011 202 4848

செய்திகள்

DocuSign உடன் இணைந்து e-signature மாதிரியை அறிமுகப்படுத்துகிறது HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, வாடிக்கையாளர்களின் அன்றாட நடவடிக்கைகளில் காகிதாதி இல்லாத பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் கையொப்ப வடிவத்தை செயல்படுத்த DocuSign உடன் கைகோர்த்துள்ளது.

HNB FINANCE ஏற்கனவே உள்ளக செயல்பாடுகளுக்காக இந்த வடிவமைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது, அங்கு வாடிக்கையாளர்கள் பாரம்பரிய எழுத்து கையொப்பங்களுக்கு பதிலாக மின்னணு கையொப்பங்களைப் பயன்படுத்த முடியும்.
“இ-கையொப்ப மாதிரியை செயல்படுத்துவது HNB FinanCEஇன் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயல்பாட்டில் ஒரு நேர்மறையான படியாகும். இது எங்களின் நிலையான வணிக மாதிரிக்கு ஏற்ப உள்ளது மற்றும் தற்போதைய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சமூக இடைவெளியை பராமரிக்க இந்த முறை மிகவும் பொருத்தமானது. கார்பன் டை ஆக்சைடை வளியில் கலப்பதை கட்டுப்படுத்துவதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் தனித்துவமான நன்மையையும் இது கொண்டுள்ளது.” என HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.

இ-கையொப்ப மாதிரி வங்கிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வகையாகும். இதன் ஊடாக, HNB FINANCEஆனது இலங்கையின் வங்கியல்லாத நிதியியல் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்க முடியும் மற்றும் அதன் டிஜிட்டல் சேவை ஊக்குவிப்பு பணியில் ஒரு முன்னோடி நடவடிக்கையாகவும் எடுக்க முடியும்.

DocuSign சேவையானது நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல், கையொப்பமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை புத்தாக்கம் செய்துள்ளது, மேலும் இந்த செயல்முறை விரைவான சேவை வழங்கலையும் எளிதாக்குகிறது. DocuSign Agreement Cloudஇன் ஒரு பகுதியாக, DocuSign மின் கையொப்ப வடிவமைப்பை வழங்குகிறது, இது நடைமுறையில் எங்கிருந்தும், எந்த நேரத்திலும், எந்த சாதனத்திலிருந்தும் மின்னணு முறையில் கையொப்பமிடுவதற்கான முதல் வழி. இன்று DocuSign Agreement Cloudஆனது தினசரி செயல்முறைகளை விரைவுபடுத்தவும் வாழ்க்கையை எளிதாக்கவும் 180 நாடுகளில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களாலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

HNB Finance தொடர்பில்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 70 கிளைகளை நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.