011 202 4848

வலைப்பதிவு

புதிய ஆண்டுக்கான 5 நிதி இலக்குகள்

புதிய ஆண்டு, புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் அடைய வேண்டிய புதிய இலக்குகள். ஆம், முன்னைய ஆண்டு உலகளாவிய தொற்றுநோய் தொடர்பான தடைகள் நிறைந்த ஆண்டாக இருந்திருக்கலாம், இது உங்கள் இலக்குகளை அடைந்து கொள்ளுவதற்கு மிகவும் கடினமான விடயமாக அமைந்திருக்கலாம்.இருப்பினும், புதிய ஆண்டிற்கான சிறந்த நிதி திறன்களைத் திட்டமிடுவதற்கான ஒரு படிப்பினையாக இதைக் கருதுங்கள். உங்கள் சம்பந்தமான விடயங்களை எளிதாக்குவதற்கு புதிய ஆண்டில் நீங்கள் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டிய ஐந்து நிதி இலக்குகள் இங்கே காட்டப்பட்டுள்ளன.

வரவு செலத் திட்டத்தை ஆரம்பியுங்கள்

புதிய ஆண்டிற்கான முதல் குறிக்கோள் உங்கள் செலவினங்களை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளுவதாகும். பலருக்கு வருமானம் கிடைத்தவுடன் செலவு செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.  இது மோசமான நிதி ஒழுக்கத்தைக் காட்டும் ஒரு பழக்கமாகும்.

நம்முடைய தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தேவைகளுடன் நிதி ஒழுக்கத்தைப் பேணுவது மிகவும் கடினமான பணியாகும். எவ்வாறாயினும், ஒரு நிதித் திட்டத்தை வைத்திருப்பது உங்களுக்கு அதிக பொறுப்புள்ள நபராக மாற உதவும், மேலும் நீங்கள் திட்டமிட்டபடி நீங்கள் வாழாதபோது அதிக பொறுப்பை உணர வைக்கும். உங்கள் வரவு செலவுத் திட்டத்தை மாதாந்த அல்லது வருடாந்த அடிப்படையில் திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

கடன்களை அடைத்து, எதிர்காலத்தில் கடன் பெறுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்

தொற்று நோய் காலத்தின் போது உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.. உலகம் படிப்படியாக மீண்டு வருகிறது, ஆனால் கடனாளியாவது தொடர்பில் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது தொடர்ந்தும் கவலையடைவதையும் விடுத்து பாதுகாப்பான நிலையில் இருப்பது நல்லது.

உங்கள் கடன்களை துரிதமாகச் செலுத்தும் வகையில் உங்கள் வரவு செலவுத் திட்டத்தை திட்டமிடுங்கள். இது வீட்டுக் கடன், தனிநபர் கடன் அல்லது வாகன லீசிங் கடன் என இருந்தாலும், அவற்றை திருப்பிச் செலுத்துவதற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். உங்கள் வருமானத்தை இந்த வழியில் செலவிடுவதன் மூலம் பிற தயாரிப்புகளை கொள்வனவு செய்வதற்கு நீங்கள் செலவிடக்கூடிய வருமானத்தை அடையாளம் காண உதவும். மேலும், உங்கள் நிதிகளைத் திட்டமிடுங்கள், இதனால் உங்களுக்கு முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

அதிகமாகச் சேமிக்கவும்

மக்களின் தேவைகள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், இன்றைய உலகில் நீங்கள் செய்யக்கூடிய மிகக் கடினமான காரியங்களில் ஒன்று பணத்தை சேமிப்பதாகும். அதிகதிகமாக சேமிக்க ஒரு சிறந்த வழி, உரிய உற்பத்திகளுக்காக நீங்கள் உண்மையிலேயே பணத்தை செலவிட விரும்புகிறீர்களா என்று நீங்களே  உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

சேமிப்பை அதிகரித்துக் கொள்ள மற்றொரு வழி HNB பினான்ஸ் சேமிப்பு கணக்கு ஒன்றை ஆரம்பித்து  அந்தக் கணக்கின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் கைத்தொலைபேசி குறுந் தகவல் அறிவிப்பை (mobile alerts)  செயல்படுத்துவதாகும். அது உங்கள் நினைவூட்டல்கள் உங்கள் பொருட் கொள்வனவுகளில் அதிக அக்கறை செலுத்த உதவும்.  ஒவ்வொரு மாதமும் உங்கள் சேமிப்பை அதிகரிக்கக் கூடிய எச் என் பி பினான்ஸ் நிறுவனத்தின் சேமிப்புக் கணக்கில் சிறந்த வட்டி விகிதங்களும் அடங்கும்.

செலவழித்த ஒவ்வொரு சதத்தையும் கணக்கிடுங்கள்

நீங்கள் உங்களது வரவு செலவுத் திட்டத்துக்கு அமைவாக செயற்படுகின்றீர்களா இல்லையா என அறிந்து கொள்ளுவதற்கு முடியுமானவாறு புதிய ஆண்டுக்கான உங்களது கணக்கியல் ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். விசேட கணக்கியல் உள்ளீடுகள் மற்றும் மென்பொருள் (apps and software) போன்ற மாற்று வழி முறைகள் உள்ளதால் பதிவேடு ஒன்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு  ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலையும் எழுத வேண்டிய அவசியமில்லை. இந்த மாற்றுத் தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி, ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள், எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பது தொடர்பில் துல்லியமான மதிப்பீடுகளைப் பெற முடியும்.

மேலும் பயன்பாட்டு சேவைகள் மற்றும் வரிகளுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தின் அளவையும் நீங்கள் அடையாளம் காண முடியும். அனைத்து வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பில் கணக்கியல் செயற்பாட்டை மேற்கொள்ளுவதன் மூலம் அவசர நிலைமையில் மற்றும் பிற முக்கியமான சந்தர்ப்பங்களுக்கும் பணத்தை ஒதுக்கிக் கொள்ள உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

முதலீடு செய்யத் தொடங்குங்கள்

முதலீட்டின் மூலம் புதிய ஆண்டிற்கான இரண்டாவது வருமான வழியை உருவாக்கும் இலக்கை அமைத்துக் கொள்ளவும். அது ஒரு புதிய வணிகமாக இருந்தாலும், நண்பரின் வணிக நடவடிக்கையை தொடங்கினாலும், பங்குச் சந்தையாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு நிலையான வைப்புத்தொகையாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நேர்மறையான முதலீட்டு நன்மையைப் (ROI) பெறக் கூடியதான சாத்தியம் உண்டு.

நீங்கள் செய்யக்கூடிய பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்று HNB பினான்ஸ் நிறுவனத்தில் ஒரு நிலையான வைப்பை ஆரம்பிப்பதாகும். எங்கள் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் மூலம் உங்கள் முதலீட்டில் அதிகபட்ச நன்மையைப் பெறுவதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றன. நீங்கள் மாதாந்த, வருடாந்த அல்லது முதிர்வு அடிப்படையில் வட்டியைப் பெற முடியும். நீங்கள் அதிக எச்சரிக்கைமிக்க முன்முயற்சிகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தால், பங்குச் சந்தை அல்லது புதிய தொழிலைத் தொடங்குவது ஒரு சிறந்த மாற்றுவழியாகும்.

இப்போது உங்களிடம் உள்ள அறிவு ஆற்றலின் மூலம், உங்கள் நிதி இலக்குகளை மிகச் சிறந்த முறையில் வினைத்திறன் வாய்ந்தவாறு திட்டமிடலாம் மற்றும் புதிய ஆண்டின் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.