011 202 4848

வலைப்பதிவு

சேமிப்பு கணக்கு ஒன்றின் மூலம் பின்னடைவை முன்கூட்டியே திட்டமிடுதல்

ஒருவர் நிரந்தர நிதி நிலைமையை தக்க வைத்துக்கொள்வதற்கு சேமிப்புக் கணக்கு பலவழிகளில் உவுவதால் சமகாலத்தில் சேமிப்புக் கணக்கு மிக முக்கியமான நிதிக் கருவியாக மாறியுள்ளது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் காலப்பகுதியில் அதனை ஒரு வசதியாக பயன்படுத்த முடிதல் சேமிப்பு கணக்கொன்றின் பிரதான நன்மையாகும். எனினும், அதனை சாதுரியமாக பயன்படுத்தினால் மட்டுமே அந்த நன்மையைப் பெற முடியும். HNB FINANCE கம்பனியில் சாதாரண சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கும் உங்கள் தெரிவானது நீங்கள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உங்களைக் காக்கும் முக்கியமான கருவியாக மாறும். எதிர்காலத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் எனக் கருதும்போது, இலங்கையின் மிகச் சிறந்த நிதி கம்பனியின் உதவியுடன் சேமிப்பு கணக்கொன்றையும் பேணி எதிர்காலம் குறித்து திட்டமிடுவதற்கு பல வழிகள் காணப்படுகின்றன.

நிதிப் பாதுகாப்பு வலையாகச் செயற்படுதல்

குறிப்பாக, நீங்கள் கணக்கில் சேமித்துள்ள பணத்திற்கு இரண்டு முக்கிய தொழிற்பாடுகள் உள்ளன, அவையாவன முன்னெச்சரிக்கை நோக்கம் மற்றும் ஊக நோக்கம். வேறு சொற்களில் கூறுவதானால், அவசர நிலைமையில்  உங்கள் பணத்தை உடனடியாக நுகர்வுக்குச் செலவிடாமல் சேமிக்க விரும்புவது இயல்பானது. உங்கள் சேமிப்புக் கணக்கில் குறிப்பிடத்தக்க நிலையான தொகையைச் சேமிப்பதன் மூலம் உங்கள் உழைப்பின் எஞ்சிய தொகையை தொழிற்பாட்டு செலவுகளுக்காக பயன்படுத்தும் அதே நேரம், எதிர்காலத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுமானால் அதை முன்னிட்டு கூடுதலான தொகையை சேமிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து, உங்களுடைய வருமானம் குறைவடைந்துள்ள நிலையில் உங்களது சேமிப்புக் கணக்கு குறைந்தபட்சமாக உங்களுடைய தினசரி வாழ்க்கையின் தொழிற்பாட்டு செலவுகள் ஈடு செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு வலையாகச் செயல்படும். உங்களுடைய சேமிப்பு கணக்கு எந்நேரத்திலும் பாதுகாப்பானதாக இருப்பதால், அதைப் பயன்படுத்த முடியவில்லை என்ற கவலை அவசியமற்றது.

வியாபார வாய்ப்புகளுக்கான முதலீட்டுக் கருவி

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியை சந்திக்கும் தருணம் கிட்டுமானால் நீங்கள் உங்களுடைய சேமிப்பு கணக்கை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் ஊடாக சிறப்பான வியாபாரத்திற்கான முதலீட்டைச் செய்ய முடியும். நுகர்வோரின் பொருட்களுக்கான சந்தை பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுகின்ற காலத்தில் அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைவதோடு, அதில் உணவு மற்றும் வேறு உற்பத்திகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் முக்கியமானவை. மேலதிக சேமிப்பின் மூலம் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் நுகர்வோர் பொருள் சந்தையில் கட்டாயமாக ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கான முதலீட்டை மேற்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிட்டும். ஆகவே, இதனை கஷ்டமான ஒரு காலப்பகுதியில் வருமானத்தை ஈட்டுவதற்கான வழியாக மட்டுமன்றி அதிகமானோருக்கு நன்மைபயக்கும் விதத்திலும் பயன்படுத்த முடியும்.

வட்டி மூலம் நிரந்தர வருமானம்

பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்கூட, நீங்கள் நிரந்தர வருமானமாக அமையும் கவர்ச்சிகரமான வட்டிக்குச் சொந்தக்காரராக இருப்பது HNB FINANCE கம்பனியில் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிப்பதால் கிடைக்கும் விசேட நன்மையாகும். சேமிப்பு கணக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மீதியை வைத்திருப்பவர்களுக்கு நாம் 6 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை வழங்குவதுடன், எதிர்காலத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படக்கூடுமெனக் கருதுவீர்களானால் அது உங்களுக்கு திருப்தியான வருமான மார்க்கமாக தொழிற்படும். வேறு விதமாக கூறுவோமானால், நீங்கள் இன்று அதிகமாக சேமிப்பதால் உங்களின் இரண்டாவது வருமான மார்க்கமாக அது அமைவதோடு நெருக்கடியான காலங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கு உங்களை தயார்ப்படுத்தும்.

தளரவற்ற வாழ்க்கை முறைக்கு உகந்த கருவி

HNB FINANCE கம்பனியில் சாதாரண சேமிப்புக் கணக்கொன்றை வைத்திருக்கும்போது, நீங்கள் வாழ்க்கைச் செலவுக்காக எவ்வளவு தொகையை செலவிட வேண்டும் என்பதை தீர்மானிக்க அது உங்களுக்கு உதவும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக உங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தப்படும். ஆகவே, நீங்கள் அந்த குறுஞ்செய்தியை வாசிப்பதன் மூலம் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள காலத்தில் எந்த கொடுக்கல்-வாங்கல் மிகவும் முக்கியமானது என்பதையும், எந்த கொடுக்கல் வாங்கலை தவிர்க்கக் கூடாது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அதன்மூலம், பொருளாதாரம் சீரற்ற நிலையிலும் பாதிப்புமின்றி உங்களால் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள முடியும். வேறு விதமாகக் கூறுவதானால், சேமிப்புக் கணக்கு நெருக்கடியான காலத்திலும் சீரான வாழ்க்கை முறையைப் பேண உங்களுக்கு உதவும்.

HNB FINANCE கம்பனியின் சாதாரண சேமிப்புக் கணக்கானது நீங்கள் பாடுபட்டு உழைத்த பணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மாத்திரமின்றி பொருளாதார வீழ்ச்சி போன்ற நெருக்கடிகளில் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும் கருவியாகவும் செயலாற்றும்.