புதிதாக தொடங்கப்படும் வியாபாரம் என்பது எவருக்கும் ஒரு இலட்சியத் திட்டமே. நேரத்தையும் பணத்தையும் எடுத்துக் கொண்டால் அதற்கு கடுமையான முயற்சி தேவைப்படுகிறது. அனேகமான சந்தர்ப்பங்களில் நேரத்தை செலவு செய்வதற்கு நபர்கள் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு போதுமான நிதி உதவி கிடைப்பதில்லை. ஆனால் அவர்களில் இலட்சியம் உண்டு.
இன்றைய உலகில் நீங்கள் புதிதாக தொடங்கும் வியாபாரத்திற்குத் தேவையான நிதியைப் பெற பல வழிகள் காணப்படுகின்றன. அவற்றில் பிரபலமான நான்கு வழிகள் இங்கு தரப்படுகின்றன.
நுண்கடன் திட்டமானது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த கடனுக்கான நிபந்தனைகள் தளர்வானவையாக இருப்பதுடன், இதுபோன்ற வங்கிக் கடன் திட்டங்களுக்கு பொதுவாக தொழில் முயற்சியாளர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய சிறிய ஒரு தொகையும் அடங்கும்.
எச்.என். பி பினான்ஸ் கம்பனியால் வழங்கப்படும் “திரிய நுண் கடன்” புதிதாக தொடங்கும் வியாபாரங்களுக்கு மிகச்சிறந்த மாற்றுத் தெரிவாகும். இந்தச் சிறுகடன் திட்டத்தினால் உங்களுக்கு சிரமமின்றி ரூபா 50,000 தொடக்கம் 300,000 வரையான தொகையைப் பெற முடியும். அதேபோல், குறைந்த வட்டி வீதத்தின் பயன்களும் உங்களுக்கு உண்டு. நீங்கள் வாரா வாரம் அல்லது மாதாந்த அடிப்படையில் கடனை திருப்பி செலுத்த முடிவதுடன், கடனை திருப்பிச் செலுத்த 24 மாதங்களை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக் கடன் திட்டங்கள் மூலம் கூடுதலான தொகையை பெற முடிவதோடு நுண் கடனுடன் ஒப்பிடும்போது இதற்கு நிபந்தனைகள் அதிகம். HNB FINANCE கம்பனி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு உதவும் வகையிலும் சிறு வியாபார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் இந்தக் கடனை வழங்குகிறது.
அவசர தொடக்க மூலதனம் தேவையாக உள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமான சிறு வியாபாரக் கடன் திட்டமாக எங்களுடைய ஈசி லோன் திட்டம் காணப்படுகிறது. இதன் கீழ் நீங்கள் அதிகபட்சமாக 10 மில்லியன் ரூபாவை கடனாகப் பெறலாம். தேவையான நிதியை குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இந்தக் கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் தொழில் முயற்சியாளர்கள் தங்களுடைய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கலாம். நெகிழ்வுத்தன்மை கொண்ட கடன் மீள செலுத்தல் மற்றும் போட்டி வட்டியுடன் வீடு தேடி வந்து உங்களுக்கான சேவை வழங்கப்படும். இதற்கான ஆவணங்களை மிகவும் எளிதாக பெற்றுக்கொள்ளமுடியும். எமது சுயசக்தி கடன் திட்டத்திலும் இதற்குச் சமமான சேவை வழங்கப்படுவதோடு தளர்வான நிபந்தனைகள் மற்றும் நெறிமுறைகள் கொண்ட அத்திட்டத்தில் குறைவான தொகையை கடனாகப் பெற முடியும்.
எமது சவிய கடன் திட்டம் தங்களுடைய மூலதனம் மற்றும் தொழிற்பாட்டு அளவை அதிகரித்துக் கொள்ள எதிர்பார்க்கும் அதேபோல், புதிதாக ஆரம்பித்துள்ள வியாபாரத்தை இலக்காகக் கொண்டுள்ளது. எங்களுடைய சிறு கடன் திட்டம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடன் திட்டங்கள் மூலம் பயிற்சி பெற்ற எமது பணியாளர்கள் உங்களுடைய தேவைக்கு ஏற்றவகையில் உங்களை நாடி வந்து குறைந்த அளவிலான ஆவணங்களைச் சமர்ப்பித்து நிதியைப் பெற்றுக் கொள்ள உதவுவார்கள். இதற்கு மேலதிகமாக 05 வருடங்கள் வரையான நெகிழ்வான மீளச் செலுத்தல் காலத்துடன் அதிகபட்சமாக 20 மில்லியன் தொகையை கடனாக பெற்றுக் கொள்ள முடியும். தங்கள் கைத்தொழிலில் திடமான ஒரு நிலையை அடய எதிர்பார்க்கும் தொழில் முயற்சியாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.
புதிதாக ஆரம்பித்த சிறு வியாபாரத்தை எடுத்துக் கொண்டால், தேவையான பணத்தை திரட்டுவதற்காக தொழில் முயற்சியாளர்கள் ஏற்கத் தயாராகும் இடர் வரவு மிகவும் முக்கியமானது. எவ்வாறாயினும், எல்லா சந்தர்ப்பங்களிலும் அத்தகைய இடம் வரவு மதிப்பீடு செய்யப்படும்.
முதலீட்டாளர்களை கண்டுபிடித்தல் அதுபோன்ற இடர் வரவைக் குறைத்துக் கொள்ளும் புதுவித வழிமுறையாக உள்ளது.” பணத்தால் உதவும் முதலீட்டாளர்கள்” என சில சந்தர்ப்பங்களில் அறியப்படுகின்ற இந்த நபர்கள் அல்லது கம்பனிகள் தொடக்க வியாபாரம் ஊடாக பல்வேறு கைத்தொழில்களில் பல்வகைப்படுத்தலை எதிர்பார்ப்பதுண்டு. எதிர்காலத்தில் இலாபத்தில் ஒரு பங்கை ஈட்டும் நோக்கத்துடன் வியாபாரத்திற்கான நிதி வசதிகளை வழங்குதல் அவர்களின் நோக்கமாகும். அதனை ஒரு கடனாக நினைத்துக் கொள்ளுங்கள். வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை செலுத்துவதற்குப் பதிலாக அந்த முதலீட்டாளர்களுக்கு உரித்தின் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்.
குறிப்பாக, நீங்கள் உங்களுடைய புதிய வியாபாரத்தை ஆரம்பித்தவுடன் உங்களுடைய தொலைநோக்குடன் ஒத்த தொலைநோக்கினை உடைய ஒரு முதலீட்டாளரைக் கண்டறிதல் கடினமாக இருக்கலாம். நீங்கள் அவர்களுடன் சரியான நிபந்தனைகள், விதிகளை அமைத்துக்கொள்ள ஆய்வில் ஈடுபடவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.
கூட்டாக நிதியிடல் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு வியாபாரத்தின் இடர் வரவை குறைத்துக் கொள்ளும் புதிய வழிமுறையாகும். சிலரின் நிதி கிடைப்பதால் இது உங்களின் சாதாரண முதலீடு அல்ல. இத்தகைய நிதி சிறு அளவிலும் காணப்படலாம்.
கூட்டாக நிதியிடுபவர்கள் நீங்கள் புதிதாக ஆரம்பிக்கும் வியாபாரத்தில் எவ்வித கட்டுப்பாட்டையும் மேற்கொள்ளாமை அதன் இடர் வரவை குறைக்க உதவும். எனினும், உற்பத்தியை மேற்கொள்ளும்போது அவர்கள் ஒருவித சன்மானத்தை அல்லது வெகுமதியை எதிர்பார்ப்பார்கள். நீண்ட காலம் தேவைப்படுதல் இதுபோன்ற நிதியிடலில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடாக உள்ளது. அதுமாத்திரமின்றி, உங்களுடைய உற்பத்தி எந்த அளவுக்கு புதிதானது என்பதை சாமானியனுக்கு எடுத்துக் காட்டுவது சிரமமாக அமையலாம்.
நீங்கள் புதிதாக ஆரம்பிக்கும் வியாபாரத்திற்கான பணத்தை பெற்றுக்கொள்ள மேலும் சில வழிகள் உள்ளன. எவ்வாறாயினும், நீங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட தீர்வுகளை தேடும் ஒருவரானால் மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. நீங்கள் வியாபாரக் கடனை பெற எதிர்பார்க்கும் ஒருவராயின் எங்களுடைய திட்டங்களை பரிசீலித்துப் பார்க்கலாம். எது எப்படியாயினும், நீங்கள் உங்களுடைய வியாபாரத்தில் வெற்றி அடைய வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.