நீங்கள் குறிப்பிட்ட ஒரு வயதில் உங்கள் சொந்த வாகனத்தை ஓட்டுவது உங்களுடைய எதிர்பார்ப்புகளில் மிகவும் முக்கியமான ஒரு தருணம். ஒரே வாகனத்தை சில ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்க விரும்பாத அல்லது ஒரே தடவையில் கூடுதலான பணத்தை செலவு செய்யாது வாகனமொன்றை சொந்தமாக்கிக் கொள்ள விரும்புபவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாற்றீடாக குத்தகை வசதி அமையும். நீங்கள் உங்களுடைய முதலாவது வாகனத்தை குத்தகையில் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கும் முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சகல விடயங்களும் தொடங்குபவர்களுக்கான இந்த கைந் நூலில் தரப்படுகின்றன.
HNB FINANCE கம்பனி 18 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் மோட்டார் சைக்கிள் தொடக்கம் மோட்டார் வாகனம் வரையான எந்தவொரு வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கும் குத்தகை வசதியை வழங்குகிறது.
நீங்கள் விரும்பாத அல்லது உங்கள் தேவைக்கு பொருந்தாத வாகனம் ஒன்றை குத்தகையில் பெறுவதை தவிர்க்க நீங்கள் எதிர்காலத்திற்கு திட்டமிட வேண்டும். பெறுமதி குறைவாக தேய்மானம் அடையும் வாகனம் என்பது நீங்கள் மாதாந்தம் குறைந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற பொருளைக் கொண்டிருந்தாலும் காலத்துடன் பெறுமதி குறையாத வாகனம் ஒன்றை பெற்றுக்கொள்வதே உங்கள் தேவையாக இருக்க வேண்டும்.
நீங்கள் குத்தகையில் பெற்றுக் கொள்ளும் வாகனத்திற்காக செலுத்த வேண்டிய தொகை உங்கள் வாழ்க்கை முறைக்கமைய வேறுபடலாம். ஆகவே, உங்களுடைய வரவு செலவு திட்டத்தை அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குத் தயாரித்து நீங்கள் விரும்பும் வாகனம் தொடர்பாக முடிவு செய்யுங்கள். வரவு செலவை கணிக்கும் போது பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
காப்புறுதி – குறிப்பாக உங்களுடைய வாகனம் குத்தகையில் பெறப்பட்டிருந்தால் அதற்கு கட்டாயமாக காப்புறுதி காப்பீடு இருக்க வேண்டும். வாகனம் காப்புறுதி செய்யப்பட்டதன் பின்னர் உங்களுடைய குத்தகை கம்பனியான HNB FINANCE காப்புறுதி தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கட்டணங்கள் – உங்களுடைய வாகனத்தின் ரகத்திற்கு ஏற்ப நீங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களதிற்கு செலுத்தவேண்டிய பதிவுக்கட்டணம் வேறுபடும். பதிவுசெய்தலுக்கான மதிப்பீடுகள் பற்றி தெரிந்துகொள்ள இந்தத் தொடர்பினை பயன்படுத்துங்கள்.
முத்திரைக் கட்டணம் – செலுத்த வேண்டிய முத்திரை கட்டணம் பற்றி தெரிந்துகொள்ள, இலங்கை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தைப் பரிசீலியுங்கள். www.ird.gov.lk
உங்களுடைய தேவைக்கு ஏற்ப குத்தகை காலத்தைத் தீர்மானிக்கலாம். நீங்கள் அடிக்கடி வாகனத்தை மாற்றுபவராயின் குறும் கால குத்தகையை தெரிவு செய்யுங்கள். நடுத்தர காலத்திற்கு பணத்தை ஒதுக்க விரும்புபவராயின் நீண்டகால குத்தகையை தெரிவு செய்யுங்கள்.
ஓட்ட தூரம் –
நீங்கள் வாகனத்திற்கான குத்தகை வசதியை பெறுமுன்னர் வாகனத்தை செலுத்த எதிர்பார்க்கும் மதிப்பீட்டு தூரத்தை அறிவிக்க வேண்டும். ஏனென்றால், அனுமதிக்கப்படும் தூர அளவை விட அதிகரிக்கும் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் மேலதிக கட்டணம் அறவிடப்படும். எனவே, செலுத்த வேண்டிய தொகையை குறைத்துக் கொள்வதற்காக தூர அளவை குறைவாக மதிப்பீடு செய்யுங்கள்.
குத்தகை பலவழிகளில் பயனுள்ளது. அதன்மூலம் உங்களுக்கு நவீன பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப விருத்தி மற்றும் எரிபொருள் சிக்கனம் கொண்ட புதிய வாகனமொன்றை செலுத்தும் வாய்ப்பு கிடைக்கின்றது. அதேபோல் குத்தகை தெரிவானது உங்களை நீண்டகால கடப்பாட்டிலிருந்து விடுவிக்கிறது. உங்களுக்கு புது வாகனத்தின் இதமும் மனநிம்மதியும் கிடைக்கிறது.
அதுமட்டுமன்றி, HNB FINANCE கம்பனியில் குத்தகை வசதியைப் பெற்றுக் கொள்ளும்போது, உங்கள் மாதாந்த வருமானத்திற்கு ஏற்ப குறைந்தத் தவணை, ஆளின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் ஒரு நாள் சேவை, உங்களை நாடி வந்து வழங்கப்படும் சேவை மற்றும் பதிவு செய்த அத்துடன் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் குத்தகை வசதி போன்ற நன்மைகளைப் பெறலாம். உங்கள் வசதி கருதி நாடெங்கிலும் அமைந்துள்ள கிளை வலையமைப்பு உங்களுக்கு மற்றுமொரு வரப்பிரசாதமாகும். நீங்கள் உங்களுடைய வசதிக்கு ஏற்ப ஒன்லைன் மூலமான குத்தகை கணிப்பையும் பயன்படுத்தலாம்.