது.

உங்கள் கற்கை நெறிக்கான கட்டணத்தில் 90 சதவீத தொகை வழங்கப்படுகிறது.

இத்தகைய அனைத்து விடயங்களையும் பகுத்தாய்வு செய்தால் கற்கைநெறிக் கட்டணத்தில் 90 சதவீதம் வரையான தொகை செலுத்தப்படுகின்றமை உங்களுக்கான மிகப் பெரிய நன்மையாகும். பல்பரிமாண, நெகிழும் தன்மை கொண்ட கல்விக் கடன் நீங்கள் பூரண இலக்கை அடைவதில் உதவியாக அமையும். நீங்கள் HNB FINANCE இல் “நெணசர கல்விக் கடன்” பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், உங்களுடைய எதிர்கால கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்க இன்றே எம்முடன் இணையுங்கள்.