011 202 4848

வலைப்பதிவு

உங்களது புத்தம் புதிய சிறு வியாபாரத்திற்கு நுண் கடன் எவ்வாறு உதவும்?

கடன் என்பது எம்மை கடினமான நிதி நிலைமையிலிருந்து விடுவிக்கும் ஒரு கருவி. எவ்வாறாயினும், பாரம்பரிய தனிநபர் கடனை பெற்றுக் கொள்ளும்போது அதற்கான சில நெறிமுறைகள் காணப்படுவதோடு கடனை மீளச் செலுத்துவதற்கு சில வருடங்கள் ஆகலாம். எனினும், நுண்கடன் அதையொத்த நிதிக் கருவியாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் காலம் குறைவாக இருப்பதோடு கடுமையான நெறிமுறைகளை பின்பற்றவும் வேண்டும்.

நுண்கடன் எனப்படுவது யாது?

நுண்கடன் எனப்படுவது, ஒரு சிறு தொகையை குறுகிய ஒரு காலப்பகுதிக்கு ( இந்தத் தொகை கடன் வழங்குபரின் நிபந்தனைகள்படி தீர்மானிக்கப்படும்) கடனாக வழங்குவதாகும். அதனை குறுகிய காலப்பகுதியில் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். உங்களின் திருப்பிச் செலுத்தும் ஆற்றலுக்கமைய அந்தக் காலப்பகுதி 12 மாதங்கள் தொடக்கம் 24 மாதங்கள் வரையானதாக இருக்கலாம்.

பாரம்பரிய கடனுடன் ஒப்பிடும்போது இத்தகைய குறுகிய கடன் திட்டத்தில் காணப்படும் முக்கியமான வேறுபாடு குறுகிய காலப்பகுதியும் சிறு தொகையுமே.

நுண்கடன் எவ்வாறு செயல்படும்?

கடன் வழங்குபவரின் நிபந்தனைகளுக்கு இணங்க நுண்கடன் பல வழிகளில் செயல்படும். ஆகவே, HNB FINANCE கம்பனியால் வழங்கப்படுகின்ற திரிய நுண் கடன் திட்டத்தை இதற்கான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கடனை பெறுவதற்கு தகைமை உண்டா என ஆராய கீழுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • முறையாக கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள். (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ்)
  • நிரந்தர முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள். ( முகவரியை உறுதிப்படுத்தும் கட்டணப்பட்டியல்கள் அல்லது கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ்)
  • காசுப்பாய்ச்சல் மற்றும் கடனை மீளச் செலுத்தும் ஆற்றலை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.
  • சம்பந்தப்பட்ட உபகரணத்தை கொள்வனவு செய்வதற்காக சமர்பித்த விலைமனு மற்றும் மதிப்பீடுகள் ( உபகரணங்களை கொள்வனவு செய்ய கடன் பெறுவதாயின்.)

இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டதன் பின்னர் உங்களுக்கு நிபந்தனைகளுடன் அதிகபட்சமாக ஒரு மில்லியன் வரையான தொகை கடனாக வழங்கப்படும். இந்த நிபந்தனைகளில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வீதம், திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் ஏனைய கட்டணங்கள் அடங்கும். ( இது உங்களுக்கு கடனாக வழங்கப்படும் தொகை மற்றும் மீளச் செலுத்தும் ஆற்றலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.)

நுண் கடனின் பயன்கள் மற்றும் புதிதாக ஆரம்பிக்கும் சிறு வியாபாரத்தில் காணப்படும் நன்மைகள்

கடனாக சிறுதொகை வழங்கப்படுதல், மிளச் செலுத்தும் கால எல்லை மற்றும் கடன் செயலாக்கம் வேகமாக நடைபெறுவதால் வியாபாரங்களுக்கு இதனை வெற்றிகரமாக பயன்படுத்தலாம். உங்களுடைய வியாபாரம் புதிதாக ஆரம்பிக்கப்படும் சிறு வியாபாரமாக இருந்தால் இந்த கடன் வசதியை 04 விதமான நன்மைகளுக்காக பயன்படுத்தலாம்.

1. சரக்கிருப்பு மற்றும் பொருட்களைப் பராமரித்தல் – நிதி நெருக்கடிகள் மற்றும் நிரம்பலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உங்கள் புதிய வியாபாரத்தின் இருப்புகளை தக்கவைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படலாம். இந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு நீங்கள் நுண் கடனைப் பயன்படுத்த முடியும் என்பதுடன், அதன்மூலம் நிரம்பலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக உங்கள் வியாபாரத்தை மேற்கொள்வதற்கு அவசியமான சரக்குகளையும் பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியும். அதேபோல் உங்களுக்கு கிடைக்கும் சந்தைப்படுத்தல் வருமானத்தைக் கொண்டு கடனை மீளச் செலுத்தலாம்.

2.தொடக்க மூலதனத்தை முகாமைத்துவம் செய்தல் – இலாபம் கிடைக்கும் காலத்தில்கூட காசுப் பாய்ச்சலை ஊகிக்க முடியாது. உதாரணமாக உங்களுக்கு பணத்தேவை காணப்பட்டாலும், வாடிக்கையாளர் ஒருவரின் கொடுப்பனவில் தாமதம் ஏற்படுமானால் எச்.என்.பி பினான்ஸ் கம்பனி வழங்கும் “சஹன” போன்ற நுண் கடனை பெற்றுக் கொள்வதன் மூலம் துரிதமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு உங்களுடைய பிரச்சனைக்கு இலகுவில் தீர்வு காணலாம். வாடிக்கையாளர் குறித்த பணத்தை செலுத்திய பின்னர் நீங்கள் கடனை மீளச் செலுத்தலாம்.

3.சம்பளம் தொடர்பான ஆவணங்களைப் பேணுதல் – நீங்கள் ஆரம்பித்துள்ள புதிய வியாபாரத்தில் உங்கள் பணியாளர்களை எப்போதும் துடிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே தாமதமாக சம்பளம் வழங்குதல் பணியாளர்களின் மன உறுதியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு பணம் கிடைக்கும் வரை பணியாளர்களுக்கு சம்பளம் செலுத்துவதில் குறுகிய கால தீர்வாக நுண் கடனைப் பயன்படுத்தலாம். இத்தருணத்திலும் நுண் கடனை உங்கள் வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

4.தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்தல் – உங்கள் புதிய வியாபாரத்திற்கு குத்தகை வசதி பெறத் தகைமை இல்லாததால் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வது கடினமாக இருந்தாலும், நுண் கடன் மூலம் இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காணலாம். விலை உயர்ந்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மிகச்சிறந்த தீர்வாக எமது “திரிய” கடன் திட்டம் காணப்படுகிறது. இதில் நீங்கள் ஒரு மில்லியன் ரூபா வரையான தொகையை கடனாகப் பெறலாம்.

சுருக்கமாகக் கூறுவோமானால், உங்கள் குறுகிய கால நிதி நெருக்கடிகளைத் தீர்க்கும் மிகவும் பயனுள்ள நிதிக் கருவியாக நுண்கடன் காணப்படுகிறது. பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் அதேபோல் உங்களை நாடி வந்து வழங்கப்படும் பயிற்சிகள் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் காரணமாக HNB FINANCE கம்பனி உங்களுக்கு நுண் கடனுக்கான கூடுதல் அவகாசத்தை வழங்குகிறது.