011 202 4848

செய்திகள்

2021/22 நிதியாண்டின் முதல் பாதியில் வலுவான நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது HNB FINANCE PLC

HNB FINANCE PLC 2021 செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 2021/22 நிதியாண்டிற்கான முதல் பாதியில் வழங்கப்பட்ட அதன் இடைக்கால நிதி அறிக்கையின்படி, வலுவான நிதி செயல்திறனை பதிவு செய்ய முடிந்ததுள்ளது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் HNB FINANCEஇன் வரிக்கு முந்தைய இலாபம் 243.5 மில்லியன் ரூபாவாகவும், வரிக்குப் பிந்தைய இலாபம் 167.5 மில்லியன் ரூபாவாகவும் இருந்தது. நிறுவனத்தின் இலாபம் ஆண்டுக்கு ஆண்டு 151.07% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் நிகர வட்டி வருமானம் 62% உயர்ந்து 1.9 பில்லியன் ரூபாவாக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.2 பில்லியன் ரூபாவாக இருந்தது.

HNB FINANCE இனால் அறிக்கை வெளியிடப்பட்ட வலுவான நிதிச் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த HNB FINANCE PLCஇன் தலைவர் டில்ஷான் ரொட்ரிகோ, “கடந்த ஆறு மாதங்களில் எங்களின் அர்ப்பணிப்புள்ள நிதியியல் நிபுணர்களின் வலுவான நிதி செயல்திறனை பதிவு செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிதியாண்டின் வரவிருக்கும் மாதங்களில் இந்த வளர்ச்சியை நம்பிக்கையுடனும் மேலும் தைரியத்துடனும் தொடர எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் எங்களது 70 கிளை வலையமைப்பினால் காட்டப்படும் அர்ப்பணிப்பு தொடரும் என்பது எங்கள் நம்பிக்கையாகும்.” என தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் HNB FINANCEஇன் நிதிச் செயல்திறன் கடுமையாக சவால்களை எதிர்கொண்டதுடன், மேலும் குறிப்பாக கோவிட் தொற்றுநோய் பரவுவது நுண்நிதி பொருளாதார நடவடிக்கைகளில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் HNB FINANCE இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் பின்னணியில் அதன் இலாபம் மற்றும் நிதி செயல்திறனை ஒரு நேர்மறையான நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

தொற்றுநோயின் மூன்றாவது அலையை எதிர்கொண்டு ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 30 வரை நான்காவது முறையாக கோவிட் காரணமாக நாடு முடக்கப்பட்டதுடன், மேலும் இந்த நிலைமை இரண்டாவது காலாண்டில் HNB FINANCEஇன் செயல்திறனை மோசமாக பாதித்தது. குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகை காலம் (Moratoriums) ஒரு காலாண்டு மற்றும் பாதிக்கு 7% உம் மற்றும் ஆண்டுதோறும் 26% வளர்ச்சியடைந்த தேய்மானம் மற்றும் பிற இழப்புகள், இந்தக் காலகட்டத்தில் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த சவால்களுக்கு மத்தியில், HNB FINANCE இன் சேவை போர்ட்ஃபோலியோ வலுவான செயல்திறனைக் காட்டியதுடன் குறிப்பாக, நிறுவனத்தின் தங்கக் கடன் சேவையானது, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 128% வளர்ச்சியுடன், 91 மில்லியன் ரூபா இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.

“வாடிக்கையாளர் தேவைகளில் அதிக கவனம் செலுத்தும் ஒரு நிதி நிறுவனமாக, எங்கள் முதன்மையான நிதிச் சேவைகளை டிஜிட்டல் ஸ்பேஸில் மிகவும் நடைமுறையான விதத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கோவிட் தொற்றுநோயால் நாடு மூடப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட மிக இலகுவாகவும் துரிதமாகவும் நிதித் தீர்வுகளளுடன் வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இது நாம் எடுத்த நேர்மறையான நடவடிக்கைகளின் வெற்றிகரமான நிதிச் செயல்திறன் நன்கு பிரதிபலிக்கிறது. அனைத்து சுகாதார வழிகாட்டிகளும் முறையாக பராமரிக்கப்படுவதையும், கோவிட் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதையும் உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என HNB FINANCEஇன் மமமுகாமைத்தததுவப் பணிப்பாளரரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பீ.எம்.டீ,சீ. பிரபாத் தெரிவித்தார்.

HNB FINANCE, நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரமடைவதால், கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு செய்தது போல், எதிர்கால நிதி மற்றும் இலாபத்தில் சாதகமான வளர்ச்சியை நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று கணித்துள்ளது. அடுத்த 6 மாதங்களில், ஒரு கடுமையான திட்டம் நிறுவனத்தின் வணிக நடைமுறைகளை மாற்றும் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கடுமையான உடல்நலம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.