பல வருடகால அறிவு, திறமை, அனுபவம் மற்றும் பொறுப்புள்ள ஒருங்குடைய எண்ணம் கொண்ட எங்கள் பணிப்பாளர் குழுமத்தின் வழிகாட்டலின் மூலம் HNB Finance நிறுவனமானது இலங்கையின் முன்னணி, நிதி நிறுவனமாக வழிநடத்தப்படுகிறது.
திரு ராஜீவ் திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி முதல் HNB Finance PLC இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
திரு ராஜீவ் திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி முதல் HNB Finance PLC இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2017 ஆம் ஆண்டு முதல் HNB Finance PLC இன் பணிப்பாளர் குழுமத்தில் உறுப்பினரொருவராகவும்,கடந்த காலங்களில் HNB Finance PLC இன் வாரிய தணிக்கைக் குழு மற்றும் வாரிய ஒருங்கிணைந்த இடர் மேலாண்மைக் குழுவின் தலைவராகவும் இருந்துவந்தவர். தற்போது அவர் நிறுவனத்தின் வாரிய மூலோபாய மற்றும் முதலீட்டு மறுஆய்வுக் குழுவின் தலைவராகவும் Hatton National வங்கி PLC இல் SME & Micro Finance பிரதிப் பொது முகாமையாளராகவும் கடமையாற்றுகின்றார் .
வங்கி மற்றும் மூலதனச் சந்தைகளில் இரண்டு தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட அவர், இதற்கு முன்னர் Hatton National Bank PLC இன் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைமை மூலோபாய அதிகாரி பதவிகளை வகித்து, 8 வருடங்களுக்கும் மேலாக வங்கியின் கூட்டாண்மை முகாமைத்துவக் குழுவில் அங்கம் வகித்துள்ளார். HNB Finance PLC இன் வாரியத்தில் இருப்பதுடன், Acuity Partners (Pvt) Ltd, Lanka Venture PLC மற்றும் Lanka Energy Fund PLC ஆகியவற்றின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார். திரு. திஸாநாயக்க CFA பட்டயத்தாரியும் , பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் மற்றும் பட்டய உலகளாவிய முகாமைத்துவ கணக்காளர் சக உறுப்பினறும் ஆவார் . இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றவர்.
தொழில் ரீதியாக நிதியளிப்பவரான திரு. பிரபாத் அவர்கள் ஜேர்மனியின் Frankfurt பாடசாலையினால் உருவாக்கப்பட்ட......
திரு. பிரபாத் தொழில் ரீதியாக நிதியளிப்பவர் மற்றும் ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் பள்ளியில் இருந்து சர்வதேச அளவில் சான்றிதழ் பெற்ற மைக்ரோ ஃபைனான்ஸ் நிபுணர் ஆவார். தனியார் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். ஆஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் (Sp. In Finance). அவர் பட்டய முகாமைத்துவ கணக்காளர்களின் (FCMA, UK & CGMA) சக உறுப்பினராகவும், இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தின் சக உறுப்பினராகவும் FICM (SL), மற்றும் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (MCIM) உறுப்பினராகவும் உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனத்தின் (CMA, AUS) சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளராகவும் உள்ளார். இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் வணிகம் மற்றும் நிதி நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமா பெற்றுள்ளார். அவர் இலங்கையில் நுண் நிதித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் World Consulting Research Corporation (WCRC) வழங்கும் மதிப்புமிக்க “2014 ஆம் ஆண்டின் கேம் சேஞ்சர்” விருதை வென்றவர்.
திரு. ஹசித விஜேசுந்தர ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் (GIZ) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிகழ்ச்சித் திட்டத்தின் ஆலோசகர் ஆவார்....
திரு. ஹசித விஜேசுந்தர ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் (GIZ) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிகழ்ச்சித் திட்டத்தின் ஆலோசகர் ஆவார். அவர் ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் அபிவிருத்தித் துறை தொடர்பில் மிகவும் தேர்ச்சி வாய்ந்தவர் என்பதுடன் நுண் நிதி அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார நிதியிடல். சந்தைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல் பிரச்சினைகள், துறைசார் உபாய முறைகள், சமூக செயலாற்றுகை முகாமைத்துவம் ஆகியன உள்ளடங்கிய நிதியிடல் துறையில் பத்து வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டவர்.
அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் முதுமானிப் பட்டதாரியும், சட்ட இளமானிப் பட்டதாரியும்இ (LL.B) விஞ்ஞான இளமானிப் பட்டதாரியும் (B.Sc.) ஆவார். பல உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்சார் நிறுவனங்களின் உதவி அங்கத்தவராகவும் உள்ளார். 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பணிபுரியும் அவர். தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானி (LLM) பட்டப்படிப்பை பயிலுகின்றார். திரு. விஜேசுந்தர அவர்கள் ஜேர்மனியின் Frankfurt நிதி முகாமைத்துவக் கல்லூரி மற்றும் வறியோர்களுக்கு உதவியளிக்கும் ஆலோசனைக் குழு என அழைக்கப்படும் CGAP போன்ற புகழ்பெற்ற சர்வதேச நிறுவனத்தின் நிதி அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிதியிடல் தொடர்பான பட்டய பயிற்சியாளரும் ஆவார். இதற்கு மேலதிகமாக அவர் இலங்கை பல்கலைக்கழகம் மற்றும் சில உயர் கல்வி நிறுவனங்களில்; சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சேவையாற்றுகின்றார்.
இலங்கையில் பெற்ற அனுபவத்துக்கு மேலதிகமாக, வலய மட்டத்திலும் அவர் செயல்முறை அனுபவங்களைப் பெற்றுள்ளார். இந்தோனேசியாவின் திறமுறை வலய பொருளாதார அபிவிருத்தி மற்றும் முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் (SREGIP) மற்றும் பிலிப்பைன்ஸ் பசுமை பொருளாதார அபிவிருத்தி ஊக்குவிப்பு நிறுவனத்தின் (ProGED) மதிப்பீட்டு தொழிற்பாட்டுக் குழுவின் அங்கத்தவராக இருந்து கொண்டு அவர் அதன் திட்ட வடிவமைப்புகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதில் தனது பங்களிப்பை நல்கியுள்ளார். இந்தியா, வங்காள தேசம், மியன்மார், கம்போஜியா, மலேசியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின்; நிதி முறைமை தொடர்பில் சிறந்த அறிவுள்ள அவர் அது சார்ந்த பல்வேறுபட்ட அவருக்கு கையளிக்கப்பட்ட பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
2021 பெப்ரவரி 15 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் திரு ருவன் மனதுங்க எச்.என்.பி பினான்ஸ் பி.எல்.சி கம்பனியில் சுயாதீனமற்ற, நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
2021 பெப்ரவரி 15 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் திரு ருவன் மனதுங்க எச்.என்.பி பினான்ஸ் பி.எல்.சி கம்பனியில் சுயாதீனமற்ற, நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு மனதுங்கா ஹட்டன் நஷனல் வங்கி பி.எல்.சி கம்பனியின் தலைமை இடர்வரவு உத்தியோகத்தர் / பிரதி பொதுமுகாமையாளராக பணியாற்றி வருகிறார்.
வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ள அவர் ஏற்கனவே HSBC Sri Lanka மற்றும் M/s Ernst & Young, Chartered Accountants, Sri Lanka போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அவர் இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உயர் அங்கத்தவராகவும் விளங்குகிறார்.
திரு லலித் வித்தான 2021 செப்டம்பர் 10ஆம் திகதி தொடக்கம் HNB FINANCE பணிப்பாளர் சபையில் சுயாதீன, நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். திரு லலித் 25 வருடங்களுக்கும் மேல...
திரு லலித் வித்தான 2021 செப்டம்பர் 10ஆம் திகதி தொடக்கம் HNB FINANCE பணிப்பாளர் சபையில் சுயாதீன, நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். திரு லலித் 25 வருடங்களுக்கும் மேலாக தாபன பிரிவில் முகாமைத்துவம் சார் பதவிகளை வகித்துள்ளதோடு அக்காலப்பகுதியில் வங்கிகளில் வணிக மற்றும் வியாபார பிரிவுகளில் உயர் முகாமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். அவர் Brandix Group, Ernst and Young, Amsterdam Rotterdam (Amro) Bank, IBM World Trade, Corporation and Carson Cumberbatch, Ceylon Tea Services Limited மற்றும் Yamaha Corporation in (USA) போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவராவார்.
திரு லலித் வித்தான சமீப காலம் வரை ஸ்ரீலங்கன் விமான சேவை கம்பனியில் கூட்டு பிரதம நிதி மற்றும் நிர்வாக உத்தியோகத்தராகவும் பின்னர் அதன் இணைய நிறுவனமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் நிறைவேற்று உத்தியோகத்தராக பணியாற்றியுள்ளார். அவர் தற்போது Agility Consulting Services (Pvt.) Ltd தாபகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் Laugfs Gas PLC, Laugfs Maritime Services (Pvt.) Ltd மற்றும் Softlogic Life Insurance PLC இன் பணிப்பாளராகவும் செயற்பட்டு தனது பொறுப்புகளை நிறைவேற்றி தற்போது Acuity Partners (Pvt.) கம்பனியின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் Project Management Institute, Colombo Chapter உப தலைவராகவும் விளங்குகிறார். மேலும் அவர் தேசிய ஒலிம்பிக் குழுவின் நிறைவெற்றுச் சபை உறுப்பினரும் ஆவார்.
அவர் ஏற்கனவே இலங்கை வங்கி, தங்கொட்டுவ பொசிலென் PLC” Merchant Bank of Sri Lanka PLC” Ceylease Limited மற்றும் செலான் வங்கி போன்ற நிறுவனங்களில் சுயாதீனப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு திரு லலித் வித்தான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ^TRCSL&வின் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக பட்டதாரியான திரு லலித் வித்தான, ஐக்கிய இராச்சியத்தின் மன்சஸ்டர் மெட்ரோபொலிற்றன் பல்கலைக்கழகத்தில் கலைமுதுமாணி கௌரவ பட்டதாரியாவார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் மற்றும் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும், ஐக்கிய அமெரிக்க முகாமைத்துவ நிறுவனத்தில் கருத்திட்ட முகாமைத்துவ தொழில் வல்லுனருமாவார்.
திரு. முரளி ஸ்ரீனிவாஸ் பொலமரசெட்டி நுண் நிதி, நுண் காப்பீடு, நுண் ஓய்வூதியம், செலவினை ஏற்கக் கூடிய / நுண் வீடமைப்பு, வீடமைப்பு நுண்நிதி, குடிநீர் மற்றும் துப்புரவேற்பாடு போன்ற துறை...
திரு. முரளி ஸ்ரீனிவாஸ் பொலமரசெட்டி |சுயாதீன நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்
திரு. முரளி ஸ்ரீனிவாஸ் பொலமரசெட்டி நுண் நிதி, நுண் காப்பீடு, நுண் ஓய்வூதியம், செலவினை ஏற்கக் கூடிய / நுண் வீடமைப்பு, வீடமைப்பு நுண்நிதி, குடிநீர் மற்றும் துப்புரவேற்பாடு போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்த, 15 வருடங்களுக்கும் மேலாக நிறுவனத் துறைசார்ந்த முகாமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். அவர் தற்போது இந்தியாவின் S.M.I.L.E Microfinance Limited கம்பெனியில் முகாமைத்துவப் பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அலுவலராகவும் பணியாற்றுகிறார். ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரில் அமைந்துள்ள Protimos Foundation நிறுவனத்தில் பணிப்பாளராகவும், இந்திய பெங்குளுரு நகரின் யூனுஸ் கமூக இயக்க நிதிய முதலீட்டுக் குழு உறுப்பினராகவும் விளங்குகிறார். திரு. முரளி ஏற்கெனவே, இந்தியாவின் Mimoza Enterprises Finance Company Limited கம்பெனி, Signumtree Consultancy Private Limited கம்பெனி, ஐக்கிய இராச்சியத்தின் Hocare Limited கம்பெனி, இந்தியாவின் ஐதராபாத் நகரிலுள்ள Acer Engineers Private Limited கம்பெனி மற்றும் Tripod Impex Private Limited கம்பெனி போன்ற நிறுவனங்களில் நுண் நிதி, தகவல் தொழில்நுட்பம், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், மதியுரைச் சேவைகள் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
திரு. முரளி இந்தியாவின் வெங்கடேசர் பல்கலைக் கழகத்தில் அரசியலில் இளமாணிப் பட்டத்தையும், மதுரைப் பல்கலைக் கழகத்தில் பௌதீகவியலில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், ஹாவர்ட் வணிக கல்லூரியின் நிறைவேற்று கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நுண் நிதிப் பரிவில் தலைமைத்துவம் பற்றிய நிறைவேற்று கற்கை நெறியைப் பூர்த்திசெய்துள்ளார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் லீட்ஸ் பல்கலைக் கழக வடிவமைப்புக் கல்லூரியின் அதிதி அங்கத்தவரருமாவார். நிறுவனத் துறைசார்ந்த பணிக்கு மேலதிகமாக ஆரவற்ற பிள்ளைகளின் கல்விக்கான அரசு சாரா அமைப்பான Needy Illiterate Children Education நிறுவனத்தின் ஆலோசனைக் குழு அங்கத்தவராகவும், இந்தியாவிலுள்ள வறிய மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அரசு சாரா அமைப்பான Partners in Prosperity நிறுவனத்தின் ஆலோசனைக் குழு அங்கத்தவராகவும் பணியாற்றுகிறார்.
2022 நவம்பர் 29 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் திரு. பிராக்ம்மனகே பிரேமலால் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சுயாதீனமற்ற, நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட...
திரு. பிராக்ம்மனகே பிரேமலால் சுயாதீனமற்ற | நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்.
2022 நவம்பர் 29 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் திரு. பிராக்ம்மனகே பிரேமலால் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சுயாதீனமற்ற, நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
திரு. பிரேமலால் இதற்கு முன்னர் HNB பினான்ஸ் கம்பெனியின் பணிப்பாளர் சபையில் 09 வருட சேவைக் காலத்தைப் பூர்த்திசெய்த பின்னர் இலங்கை மத்திய வங்கியின், நிதி நிறுவன (நிறுவன ஆளுகை) விதிகளுக்கு இணங்க ஓய்வு பெறுமுன்னர், 2020 ஜூன் 29 வரை கம்பெனியின் பிரதி தவிசாளர் / சுயாதீனமற்ற, நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளராக கடமையாற்றினார்.
ஐக்கிய இராச்சியத்தின் பட்டய நிர்வாகக் கணக்காளர்கள் நிறுவகம், இலங்கைச் சந்தைப்படுத்தல் நிறுவகம் மற்றும் கடனாவின் பட்டய வணிக நிருவாக நிறுவகத்தில் உறுப்பினராக விளங்கும் திரு. பிரேமலால், மலேசிய திறந்த பல்கலைக்கழகத்தில் வணிக நிருவாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் இலங்கையின் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் தறையில் பட்டமேல் படிப்பு டிபளோமாவையும் நிறைவுசெய்துள்ளார்.
மூன்று தசாப்தங்களாக இலங்கையின் வீடு,மனை விற்னை / வாங்கல் தொழில் தறையில் சேவையாற்றியுள்ள அவர், இலங்கையின் வர்த்தகத் துறையில் ஒரு முக்கிய நபராக இருப்பதோடு, HNB Finance PLC கம்பெனியின் இரண்டாவது முக்கிய பங்குதாரரான Prime Lands (Private) Limited இன் நிறுவனராகவும் அந்தக் குழுமத்தின் தலைவரும் ஆவார்.
திரு. பிரேமலால் வீடு,மனை விற்னை / வாங்கல் தொழில் துறையில் பெற்றுள்ள பரந்த அனுபவத்தையும் ஒரு தொழில முயற்சியாளராக பல கைத்தொழில்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களையும் கருத்தில்கொண்டு, அவருக்கு 2011 இல் மதிப்புமிக்க UCD தொழில்முயற்சியாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், நாட்டின் வளர்ச்சியின் இயந்திரத்தை இயக்கிய மற்றும் நாட்டின் உண்மையான சொத்துக்களாக விளங்கும் இலங்கையின் சிறந்த 50 வர்த்தகர்களில் ஒருவராக இனங் காணப்பட்டு LMDஇனால் 2018 ஆம் ஆண்டுக்கான “இலங்கை வர்த்தகர்களின்” A-பட்டியலில் ஒருவராகவும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
அவர் தற்போது பிரைம் லேண்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், பூமி ரியாலிட்டி ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் கம்பெனியின் தவைர் / நறைவேற்றுப் பணிப்பாளராகவும், பிரைம் லேண்ட்ஸ் ரெசிடென்சிஸ் பி.எல்.சியின் இணைத் தலைவர்/பணிப்பாளராகவும் வரையறுக்கப்பட்ட பிரைம் லேண்ட்ஸ் ஆஸ்திரேலியா உரிமக் கம்பெனியின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார். திரு. பிரேமலால் 2021/22ஆம் ஆண்டிற்கான இலஙகைக் கூட்டாதன விருத்தியாளர்களின் சங்கத்தின் தலைவரும் ஆவார்.
திரு பத்திரகே அனுர டப்ளியு பெரேரா இலங்கையிலும் அதேபோல் வெளிநாடுகளிலும் முகாமைத்துவம் சார்ந்த பதவிகளில் பெற்றுக் கொண்டுள்ள 18 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன், தனியார் துறையில் 21...
திரு. ஆர்.ஏ.டப்ளியு பெரேரா | சுயாதீன நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்
திரு பத்திரகே அனுர டப்ளியு பெரேரா இலங்கையிலும் அதேபோல் வெளிநாடுகளிலும் முகாமைத்துவம் சார்ந்த பதவிகளில் பெற்றுக் கொண்டுள்ள 18 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன், தனியார் துறையில் 21 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றுள்ளார். நிதித் துறையில் தேர்ச்சி பெற்ற தொழிவாண்மையாளராக விளங்கும் திரு பெரேரா, தற்போது பிரைம் லேண்ட்ஸ் (தனியார்) கம்பெனி மற்றும் பிரைம் லேண்ட்ஸ் ரெசிடென்சீஸ் பீ.எல்.சி கம்பெனி ஆகியவற்றில் நிதிப் பணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
திரு அனுர பெரேரா, ஏற்கெனவே “பேகர் ரிலி ஸ்ரீ லங்கா” பட்டய கணக்காளர் நிறுவனத்தில் சிரேஷ்ட நிலை பதவியொன்றை வகித்துள்ளதோடு, அதில் முகாமைத்துவ ஆலோசகராகவும் வரி பற்றிய ஆலோசகராகவும் தனது சேவையை வழங்கியுள்ளார். அதே நிறுவனத்தின் செயலாளர் பிரிவான கோபரேட் செக்ரடரீஸ் ப்ரக்ரீஸ (தனியார்) கம்பெனியில் பணிப்பாளராக நிறுவனத்தின் முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை பிரிவில் மிக முக்கிய பணிப்பொறுப்பினை வகித்துள்ளார். மேலும், மாலத்தீவின் சயிப்ரியா நிறுவன குழுமத்தின் பிரதம கணக்காளராக பணியாற்றி சர்வதேச வர்த்தகம், விமான சேவைகளை நெறிப்படுத்தல், விருந்தினர் கவனிப்பு மற்றும் சுற்றுலா கைத்தொழில் போன்ற துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி சர்வதேச அளவில் பரந்துபட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
திரு பெரேரா தன்னுடைய பல்பரிமாணம் கொண்ட தொழில் பயணத்திலும், இலங்கையின் ஆடைகள் மற்றும் காப்புறுதி ஆகிய துறைகளிலும் பணியாற்றி குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
இவர் இலங்கை பட்டய கணக்காளர்களின் பட்டய வரி ஆலோசகராகவும், இலங்கையின் பட்டய வரியிடல் நிறுவனத்தில் இணை அங்கத்தவராகவும், இலங்கை கணக்காளர் தொழில்நுட்பவியல் சங்கத்தின் அங்கத்தவராகவும் வலம் வருகிறார். மேலும், திரு பேரேரா ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வகுப்பு கௌரவ (BSc) முகாமைத்துவ (சிறப்பு) பட்டம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பக்கிங்ஹம்ஷர் நியூ பல்கலைக்கழகத்தில் (MBA) பட்டமும் பெற்றுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப பொறியியல் தொழில் வாண்மையாளரான கலாநிதி திரு. பிரசாத் சமரசிங்ஹ அவுஸ்திரேலியாவின் கென்பரா நகரில் அமைந்துள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் தொலைத் தொடர்புகள் துறையில் கலாநித...
PhD (அவுஸ்திரேலியா), MEng (இலங்கை), BSc. (Eng.) கௌரவ (இலங்கை)
தகவல் தொழில்நுட்ப பொறியியல் தொழில் வாண்மையாளரான கலாநிதி திரு. பிரசாத் சமரசிங்ஹ அவுஸ்திரேலியாவின் கென்பரா நகரில் அமைந்துள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் தொலைத் தொடர்புகள் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். மேலும், அவர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியில் துறையில் முதுமாணிப் பட்டத்தையும், முதல் வகுப்பு விசேட சித்தியுடன் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இவை தவிர, கலாநிதி திரு சமரசிங்ஹ இலங்கை படடயக் கணக்காளர் நிறுவனத்தில் பாகம் I மற்றும் பாகம் II இல் சான்றிதழ் பெற்ற தொழில் வாண்மையாளராக இருப்பதோடு, 1991ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தில் நிதிக் கணக்கீடு, வணிகக் கணித புள்ளிவிபரவியல் மற்றும் தரவு செயலாக்கத்தில் சிறந்த சாதனையாளர் அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான கலாநிதி திரு சமரசிங்ஹ, 2022 ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து ஹட்டன் நஷனல் வங்கியின் பணிப்பாளர் சபையிலும் கடமையாற்றி வருகிறார். மேலும், இலங்கையின் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் அங்கத்தவராக பணியாற்றும் திரு சமரசிங்ஹ 2005 ஜூலை மாதம் தொடக்கம் லங்கா பெல் (தனியார்) கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், அவர் டெலிகாம் ஃபிரான்டியர் (தனியார்) கம்பனி, பெல் சொல்யூஷன்ஸ் (தனியார்) கம்பனி மற்றும் பெல்வென்டேஜ் (தனியார்) கம்பனி ஆகியவற்றின் முகாமைத்துவப் பணிப்பாளராக உள்ளார். திரு. சமரசிங்ஹ ஹெய்லீஸ் ஃபைபர் பீ.எல்.சீ கம்பனியின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருவதோடு, 2017 செப்டம்பர் அந்தக் கம்பனியின் பணிப்பாளர் சபையிலும் பணியாற்றுகின்றார்.
Tissera ஒரு உள்ளடக்கிய நிதி, தாக்க முதலீடு, பசுமை நிதி மற்றும் MSME துறை நிபுணர், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளிலும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 15 வருடங்களுக்கும் மேலான...
Tissera ஒரு உள்ளடக்கிய நிதி, தாக்க முதலீடு, பசுமை நிதி மற்றும் MSME துறை நிபுணர், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளிலும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 15 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை பெற்றுள்ளார்.
அவர் 2008 இல் LOLC மைக்ரோ கிரெடிட் லிமிடெட்டின் நிறுவனர் CEO ஆனார், அது பின்னர் 2018 இல் LOLC Finance PLC (LOFC) உடன் இணைக்கப்பட்டது. அவர் பிப்ரவரி 2020 வரை இணைக்கப்பட்ட நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர்/CEO ஆக தொடர்ந்தார். அவர் 2020 இல் CEO ஆக மியான்மருக்குச் சென்றார். Early Dawn Microfinance Ltd. அவரது தலைமையின் கீழ், Early Dawn மிகப் பெரிய முன்னேற்றங்களைச் செய்து, இப்போது மியான்மரின் முதல் நான்கு நுண்நிதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், அவரது பதவிக் காலத்தில், நீண்ட கால கடன் மறுசீரமைப்பை முடித்த மியான்மரில் முதல் MFI ஆக எர்லி டான் இருக்க முடிந்தது.
BRAC Sri Lanka என்ற அரச சார்பற்ற நிறுவனத்தை வங்கியல்லாத நிதி நிறுவனமாக மாற்றுவதற்கும் அவர் முக்கியப் பங்காற்றினார். மேலும் இலங்கைக்கு வெளியே மியன்மார், கம்போடியா, பாகிஸ்தான் மற்றும் சாம்பியாவில் LOLC குழுவிற்காக நுண்நிதி நிறுவனங்களை விரிவுபடுத்தினார்.
திசேரா இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் பணிப்பாளர் பதவிகளை வகித்துள்ளதுடன், செலான் வங்கி பிஎல்சியின் மாற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கார்ப்பரேட் ஃபைனான்ஸ் துறையில் அவருக்கு வலுவான திறமை உள்ளது மற்றும் இலங்கையில் NBFI துறையில் முதல் USD சிண்டிகேட் கடன் நிதியை வழிநடத்துகிறார்.
கூடுதலாக, அவர் LOLC மைக்ரோ கிரெடிட்டில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில், INSEAD பிசினஸ் ஸ்கூல் அதன் முதுநிலை திட்டத்திற்கான சமூக நிறுவனத்திற்கான ஒரு வழக்கு ஆய்வை மேற்கொண்டது.
அவர் தொழில் ரீதியாக சந்தைப்படுத்துபவராக தகுதி பெற்றவர் மற்றும் எச்பிஎஸ்ஸில் நிர்வாகக் கல்விப் பயிற்சி பெற்றுள்ளார். உள்ளடக்கிய நிதி, தாக்க முதலீடு மற்றும் பசுமை நிதித் துறையில் அவர் குழு உறுப்பினர் மற்றும் வள நபராகவும் உள்ளார்.