இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, அண்மையில் சீதுவ பிரதேசத்தில் வசிக்கும் பார்வையற்ற 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை தனது பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு வேலைத்திட்டத்தின் (CSR) மூலம் விநியோகித்துள்ளது.
HNB FINANCEஇன் பிரதம மனித வள அதிகாரியும் மனித வள மற்றும் நிர்வாக பிரதிப் பொது முகாமையாளருமான ருவன் பெர்னாண்டோ மற்றும் பயிற்சி பிரிவு பொறுப்பதிகாரி அனுர உடவத்த மற்றும் பயிற்சி பிரிவு முகாமையாளர்களான சஞ்சய் சேனசிங்க மற்றும் நுவன் குமார ஆகியோர் தலைமையில் அண்மையில் இந்த நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.
HNB FINANCEஇன் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் தன்னார்வ நிதி பங்களிப்புடன் கட்டியெழுப்பப்பட்ட வேலைத்திட்டமான பெருநிறுவன சமூகப் பொறுப்பு அணுகுமுறை ஊடாக பல்வேறு சமூக நலன் வேலைத்திட்டங்கள் மூலம் சமூகத்திலுள்ளவர்களுக்கு தனது ஒத்துழைப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
HNB Finance தொடர்பில்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 70 கிளைகளை நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.