011 202 4848

வலைப்பதிவு

உங்கள் வியாபாரக் கனவை நனவாக்கிக்கொள்ளுங்கள்

அடுத்தவர்களுக்காக உழைக்கும் இந்த உலத்தில், தங்களுக்காக உழைக்க வேண்டுமென்பதற்காக தணிச்சலான முடிவை எடுக்கின்ற, தனக்கென்று ஒரு தொழில்முயற்சியை ஆரம்பிப்பவர்களும் இருக்கின்றனர். நீங்கள் உங்களுடைய அவாவை நோக்கி பயணம் செய்யும்போது நாங்கள் உங்கள் கனவை புரிந்துகொண்டு அதற்கு உதவிக்கரம் நீட்டுவோம்.

புதிய வணிக உரிமையாளர்களை இலக்காகக் கொண்டு அவர்களின் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கடன் வரம்புகளில் சுயசக்தி மற்றும் அபிலாச போன்ற திட்டங்களைத் தெரிவு செய்ய முடியும். உங்களுக்குப் பொருத்தமான கடனைப் பெற விண்ணப்பிக்கும் முன்னர் நீங்கள் பின்வரும் விடயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

கடனைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு தொடர்பில் சரியான புரிதல் இருக்க வேண்டும்

இது ஒரு நேரடியான முடிவாக தென்படுகின்ற போதிலும், வியாபாரம் தொழில்முயற்சியை  ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. இடம், பொருள் இருப்பு, இயந்திரச் செலவுகள் (இருப்பின்) போன்ற தொடக்கச் செலவுகளும், அதன் பின்னர் வாடகை, குத்தகை ஊதியம் போன்ற தொடர்ச்சியான செலவுகளும் உள்ளன. ஆகவே, நிதி வசதிக்காக விண்ணப்பிக்கும்போது, உங்கள் தொழில்முயற்சியைத் தொடங்குவதற்காக திட்டவட்டமாக தேவைப்படுகின்ற கடன் தொகை எவ்வளவு என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளக் கூடிய வகையிலும், உங்கள் தொழில்முயற்சியை வெற்றி அடையும் வரை அதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ளக்கூடிய வகையிலும் உங்களுக்குரிய செலவுகள் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

புதிதாக தொடங்கவுள்ள தொழில்முயற்சிக்கான நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளும்போது கடன் வழங்கும் நிறுவனத்திற்கு குறித்த வியாபாரம் தொடர்பாக உறுதிப்படுத்திக்கொள்ள போதுமான தகவல்கள் இல்லாத காரணத்தினால் கடனை வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த வகையில் தேவையான ஆவணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

வியாபார திட்டத்தை தயாரித்துக் கொள்ளுங்கள்

புதிய தொழில்முயற்சியை ஒன்றை ஆரம்பிப்பதற்காக தெளிவான விபரங்கள் அடங்கிய வியாபார திட்டம் பிரதானமான ஆவணமாகும். உங்களுடைய வியாபாரத் திட்டத்தில் நிதி மற்றும் தர ரீதியான தகவல்கள் இருக்க வேண்டும். நிதித் தகவல்களில் எதிர்கால சந்தைப்படுத்தல், இலாபம், வருவாய், காசுப்பாய்ச்சல் போன்ற எதிர்வுகூறல்கள் அடங்க வேண்டும். தரமான தரவுகளின் நோக்கம் மற்றும் உங்களுடைய வியாபாரத்தால் நீங்கள் சந்தையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் பங்களிப்பு போன்ற விபரங்களும் அடங்க வேண்டும். எங்களுக்கு உங்கள் கனவு தொடர்பான புரிதலை ஏற்படுத்துங்கள்.

வியாபாரத்தை பதிவு செய்யுங்கள்

நிதி வசதிகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது உங்களுடைய வியாபாரம் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானது. வியாபார பதிவு என்பது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உங்களுடைய வியாபாரம் தொடர்பான தகவல்களை முறையாக வழங்கியுள்ளதையும், வியாபாரத்தை முன்னெடுப்பதற்காக அவசியமான அத்தாட்சிப்படுத்தல்கள், உரிமங்கள் மற்றும் அங்கீகாரம்  பெறப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.

தேவையான ஆவணங்கள் தயார் செய்துகொள்ளுங்கள்

வியாபார கடன்பெற அவசியமான ஆவணங்கள் நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடலாம். எனினும், எந்த ஒரு நிறுவனமும் எதிர்பார்க்கும் சில முக்கிய ஆவணங்கள் உள்ளன. அவற்றில், வங்கிக் கூற்று, வருமானக் கூற்று, உங்களுடைய தகைமைகள் மற்றும் அனுபவம் போன்ற விபரங்களும், நிதி எதிர்வுகூறல் பற்றிய தகவல்களும் அடங்கும்.

நீங்கள் கடனை பெற்றுக்கொள்ள தகைமை பெறுவீர்களா?

முதல் முறையாக தொழில்முயற்சியொன்றைத் தொடங்குவதற்கு கடன் பெறும்போது உங்களுடைய தனிப்பட்ட கடன் தரப்படுத்தல் சிறந்த மட்டத்தில் இருக்க வேண்டியது அவசியம். கடன் வழங்கும் நிறுவனம் அதனை மதிப்பீடு செய்யும். உங்களுடைய கடன் தரப்படுத்தல் சிறந்த மட்டத்தில் இல்லையெனின், அதை சிறந்த மட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுங்கள். கடனுக்கான அனுமதியைப் பெற இது பெரிதும் உதவியாக அமையும். அடுத்ததாக உங்களுக்கு வியாபார முன்னனுபவம் உண்டா என்பது ஆராயப்படும். உங்களுக்கு சில வருட கால வியாபாரம் முன்னனுபவம் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாகும். அதேபோல் வருடாந்த / மாதாந்த காசுப் பாய்ச்சலை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

கடன் வழங்கும் நிறுவனத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய வட்டியை உங்களால் செலுத்த முடியும் என்பதை வெளிப்படுத்துவதற்கும், உங்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் இது அவசியமாகும்

உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தெரிவு செய்யுங்கள்

நீங்கள் தொடங்க எதிர்பார்த்துள்ள வியாபாரத்தின் வகை மற்றும் உங்கள் தேவைக்கு அமைய கடன் வகை வேறுபடலாம். HNB FINANCE கம்பனி சிறிய அளவிலான தொழில்முயற்சிகளுக்கும், சிறிய அளவு தொடக்கம் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கும் பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கடன் வரம்பை உங்களுக்கு அளிக்கிறது.

சிறிய அளவிலான வியாபாரம்

ஈசி லோன்ஸ்

இந்த கடன் திட்டமானது வியாபாரிகளுக்கு அவசியமான அவசர தொடக்க மூலதனம் வழங்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது எளிமையான கடன் திட்டமாக காணப்படுவதோடு, இதன் மூலம் நீங்கள் துரிதமாக பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

அபிலாச

இந்த கடன் திட்டம் தமது வியாபாரத்தை தொடங்குவதற்கான கூடுதலான நெகிழ்வு மற்றும் கூடுதலான கடன் தேவைப்படுகின்ற ஆண் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களை இலக்காக கொண்டுள்ளது. இது புதிதாக தொடங்கும் வியாபாரத்தின் விருத்தி மற்றும் ஒத்துழைப்பு வழங்கலை நோக்கமாகக் கொண்ட சம்பந்தப்பட்டவர்களுக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு திட்டமாகும்.

சுயசக்தி

இந்த கடன் திட்டம், வியாபாரத்தை விரிவுப்படுத்த மேலும் நிதி வசதி தேவைப்படுகின்றன, சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் ‘திரிய’ வாடிக்கையாளர்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரம்

சவிய

சிக்கலின்றி தனது வியாபாரத்தை விரிவு படுத்திக் கொள்வதற்கும் விருத்தி செய்து கொள்வதற்கும் எதிர்பார்க்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான வகையில் இந்தக் கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

HNB FINANCE கம்பனி உங்கள் அருகில் வந்து அனைத்து கடன் சேவைகளையும் வழங்குகிறது. எந்தத் தடையுமின்றி உங்களுடைய கனவை நனவாக்கிக் கொள்வதற்காக, தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் விசாரணைகளுக்கு உதவ பயிற்றப்பட்ட எங்களுடைய பணியாளர் குழாம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது.