உயர்கல்வி என்பது ஒரு முக்கியமான படியாகும், இது ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடாகும். எந்தவொரு நபரும் எதிர்பார்க்கும் ஒரு அடிப்படை தகுதி இதுவாகும், ஆனால் அதற்கு அறிவு, ஆர்வம், கால நேரம் மற்றும் அர்ப்பணிப்பையும் விட இன்னும் பல தேவைப்பாடுகளும் உள்ளன. நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கல்வி இலக்குகளையும் எதிர்கால வெற்றிகளையும் அடைவது எப்போதும் எளிதான விடயம் அல்ல. உங்கள் உயர் கல்வி மற்றும் நிறுவன கட்டணம், மேலதிக வகுப்புக் கட்டணம் மற்றும் புத்தகக் கட்டணங்கள் ஆகியவற்றைச் செலுத்த உதவும் வகையில் கல்வி கடன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கல்விக் கடனை அறிமுகப்படுத்துவதன் மூலம், நிதித் தேவைகளைப் பற்றி கவலைப்படாமல் HNB FINANCE நிறுவனத்தினால் எதிர்காலத்திற்கான கதவைத் திறக்க முடியும். இலங்கை மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கும் பணியை அது முன்னெடுத்துச் செல்லுகின்றது.
எங்கள் கல்வி கடன் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர தேவையான நிதி உதவியை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. கடன் தொகை ரூ. 50,000 முதல் ஆரம்பித்து ரூ. 3,000,000, வரை பரந்துபட்டதாக உள்ளது இதன் மூலம் அதிகளவான உயர்கல்வித் திட்டங்களுக்கான அடிப்படை நிதித் தேவைகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது உத்தரவாதத் தேவைப்பாடுகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு பிணையாளர்கள் அல்லது பிணைக்கான ஆதனமொன்றை நீங்கள் முன்வைக்க வேண்டும்.
உயர்கல்வியைத் தொடர ஆர்வமுள்ள 18-55 வயதுக்குட்பட்ட எவரும் மாணவர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் பெற்றோருடன் இணைந்து கடன் பெற விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் அது இரு தரப்புக்கும் பலனைத் தரும்.
HNB FINANCE நிறுவனத்திடமிருந்து கல்விக் கடனுக்காக தகுதி பெறும் பொருட்டு நீங்கள் திருமணமாகாதவராயின் உங்கள் தேறிய வருமானம் ஆகக் குறைந்தது ரூபா. 30,000 ஆக இருக்க வேண்டும் என்பதுடன் திருமணமான விண்ணப்பதாரர் எனின் ஆகக் குறைந்த வருமானம் ரூபா. 40,000 ஆக இருத்தல் வேண்டும்.
மேலும், உரிய கல்வி நிறுவனம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, கல்வி அமைச்சு, அல்லது முதலீட்டுச் சபை போன்ற ஏனைய அரச நிறுவனங்கள் போன்ற உரிய அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படிருக்கும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் எனவும் HNB FINANCE நிறுவனம் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
இந்த கடன் திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, இலங்கையில் செயற்படும் பெரும்பாலான கல்வி கடன் வசதிகளைப் போல் இல்லாது, HNB FINANCE கல்வி கடன் திட்டத்தின் கீழ் தொடர்புடைய பாடநெறிக் கட்டணத்தில் 90% வரை செலுத்த வசதி செய்து கொடுக்கப்படுகின்றது. கடனைத் திருப்பிச் செலுத்தும் காலப் பகுதி 7 ஆண்டுகள் வரை நீடிக்க முடியும் என்பதுடன், மேலும் நீங்கள் மாதாந்தக் கட்டணம் ஒன்றையும் செலுத்த வேண்டும். இந்த நெகிழ்வான நடைமுறையின் ஊடாக ஒரே தடவையில் மொத்தமான தொகையை செலுத்த வேண்டிய கூடுதல் சுமையிலிருந்து உங்களை விடுவிக்கிறது. இலங்கையில் உள்ள மற்ற மாணவர் கடன் வட்டி விகிதங்களுடன் ஒப்பிடும்போது, அதிகமானோர்களுக்கு கடன் பெறக்கூடிய சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தி போட்டி வட்டி விகிதத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.