புதுவருடம் என்றவுடன், இலக்குகளை அமைத்துக் கொள்வதற்கான காலம் கைகூடி வருகிறது என்பார்கள். எமக்கு எமது தொழில், ஆரோக்கியம், தகுதி மற்றும் பழக்கவழக்கங்களுடன் சம்பந்தப்பட்ட இலக்குகள் காணப்படுவது சாதாரணமானது. ஆனால், புதிய வருடத்தில் தங்களுடைய திடசங்கற்பத்திற்கு நிதித் திட்டங்களை சேர்த்துக் கொள்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.
உங்களுடைய நிதி நிலைமை உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிப்பதால் நீங்கள் ஒவ்வொரு வருடமும் நிதி ரீதியான திடசங்கற்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை உங்கள் நிதி நிலைமை முன்னேற்றத்தின் தொடக்கப்புள்ளி என்றும் சொல்லலாம்.
உங்களின் தொடக்கத்திற்காக புது வருடத்தில் நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய நிதி ரீதியான 06 திடசங்கற்பங்களை இங்கு தருகின்றோம்.
பிரதானமாக உங்கள் உழைப்பை சேமியுங்கள். பணத்தை சேமிப்பது உங்களுடைய நிதி நிலைமையை உயர்த்துவதற்குச் சிறந்த உபாயமாகத் தென்படலாம். சேமிப்புக் கணக்கு ஒன்றை வைத்திருப்பதன் மூலம் உங்களுடைய பணத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை அதில் சேமித்து அதனை அவசர தேவைக்கான நிதியாக பயன்படுத்தலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனத்தில் சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் உங்களுடைய செலவை குறைத்து வங்கி அட்டை முறை கோட்பாட்டைப் பின்பற்றலாம்.
எச்.என்.பி பினான்ஸ் கம்பெனி இலவில் உங்களுடைய சேமிப்பை பேணக்கூடிய மற்றும் உங்கள் சேமிப்யை இலகுவாக அணுகக்கூடிய சாதாரண சேமிப்புt கணக்கு ஒன்றை வழங்குகிறது. இந்த கணக்கின் மூலம் உங்களுடைய நாளாந்த மீதியை அடிப்படையாகக்கொண்டு போட்டி நிலை சேமிப்பு கணக்கு மீதான வட்டி கணிக்கப்பட்டு, அது மாதாந்தம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
உங்களுடைய செலவுப் பழக்கம் தொடர்பான குறிப்பு ஒன்றைப் பேனுதல் நிதித் திட்டமிடலில் முதல் படிமுறையாக இருப்பதோடு, அதை ஆரம்பிப்பதற்கான மிகச் சிறந்த தருணம் புதிய வருடத்தின் தொடக்கம்தான். நீங்கள் எதற்காக அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பதை ஆய்வு செய்யுங்கள். அது உணவகம் சென்று உணவு உண்பதற்கான அல்லது அங்காடிகளுக்கு செல்வதாகக் கூட இருக்கலாம். எங்கே பணம் செலவாகிறது என்பதை கண்டறியுங்கள். நீங்கள் பங்களிப்பு தொகை செலுத்தும் சேவைகளை ஆராயுங்கள். பெரும்பாலும், சஞ்சிகைகளுக்கான பங்களிப்புத் தொகையில் தொடங்கி இணையம் வரை நாம் தொடர்ந்தும் பயன்படுத்தாத சேவைகளுக்காக பங்களிப்புத் தொகையைத் செலுத்துகிறோம்.
பணத்தை தவறாக முகாமைத்துவம் செய்தல் நிதி உறுதிப்பாட்டை இழப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது. உங்களுடைய செலவுப் பழக்கத்தை ஆய்வு செய்வதால் தேவையற்ற செலவுகளை குறைத்து, கைவிடக்கூடிய செலவுகளை இலகுவாக கைவிட முடியும்.
உங்கள் செலவுகளுக்காக வாராவாரம் அல்லது மாதாந்தம் வரவு செலவு திட்டத்தை தயாரியுங்கள். வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொல்லையாக அமைந்தாலும், நீங்கள் செய்யும் செலவுகளை அறிந்துகொள்வதற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, உங்கள் பணம் எங்கு செல்கிறது என்பதை தீர்மானிக்கவும் உதவுகிறது.
விபரமான ஒரு வரவு செலவுத் திட்டமானது செலுத்தவேண்டிய கூலிகள், பயன்பாட்டு விலைப்பட்டியல்கள் மற்றும் பலசரக்குப் பொருட்கள் போன்ற நிரந்தரச் செலவுகளைக் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். செலவுகளை அடிப்படையாக வைத்து பொழுதுபோக்கு மற்றும் உணவகங்களில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பணத்தை ஒதுக்கலாம். வரவு செலவுத் திட்டம் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வதற்காக வழிகாட்டுகிறது. 50-20-30 என்ற வரவு செலவுத்திட்ட விதிக்கு அமைய, நீங்கள் உங்களுடைய வருமானத்தில் 50 சதவீதத்தை அத்தியாவசியப் பொருட்களுக்காகவும், 30 சதவீதத்தை அத்தியாவசியமற்ற பொருட்கள் அல்லது தேவைகளுக்காகவும், 20 சதவீதத்தை சேமிப்புக்காக ஒதுக்க வேண்டும்.
முதலீடு உங்களுடைய பணத்தை பாதுகாப்பான ஓரிடத்தில் வைப்பதற்கும், அதனை அதிகரித்துக் கொள்ளவும் உதவுகிறது. முதலீட்டை தொடங்குவதற்காக உங்களுக்கு பங்குச்சந்தை பொருளாதாரம் பற்றிய அறிவு இருக்க வேண்டும் என்றில்லை. நிலையான வைப்பு முதலீட்டை தொடங்குவதற்கான மிகச்சிறந்த தெரிவு ஆகும்.
நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதம் வங்கிகளின் சாதாரண வட்டி வீதத்தை விடவும் மிக மிக அதிகமானது. அனேகமான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நிலையான பைப்பு வசதிகளை வழங்குவதால், அதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை தெரிவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். HNB FINANCE நிலையான வைப்பு லையான வாய்ப்பானது அவசரமான ஒரு நிலையில் உங்கள் பணத்தை மீளப்பெற வேண்டியிருந்தால், உங்களுடைய நிலையான வைப்பின் பேரில் கடன் பெறும் வசதியையும், மிகச்சிறந்த வட்டிவீதம் மற்றும் முதிர்வின்போது துரிதமாக இலகுவாகவும் பணத்தை மீளப் பெறுவதற்கான வசதியையும் வழங்குகிறது.
உலக அளவில் கடன் அட்டை கடன்கள் அதிகரித்துச் செல்வதோடு அந்தப் பொறிக்குள் அகப்படாமல் இருப்பதற்கு உங்களுக்கு பல வழிகள் உள்ளன. உங்கள் வசம் அநேகமான கடன் அட்டைகள் இருந்தால் அவற்றுக்கான கொடுப்பனவுகளை முழுமையாக செலுத்திவிட்டு, உங்கள் பாவனைக்காக ஒரேயொரு கடன் அட்டையை மட்டும் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேபோல் உங்கள் வசமுள்ள கடன் அட்டையின் கடன் எல்லை முடிவுக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய கடன் அட்டை ஒன்றைப் பெற்றுக் கொள்வதை தவிருங்கள். அது உங்களை கடன் நெருக்கடிக்குள் தள்ளிவிடும்.
உங்கள் கடன் எல்லையின் உச்சப் பயனை பெறுவதற்கு எல்லா நேரங்களிலும் கடன் அட்டையின் விலைப்பட்டியலை உரிய நேரத்தில் செலுத்துங்கள். நீங்கள் செலுத்தும் விதத்தைக் கொண்டு உங்களுக்குரிய கடன் புள்ளிகள் தீர்மானிக்கப்படுவதால், நீங்கள் உரிய நேரத்தில் உங்களுக்குரிய மீதியை செலுத்துவது மாத்திரமன்றி மீதி முழுமையாக செலுத்தப்படுவதையும் உறுதி செய்யுங்கள். ஒவ்வொரு மாதமும் சீராக கொடுப்பனவுகளை மேற்கொள்ளும்போது நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி அல்லது மேலதிக கொடுப்பனவை குறைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. உங்களால் முழுமையாக செலுத்த முடியாவிட்டால், அதற்கான தாமத கட்டணம் மற்றும் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். அதனைத் தவிர்க்க வேண்டுமானால் உரிய நேரத்தில் கொடுப்பனவைச் செலுத்த வேண்டும்.
கல்விக் கடனாக அல்லது வீட்டை அடமானம் வைத்து பெற்ற கடனாக இருந்தாலும், உங்களது பெயரில் பெற்றுள்ள கடனை துரிதமாக செலுத்தி முடிப்பதற்கு முன்னுரிமை அளியுங்கள். உங்களுக்கு கடனிலிருந்து முழுமையாக மீள முடியாவிட்டால் செலுத்த வேண்டியுள்ள மீதியையதவது குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் அதைச் செய்ய சில அர்ப்பணிப்புகளைச் செய்யவேண்டும். செலுத்தவேண்டிய கடன் தொகையை குறைத்துக்கொள்ள நிதித் திட்டமிடல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அது ஒவ்வொரு மாதமும் ஓரளவுக்கு அதிகமான தொகையை செலுத்துவதற்கான தொடக்கமாக அமையக்கூடும். இது காலத்தை மட்டுமன்றி கடன் தொகைக்கான காலத்தையும் குறைத்துக்கொள்ள உதவலாம்.
புத்தாண்டில் இத்தகைய திடசங்கற்பங்கள், குறுகிய ஒரு காலத்தில் முழுமையான நிதி சுதந்திரத்தை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். சரியானதும் தெளிவானதும் அதேபோல் அடைந்து கொள்ளக் கூடியதுமான நிதி ரீதியான திடசங்கற்பங்களை ஏற்படுத்திக்கொள்ள இதுவே தக்க தருணம்.