வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வது என்பது எளிதான முடிவு அல்ல. நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான முதலீடுகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால், உங்களுக்கான மிகச் சிறந்த கொள்வனவுத் தெரிவு பற்றி நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மொத்தப் பணத்தையும் செலுத்தி வாகனத்தைக் கொள்வனவு செய்வதில் தொடங்கி, குத்தகைக்கு எடுப்பது அல்லது கடன்பெற விண்ணப்பிப்பது போன்ற நிதிச் சேவைகளைப் பயன்படுத்துவது வரை, உங்களது கொள்வனவு பற்றிய முடிவில் உங்களுக்கு உதவ, நீங்கள் தெரிவுசெய்யக்கூடிய பல வழிகள் உள்ளன.
நீங்கள் ஒரு வாகனத்தை மொத்தப் பணத்தையும் செலுத்தி கொள்வனவு செய்ய முடிந்தாலும், அதன் இயங்கும் செலவுகள் மற்றும் காப்புறுதிச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உங்கள் நிதிச் சுமையைக் குறைக்கக்கூடிய வாகனக் குத்தகை தெரிவினை நீங்கள் விரும்பலாம்.
நீங்கள் அத்தகைய ஒரு வசதியைப்பெற விரும்பினால், தற்போதுள்ள பல்வேறு வாகன நிதியளிப்புத் தெரிவுகள் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் அடுத்த வாகனத்தைக் கொள்வனவு செய்ய நிதியளிப்பதற்கான சில சிறந்த வழிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
வங்கி அல்லது நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து தனிநபர் கடனுக்காக பதிவு செய்வது ஒரு தெரிவாகும். நீங்கள் தெரிவு செய்யும் நிறுவனத்தின் அடிப்படையில், ஒன்று முதல் பத்து வருடங்கள் வரை திருப்பிச் செலுத்தும் காலத்தைப் பெறலாம். பல நிறுவனங்களால் வழங்கப்படும் சலுகை வட்டி விகிதங்கள் மாறுபடும் என்பதால் அவை குறித்து கவனத்தில் கொள்ளுங்கள்.
HNB FINANCE வழங்கும் ரிலாக்ஸ் தனிநபர் கடன் வசதி சந்தையில் சில சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது, மேலும் நீங்கள் சம்பளம் பெறும் பணியாளராக இருந்தால், உங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விரைவான தெரிவுகளில் இதுவும் ஒன்றாகும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் நீங்கள் அடமானத்தின் பேரில் 12 மில்லியன் ரூபாய் வரை கடனைப் பெறலாம்.
HNB FINANCE வழங்கும் Auto Loanණය යෝජනා ක්රමය වාහන මිලදී ගැනීමේ கடன் திட்டம், வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவையைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதற்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் குறைந்த வட்டி விகிதத்திற்கு உட்பட்டதாக, குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் உங்களை நாடிவந்து உதவுவதன் மூலம் வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கான கடனைப் பெற இது உதவுகிறது.
AUTO LOAN வாகனக் கடன் சேவையின் மூலம், உங்கள் மாத வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் கழிவுடன் கூடிய வாகனக் காப்புறுதி தவணைப் பணம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மாதாந்த வாடகைகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும். அவை தவிர, பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத வாகனங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் வழங்கப்படுகிறது.
லீசிங் என்பது உங்கள் வாகனத்திற்கு நிதியளிப்பதற்கான மற்றொரு தெரிவாகும். இந்தத் தெரிவானது நீங்கள் கொள்வனவு செய்யும் அதே வாகனத்தைப் பிணையாக வைத்து கடன் வசதிபெற உதவுகிறது; எனவே, நீங்கள் பணம் செலுத்தி முடித்த பின்னர் மோட்டார் வாகனம் உங்களுக்குச் சொந்தமாகும்.
நீங்கள் ஒரு வாகனத்தை சொந்தமாக வைத்திருக்க அல்லது உள்ள வாகனத்தை மேம்படுத்த திட்டமிட்டால், எங்களின் ஜெனரல் லீசிங் சேவையைப் பெறுவது அவசியமாகும். HNB FINANCE கம்பெனியில் நீங்கள் குறைந்தபட்ச ஆவணங்கள், உங்களை நாடிவந்து வழங்கப்படும் உதவிச சேவைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஒரு நாள் சேவை என்பவற்றுடன் சிரமம் இன்றி குத்தகை வசதியைப் பெறலாம்.
வாகனங்களை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கான நிதி உதவிக்குறிப்புகள்:
கடனுக்கான காலம் குறுகியதாக இருக்கும்போது திருப்பிச் செலுத்தும் தொகை அதிகமாக இருப்பினும், நீங்கள் வட்டிக்கென குறைவான தொகையைச் செலுத்துவதால் அது உங்களுக்கு நீண்டகால நன்மையைத் தரும். உங்கள் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை தாக்குப்படிக்க கூடியதாக மாற்றுவதற்கு, நீங்கள் அதனை மிக நீண்ட திருப்பிச் செலுத்தும் காலத்திற்கு திட்டமிட தூண்டப்பட்டாலும், வாகனம் போன்ற பெறுமதி தேய்மானம் அடையும் சொத்து விடயத்தில் இது ஒரு புத்திசாலித்தனமான தீர்மானமாக அமையாது.
உங்கள் வாகனத்தின் மொத்தச் செலவை குத்தகைக்கு அல்லது கடனாகப் பெற முடிந்தாலும், உங்களால் செலவினை ஏற்க முடிந்தால் பாரிய தொகையை முன்பணமாகச் செலுத்துவது நீண்ட காலத்திற்கு உங்கள் சுமையைக் குறைக்கும். நீங்கள் வாகனத்தை குத்தகைக்கு எடுக்கத் தீர்மானித்தால் உங்கள் கடனை விரைவில் செலுத்தலாம் அல்லது உங்கள் வாகனத்தை முழுமையாகச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
ஆரம்பத்தில் நிதி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதன் மூலம், உங்களுடைய சொந்த வாகனத் தேவைகள் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கான பல்வேறு தெரிவுகளை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். மிகச் சிறந்த முடிவினை எடுக்க உங்களுக்கு கடன் வசதி வழங்கும் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, மோட்டார் வாகனக் கடன் அல்லது குத்தகைக்கான உங்கள் நிலைப்பாட்டை மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்.
உங்கள் கடன் அல்லது குத்தகை ஒப்பந்தத்திற்கான முன் அனுமதி, நீங்கள் வாகனத்தைக் கொள்வனவு செய்யும் செயல்முறையை விரைவுபடுத்துவதோடு, மிகச் சிறந்த கொடுக்கல் வாங்கலையும் உறுதிசெய்யும்.
உங்கள் வாகனக் குத்தகை அல்லது கடனுக்கான மாதாந்த தவணைப் பணத்தை தவறாமல் செலுத்த, உங்கள் கடன் அட்டை அல்லது நேரடிக் கணக்குப் பரிமாற்றங்கள் மூலம் தானியங்கி பணம் செலுத்தும் வழிமுறையை ஆக்கிக்கொள்வது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். இது உங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமான கடன் தகவல் பணியக CRIB அறிக்கையைப் பராமரிக்கவும், கூடுதல் வட்டிச் சேர்வதால் ஏற்படும் சுமையைத் தவிர்க்கவும் உதவும்.