வாடிக்கையாளர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாத்தலும், வாடிக்கையாளர்களுடன் ஆரோக்கியமான உறவுமுறையைப் பேணுதலும், நிதிப் பிரிவின் ஸ்திரத்தையும் பலத்தையும் உறுதிப்படுத்தும்பொருட்டு நிதிப் பிரிவு மீதான வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு, இலங்கை மத்திய வங்கி நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ளது. இக்கட்டமைப்பானது பின்வரும் குறைந்தபட்ச நியமங்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
1. வெளிப்படுத்துகை மற்றும் வெளிப்படையான தன்மை
2. வாடிக்கையாளர் கல்வி மற்றும் வழிப்புணர்வு
3. பொறுப்புமிக்க வியாபார நடத்தை
4. முறைப்பாடுகளைக் கையாளல் மற்றும் நிவாரணம்
5. சமத்துவமாகவும் நியாயமாகவும் நடத்தல்
6. வாடிக்கையாளர்களின் தரவுகளையயும் தனிப்பட்ட விபரங்களையயும் பாதுகாத்தல்
1.1. வாடிக்கையாளர்களுக்கு நிதியியல் சாதனங்கள்/ பணிகள் பற்றி பூரணமான, தெளிவான, பொருள் விளங்கக்கூடிய, துல்லியமான தவறாக வழிநடத்தாத தகவல்களை வழங்குதல் வேண்டும். வழங்கப்படும் தகவல்கள் வாடிக்கையாளர் விரும்பும் மொழிகளில் அதாவது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
கிடைக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும்.
1.2. சாதனம்/ பணிகள் பற்றிய முக்கிய தகவல்கள்
1.2.1. விளம்பரங்கள் மேற்கொள்ளப்படும் கட்டம்
அ. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினால் செய்யப்படும் எந்தவொரு வடிவிலுமான அனைத்து விளம்பரங்களும் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தாத நோக்குடன் வழங்கப்படும் சாதனங்கள்/ பணிகள் தொடர்பில் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் உண்மையான தகவல்களைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். வெளியிடப்பட்ட எந்தவொரு விளம்பரம் தொடர்பிலும் கோரிக்கைவிடுக்கும் பட்சத்தில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனி தெளிவுபடுத்தல்களை வழங்குதல் வேண்டும்.
ஆ. மேலும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் பொதுவான மற்றும் குறிப்பிட்ட சாதனம் தொடர்பான விளம்பரப்படுத்தலின் போது இலங்கை மத்திய வங்கியினால் காலத்திற்குக் காலம் விடுக்கப்படும் ஒழுங்குவிதிகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் இணங்கியொழுகுதல் வேண்டும்.
1.2.2. ஒப்பந்தத்திற்கு முன்னரான கட்டம்
அ. ஒவ்வொரு உரிமம் பெற்ற நிதிக் கம்பனியும் அவற்றின் சாதனம்/
பணிகளுக்காக ‘முக்கியமான விடயங்களைக் கொண்ட ஆவணம்” வடிவிலமைந்த நியமப்படுத்தப்பட்ட ஆவணத்தினை அச்சுவடிவில் அல்லது இலத்திரனியல் வடிவில் அமைந்த இலகுமொழியில் எழுதப்பட்ட ஆவணங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். இவை வாடிக்கையாளHகளாக வரக்கூடியவர்களுக்குக் கிடைக்கத்தக்கதாக இருத்தல் வேண்டுமென்பதுடன் கம்பனி வெப்தளத்திலும் காட்சிப்படுத்தப்படல் வேண்டும்.
ஆ. இவ்வாவணம் கடன் சாதனங்கள் தொடர்பில் பின்வரும் அடிப்படைத் தகவல்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
i. சாதனத்தின் தன்மைஇ வட்டி வீதங்கள்இ தண்டங்கள்இ ஏனைய விதிப்புக்கள் மற்றும் கட்டணங்கள்இ தரகுகள் உட்பட சாதனத்தின்/ பணியின் முக்கிய பண்புகள்.
ii. சாதனங்கள்/ பணிகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்.
iii. முக்கியமான நியதிகள் மற்றும் நிபந்தனைகள்.
iஎ. சாதனம்/ பணிகள் தொடHபில் ஏற்புடைத்தான சட்ட ஏற்பாடுகள்.
எ. முறைப்பாடுகளைக் கையாளும் நடைமுறை
இ. இவ்வாவணம் வைப்புச் சாதனங்கள் தொடர்பில் பின்வரும் அடிப்படைத் தகவல்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
i. ஏதேனும் வசதிகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் உட்பட, வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதியியல் மற்றும் ஏனைய நன்மைகள்.
ii. குறைந்தபட்ச நிலுவைத் தேவைப்பாடுகள், கணக்குகளைத் திறப்பதற்கான கட்டணம், கணக்குகளைப் பேணும் கட்டணம், கணக்குகளை மூடும் கட்டணம் மற்றும் வைப்புக் காப்புறுதிப் பாதுகாப்பின் கிடைப்பனவு.
iii. வாடிக்கையாளர்களினால் திறக்கப்படும் கணக்குகள், மூடப்படும் கணக்குகள், நிதிகளின் மாற்றம் என்பன மீதான ஏதேனும் கட்டுப்பாடுகள் மற்றும் செயற்படாக் கணக்குகள் மற்றும் கைவிடப்பட்ட சொத்துக்கள் மீதான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்.
ஈ. வாடிக்கையாளர்களாக வரக்கூடியவர்களை ஒப்பந்தங்களைச் செய்யூமாறு நிHப்பந்திக்கக்கூடாது என்பதுடன் சாதனங்கள்/ பணிகள் பற்றி தகவல்களின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ள அவHகளுக்கு நியாயமான காலத்தினையும் வழங்குதல் வேண்டும்.
1.2.3. ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் கட்டம்
அ. அனைத்து உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளும் தொடர்பான சட்டங்கள்/ பணிப்புரைகளினால் தேவைப்படுத்தப்பட்டவாறுஇ பொருத்தமான விதத்தில் சாதனங்கள்/ பணிகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தல் வேண்டும்.
ஆ. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் பின்வருவன உட்பட சாதனங்கள்/ பணிகளின் நியதிகள், நிபந்தனைகள் மற்றும் பண்புகள் பற்றி வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாக விளக்குதல் வேண்டும்.
i. வட்டி விதிப்புக்களைக் கணிக்கும் முறை உட்பட வாடிக்கையாளர்களினால் செலுத்தப்படுவதற்குக் கோரப்படும் ஏதேனும் வட்டி வீதங்கள், கட்டணங்கள் மற்றும் தரகுகள் போன்ற பொதுவான விதிப்புக்களின் விபரங்கள்.
ii. முறைப்பாடுகளைப் பெறுவது மற்றும் அவற்றிற்குத் தீர்வுகாணும் பொறிமுறைகளுக்கான உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் நடவடிக்கை முறைகள்.
iii. வாடிக்கையாளர் அவாpன்/ அவளின் கடப்பாடுகள் தொடர்பில் ஏதேனும் செலுத்தத் தவறும் சந்தர்ப்பத்தில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினால் மேற்கொள்ளப்படும் அறவிடல் நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் போது உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு ஏற்படும் செலவவுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுதல்.
iஎ. வாடிக்கையாளHகளினால் கணக்குகளைத் திறத்தல், கணக்குகளை மூடிவிடுதல், கணக்குகளைப் பேணுதல் (உ-ம்: குறைந்தபட்ச நிலுவை)இ நிதியங்களின் மாற்றல் என்பன மீதான ஏதேனும் கட்டுப்பாடுகள் மற்றும் செயற்படாக் கடன்கள் மற்றும் கைவிடப்பட்ட சொத்துக்கள் தொடHபான கொள்கைகள் மற்றும் நடவடிக்கை முறைகள்.
எ. வாடிக்கையாளHகளினால் மேற்கொள்ளப்படும் சாதனம்/ பணிகளின் முதிHச்சிக்கு முன்னரான மீளப்பெறுகைகள்/ பங்கேற்பினை முடிவவுறுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் தொடர்பான வாடிக்கையாளHகளினால் செலுத்தப்பட வேண்டிய தண்டங்கள் மற்றும் நேரகாலத்துடனான தீர்ப்பனவுக் கட்டணங்கள்.
எi. சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் அடிமட்ட அளவிற்கு மேலான கொடுக்கல்வாங்கல்கள் என்பன தொடர்பான விதிகளை நிதியியல் உளவறிதல் பிரிவிற்கு அறிவித்தல்.
எii. அட்டைகள்/ நிதியியல் சாதனங்கள் மற்றும் உhpமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பொறுப்புக்கள் களவு போகும் சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய அறிக்கையிடல் நடவடிக்கை முறை.
எiii. வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெறுவதற்கு சட்ட ரீதியாக அதிகாரமளிக்கப்பட்ட தரப்பினருக்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளிப்படுத்தல்.
இ. கடன் சாதனங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வழங்கல் கடிதம்/ சாதனக் கூற்றுக்களை வழங்குதல் வேண்டுமென்பதுடன் அவை குறைந்தபட்சம் பின்வரும் அடிப்படைத் தகவல்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
i. கடன்பாட்டாளரின் பெயர்.
ii. ஒப்பந்த இலக்கம் (கடன் தொடர்பு இலக்கம்).
iii. வழங்கப்பட்ட தொகை.
iஎ. வழங்கப்பட்ட திகதி மற்றும் கடனின் காலம்.
iஎ. வட்டி வீதமும் அதன் அடிப்படையும் (பெயரளவு அல்லது தாக்கமுள்ள).
எ. மீள்கொடுப்பனவூக் காலம் மற்றும் தவணைகளின் கால இடைவெளி (நாளாந்தம்இ வாராந்தம்இ மாதாந்தம் அல்லது வேறு ஏதேனும் அடிப்படை).
எi. வழங்கப்பட்ட பிணையின் விபரங்கள்.
எii. காப்புறுதி, மதிப்பீடு, ஆவணப்படுத்தல், பதிவுசெய்தல் போன்ற மேலதிகக் கட்டணங்களின் பிரிப்பு (ஏற்புடைத்தாயின்).
iஒ. தாமதமான கொடுப்பனவூ காணப்படும் சந்தHப்பத்தில் தண்ட வீதம் (ஆண்டிற்கு).
ஒ. வாடிக்கையாளர் கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறும் சந்தர்ப்பத்தில் அறவிடல் நடவடிக்கைகள். (சொத்துக்களை மீள உடமையில் வைத்திருத்தல், செயன்முறைகளுடன் தொடர்புபட்ட செலவுகள், மீள உடமையில் வைத்திருப்பதற்குப் பின்னரான நடவடிக்கைகள், ஏற்புடைத்தான மற்றைய கட்டணங்கள் போன்றவை).
ஒi. கடன்களை உரிய காலத்திற்கு முன்னர் தீர்ப்பனவு செய்வது தொடர்பில் ஏற்புடைத்தான நிபந்தனைகள்.
ஒii. நுண்பாக நிதிக் கடன்களைப் பொறுத்தவரையில் கள அலுவலர்கள் குழும உறுப்பினர்களிடம் விஜயம் செய்யும் நாள் மற்றும் நேரம் போன்ற அறவிடல் நடவடிக்கைகள் மற்றும் சேகரிப்பு நிலையங்களின் விபரங்கள் போன்றவற்றை குறித்துரைத்தல் வேண்டும். இயற்கை அனHத்தங்கள் மற்றும் எதிHபாரா சம்பவங்களின் காரணமாக ஆரம்பச் சேகரிப்பு அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படுமாயின் அது பற்றி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல் வேண்டும்.
ஈ. தேவைப்படுத்தப்பட்ட குறைந்தபட்சக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருந்தால் மாத்திரம் கொடுகடன் அட்டைகளுக்கான கூற்றுக்கள் தேவைப்படுத்தப்பட்ட குறைந்தபட்சக் கொடுப்பனவுகளையும் விதிக்கப்பட்ட மொத்த வட்டிக் கொடுப்பனவுகளைவும் குறைந்தபட்சக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டிராவிடின் மாத்திரம் தாமதக் கொடுப்பனவூக் கட்டணத்தினையும் காட்டுதல் வேண்டும்.
உ. வைப்புச் சாதனங்களைப் பொறுத்தவரையில், அனைத்து உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளும் ஏற்புடைத்தானவிடத்து தொடர்பான சட்டங்கள்/ பணிப்புரைகளில் குறித்துரைக்கப்பட்ட தேவையான தகவல்களை வெளிப்படுத்தல் வேண்டும். சேமிப்புப் புத்தகக் கணக்குகள் தவிர்ந்த வாடிக்கையாளரின் கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் நிலுவைகள் தொடர்பில் அவர்களினால் விரும்பப்படுகின்ற ஒன்றில் அச்சு அல்லது இலத்திரனியல் முறையில் அவர்களுக்குக் காலாந்தரக் கூற்றுக்களை அனுப்புதல் வேண்டும்.
1.2.4. கோரிக்கையின் மீது
கோரிக்கையின் மீது கடன் சாதனங்களுக்காக சாதனக் கூற்றொன்றினை வழங்குதல் வேண்டுமென்பதுடன் அது பின்வரும் தகவல்களை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.
i. அறிக்கையிடுகின்ற காலப்பகுதிக்கான விபரமான கொடுக்கல்வாங்கல் தகவல்கள் (உ-ம்: வாடிக்கையாளர் கணக்கிற்கான விடயங்கள் அடிப்படையிலான கொடுகடன்கள்இ வரவுகள் மற்றும் பற்றுக்கள்).
ii. பயனுறு வட்டி வீதம் மற்றும் வட்டி விதிப்பு.
iii. காலப்பகுதிக்காக விதிக்கப்பட்ட கட்டணம்.
iஎ. தவணைத் திகதி மற்றும் வெளிநின்ற நிலுவை.
1.2.5. பெறப்பட்ட சாதனங்கள்/ பணிகள் மற்றும் அவற்றின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள், விளக்கமளிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அது பற்றி விளங்கிக் கொண்டமை தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய எழுத்து மூலமான உறுதிப்படுத்தலொன்றினை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
1.2.6. சாதனங்கள்/ பணிகள் தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் பூரணப்படுத்தப்பட்டு வாடிக்கையாளHகளினால் கையொப்பமிடப்படுதல் வேண்டும். பூரணப்படுத்தப்படாத ஆவணங்களை ஏற்றுக்கொள்ளுவதும் வெற்றுத்தாள்களில்/ ஆவணங்களில் கையொப்பங்களைப் பெறுவதும் தடைசெய்யப்பட்டவையாகும்.
1.2.7. சாதனங்கள்/ பணிகள் மீது இணங்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதாயின் அம்மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு அது பற்றி அறிவித்தல் வேண்டும்.
1.3. பொதுவான வெளிப்படுத்துகைகள்
அ. உhpமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் வியாபாரத் தலங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.
i. இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நிதித்தொழில் உரிமம்.
ii. உhpமம் பெற்ற நிதிக் கம்பனியின் கணக்காய்வூ செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்களின் பிந்திய தொகுப்பொன்று.
iii. முக்கியமான மாதிhpப்படுத்தல்களுடன் உhpமம் பெற்ற நிதிக் கம்பனியின் கொடுகடன் தரமிடல்.
iஎ. வழிகாட்டலின் பிhpவு 4.1 இன்படி, வாடிக்கையாளர் முறைப்பாடுகளைக் கையாளுகின்ற ஆளைத் தொடர்பு கொள்வதற்கான முக்கிய தொடர்பு விபரங்கள்.
எ. நிதியியல் ஆலாட்சி அதிகாரியைத் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்.
எi. வியாபார நேரங்கள் மற்றும் விடுமுறை அறிவித்தல்கள்.
ஆ. மேற்குறிப்பிட்டவை உட்பட கம்பனி வெப்தளத்தில் பின்வரும் தகவல்களும் எடுத்துக்காட்டப்படுதல் வேண்டும்.
i. அனைத்து வைப்புக்கள் மற்றும் முதலீட்டுச் சாதனங்கள் மீதான தற்போதைய வட்டி வீதங்கள்.
ii. கடன் சாதனங்கள் மீதான தற்போதைய அடிப்படை வட்டி வீதங்கள் மற்றும் ஏனைய விதிப்புக்கள் (சாத்தியமானவிடத்து).
iii. வெளிநாட்டு நாணயங்களின் வாங்கும் மற்றும் விற்கும் வீதங்கள் (ஏற்புடைத்தாயின்).
iஎ. பிரிவு 1.2.2. (அ)இன் கீழான வெளிப்படுத்துகைத் தேவைப்பாடுகள்.
2.1. பயனுறு நிதியியல் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குதல்
அ. உரிமம் பெற்ற நிதிக் கம்பனி ஒன்று அதன் சொந்தமான அல்லது கைத்தொழில் சங்கங்களின் பங்கேற்புடன் நிதியியல் சாதனங்கள்/ பணிகளின் மீதான வாடிக்கையாளH விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காக குறித்துரைக்கப்பட்ட நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டங்களை அபிவிருத்தி செய்தல் வேண்டும். நிதியியல் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் இலக்கிடப்பட்ட மக்களின் தேவைகளையும் நிதியியல் அறிவினையும் பூர்த்தி செய்யும் விதத்தில் வடிவமைக்கப்படல் வேண்டும்.
ஆ. நிதியியல் கல்விக் கருவிகள் அச்சிடப்பட்ட சிற்றேடுகள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், பயிற்சிக்குரிய கட்புலச் சாதனங்கள் (உ-ம்: நாணய முகாமைத்துவம், படுகடன் முகாமைத்துவம், சேமிப்புக்கள்) ஒன்றிலொன்று வினைத்திறனாற்றும் கடன் கணிப்பிகள், முக்கிய செய்திகள் (உம்: உங்கள் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், உங்கள் சாதனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், நியதிகளையும் நிபந்தனைகளையும் வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள், உங்கள் கூற்றுக்களைப் பரிசோதித்துப் பாருங்கள், சரியான நேரத்தில் உங்கள் கடன் தவணைப் பணத்தினைச் செலுத்துங்கள், கட்டணங்களையும் விதிப்புக்களையும் விளங்கிக் கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட அடையாள இலக்கங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்) போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும்.
இ. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் சாதனம்/ பணிகள் தொடர்பில் உதாரணமாக நிதித்தொழில் சட்டம், நிதிக் குத்தகைக்குவிடல் சட்டம், ஈட்டுச் சட்டம், அடகுபிடித்தல் கட்டளைச் சட்டம் என்பன தொடர்பில் ஏற்புடைத்தான சட்ட ஏற்பாடுகளின் மீது வாடிக்கையாளர்களுக்கு உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் கல்வியூட்டுதல் வேண்டும்.
2.2. நிதியியல் ஒழுக்காற்றுக்களை ஊக்குவித்தல்
வாடிக்கையாளர்களின் குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய தொகுதியினரின் இயலாற்றலையும் நிதியியல் அறிவினையும் ஆழமாக்குவதற்காக நிதியியல் கல்வியும் தகவல் ஏற்பாடுகளும் அதிகரிக்கப்படுதல் வேண்டும். மிகையான கடன்பாடுகள், பல்வேறு கடன்பாடுகளின் விளைவுத்தன்மைகள் மற்றும் பிந்திய மீள்கொடுப்பனவுகள் போன்றவை பற்றி குறித்துரைக்கப்பட்ட எச்சரிக்கைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
3.1. வாடிக்கையாளரையும் பொருத்தமான தன்மையினையும் தெரிந்து கொள்ளுதல்:
வாடிக்கையாளர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் வாடிக்கையாளர்களின் பொருத்தமான நிதியியல் மற்றும் நிதியியல் அல்லாத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் சாதனங்களை வழங்குவதற்காகவும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளும் நியமிக்கப்பட்ட முகவர்களும் தேவையான மூலவளங்களையும் நடவடிக்கைகளையும் நடைமுறைக்கிடுதல் வேண்டும். இது தொடர்பில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளும் நியமிக்கப்பட்ட முகவர்களும் பின்வருவன பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.
அ. உங்கள் வாடிக்கையாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்: வாடிக்கையாளருக்குப் பொருத்தமான சாதனங்கள்/ பணிகளை விதந்துரைப்பதற்கு, முன்வைப்பதற்கு அல்லது வழங்குவதற்கு முன்னர் போதுமான தகவல்களைத் திரட்டிப் பதிவுசெய்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களின் மட்டம் வாடிக்கையாளHகளினால் எதிர்பார்க்கப்படும் சாதனம்/ பணிகளின் சிக்கலான தன்மைகளுக்குப் பொருத்தமானவையாக இருத்தல் வேண்டும்.
ஆ. பொருத்தமான தன்மையினை மதிப்பிடல்: உர்மம் பெற்ற நிதிக் கம்பனிகள் அல்லது நியமிக் கப்பட்ட முகவHகள் சாதனங்கள்/ பணிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் அவர்களின் குறிக்கோள்களையயும் அத்தகைய சாதனங்கள்/ பணிகளுடன் இணைந்து காணப்படும் இடர்நேர்வுகளை வாடிக்கையாளர்கள் நிதியியல் ரீதியாக தாங்கிக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றார்களா என்பதனையும் பரிசீலனையில்
கொள்ளுதல் வேண்டும்.
இ. மிகையான கடன் சுமைகளைத் தடுத்தல்
i. சாதனத்துடன் இணைந்து காணப்படும் நிதியியல் கடப்பாடுகளை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்யக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக புதிய கொடுகடன் சாதனங்களை அல்லது பணிகளை வழங்கும் பொழுது வாடிக்கையாளர்களின் கொடுகடன் நம்பகத்தன்மையினை பொருத்தமான விதத்தில் மதிப்பீடு செய்வதுடன் வாடிக்கையாளர் மீள்கொடுப்பனவு இயலாற்றல் பகுப்பாய்வினையும் பொருத்தமான விதத்தில் மேற்கொள்ளுதல் வேண்டும்.
ii. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் சபை மற்றும் மூத்த முகாமைத்துவம்இ வாடிக்கையாளர்களின் மிகையான கடன் சுமையின் இடர்நேர்வு பற்றி அறிந்திருக்க வேண்டியதுடன் காpசனைகளையூம் கொண்டிருத்தல் வேண்டும். உயHந்தபட்ச படுகடன் தீHப்பனவூ/ வருமான விகிதம் (உதாரணமாக படுகடன் தீர்ப்பனவிற்கு பிரயோகிக்கப்படக்கூடிய வாடிக்கையாளHகளின் செலவிடத்தக்க வருமானத்தின் உயர்ந்தபட்ச சதவீதம்) அடையாளம் காணப்படுதல் வேண்டும்.
iii. வாடிக்கையாளர்களின் தற்போதைய கொடுகடன் நம்பகத்தன்மைக்கு அப்பால் ஏற்படக்கூடிய மிகையான கொடுகடன் இடர்நேர்வுகளைத் தடுக்கும் பொருட்டு இன்னொரு நிதியியல் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஏற்கனவேயுள்ள கடன் வசதிகளைத் தீர்ப்பனவு செய்வதற்கு உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் புதிய கடன்களை வழங்குவதனை மட்டுப்படுத்தல் வேண்டும்.
iv. மிகையான படுகடன் சுமையினைத் தடுப்பதற்கு ஆதரவளிக்கின்ற கொடுகடன் தகவல் பணியகம் போன்ற கொடுகடன் முகாமைத்துவ முறைமைகளை உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் பயன்படுத்துதல்
வேண்டும்.
3.2. வாடிக்கையாளர்களிடம் தனிப்பட்ட முறையில் விஜயம் செய்தல் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தல்
உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் ஊழியர்கள் அல்லது முகவHகள் பின்வருமாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்
அ. நியாயமான அறிவித்தலை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் விஜயம் செய்ய வேண்டியதுடன் அத்தகைய விஜயங்கள் பகல் நேரங்களிலேயே இடம்பெறுதல் வேண்டும்.
ஆ. நோக்கம்இ விஜயம் செய்த திகதி மற்றும் நேரம் அதற்கு வாடிக்கையாளரின் சுருக்கமான பதிலிறுப்பு என்பனவற்றை உள்ளடக்கிய விஜயம் தொடர்பில் தனியான பதிவேடொன்றினைப் பேணுதல்.
இ. ஏற்கனவேயுள்ள அல்லது வாடிக்கையாளர்களாக வரக்கூடியவர்களுடன் தொலைபேசித் தொடர்புகளை மேற்கொள்ளும் பொழுது உரிய ஆள் அவரின் அல்லது அவளின் பெயரைக் குறிப்பிடுவதன் மூலம் தன்மை அடையாளம் காட்டிக் கொண்டு யாரின் சார்பில் வாடிக்கையாளர் தொடர்பு கொள்கிறாரோ அந்த உரிமம் பெற்ற நிதிக் கம்பனியின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்பு கொள்வதுடன் தொடர்பின் வர்த்தக நோக்கங்களையும் குறிப்பிடுதல் வேண்டும்.
3.3. ஊழியHகளையூம் நியமிக்கப்பட்ட முகவHகளையூம் கண்காணித்தல்: உhpமம் பெற்ற நிதிக் கம்பனிகள்இ பொருத்தமற்ற வியாபார நடத்தைகளையூம் நியாயமற்ற இடHநேHவூகள் இடம்பெறுவதனையூம் தடுக்கும் பொருட்டு வாடிக்கையாளHகளுடன் நேரடியாக செயற்படுகின்ற ஊழியHகள் மற்றும் நியமிக்கப்பட்ட முகவHகளின் நடத்தைகளை உத்வேகம் மிக்க விதத்திலும் கிரமமான முறையில் கண்காணிக்கும் பொறிமுறையொன்றினை உhpமம் பெற்ற நிதிக் கம்பனிகள் கொண்டிருத்தல் வேண்டும்.
3.4. ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல்: உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினதும் நியமிக்கப்பட்ட முகவர்களினதும் ஊழியHகள் (குறிப்பாகஇ வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்புகளை மேற்கொள்கின்ற கொடுகடன் அலுவலHகள்இ அறவிடல் அலுவலர்கள், சந்தைப்படுத்தல் அலுவலர்கள், முறைப்பாடுகளைக் கையாளும் அலுவலர்கள், வாடிக்கையாளர் பணிப் பிரதிநிதிகள்) பொருத்தமான பயிற்சியையும் தகைமையையும் பெற்றிருத்தல் வேண்டும்.
3.5. ஊதியக் கொள்கை
அ. பொறுப்புமிக்க வியாபார நடத்தைகளை ஊக்குவிப்பதற்காகவும் நியாயமற்ற இடர்நேர்வுகள் இடம்பெறுவதனை ஊக்கமிழக்கச் செய்வதற்காகவும் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேணுகின்ற ஊழியர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட முகவர்களுக்காக சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட ஊதியக் கொள்கையொன்று வடிவமைக்கப்படல் வேண்டும்.
ஆ. ஊழியர்களுக்கு யதார்த்த பூர்வமான விற்பனை இலக்குகளை வழங்க வேண்டுமென்பதுடன் அவை அத்தகைய ஊழியHகளின் தனிப்பட்ட இயலாற்றல்களுக்குள் அமைந்தனவாகவூம் இருத்தல் வேண்டும்.
இ. உhpமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் ஊழியர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட முகவர்களின் ஊதியங்கள் விற்பனைச் செயலாற்றத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதனையும் வாடிக்கையாளர்களின் மிகச் சிறந்த ஈடுபாடுகளுடன் தொடர்பான வாடிக்கையாளர் திருப்தி, கடன் மீள்கொடுப்பனவுச் செயலாற்றம், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை, ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகள்/சிறந்த நடைமுறை வழிகாட்டல்கள் என்பனவற்றிற்கு இணங்கியொழுதல் மற்றும் ஒழுக்கவியல் கோவை போன்ற காரணிகளும் அதனுள் உள்ளடங்கியிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
3.6 உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினால் நியமிக்கப்பட்ட ஊழியர்களினதும் முகவர்களினதும் பொறுப்பாண்மை
ஊழியர்களும் நியமிக்கப்பட்ட முகவHகளும் பின்வரும் நடைமுறைகளைத் தவிர்த்தல் வேண்டும்:
அ. வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்தல்.
ஆ. கடன் சேகரிப்பு நடைமுறைகளில் துர்ப்பிரயோகங்களைப் பயன்படுத்தல்.
இ. வாடிக்கையாளHகள் தகவல்களை இன்னொருவருக்கு வெளிப்படுத்தல்.
ஈ. சாதனம்/ பணிகள் பற்றி பொய்யான அல்லது பிழையாக வழிநடத்தக்கூடிய தகவல்களை வழங்குதல்.
உ. உhpமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் சாதனங்கள்/ பணிகளை வாங்குமாறு அல்லது அவற்றுடன் தொடர்புகளைக் கொண்டிருக்குமாறு வாடிக்கையாளர்கள் மீது அல்லது பொதுமக்களின் மீது வேண்டத்தகாத செல்வாக்குகளைத் திணித்தல்.
ஊ. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு வெளியே பிணை ஆவணங்களை கையொப்பமிடல். எனினும், நியாயமான சூழ்நிலைகளின் காரணமாக உhpமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் வியாபாரத் தலத்திற்கு வெளியே ஒப்பந்தங்களில் கையொப்பமிட வேண்டிய தேவையொன்று எழுமிடத்து அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரொருவர் பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.
3.7. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் சாதனங்கள்/ பணிகளின் புறக்கீடுகள்/ இரத்துக்களுக்கான இழப்பீடு
ஏற்கனவே தொழிற்பாட்டிலுள்ள குறிப்பாக, வைப்புச் சாதனங்களை புறக்கீடு செய்தல் அல்லது முடிவுறுத்தல் செய்வதற்கு உரிமம் பெற்ற நிதிக் கம்பனியொன்று எதிர்பார்க்கும் சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவேயுள்ள பொறிமுறை மற்றும் இழப்பீட்டுத் திட்டங்களின் கீழ் நியாயமான காலப்பகுதியொன்றில் இழப்பீடுகளைப் பெறுவதற்கான உரிமையினைக் கொண்டிருப்பதுடன் தேவைப்படுமாயின் அத்தகைய புறக்கீடுகள்/ முடிவுறுத்தல்கள் முன்கூட்டியே வெளிப்படுத்தப்படுதலும் வேண்டும்.
3.8. தண்ட வீதங்களை விதித்தல்
தண்ட வட்டி வீதத்தின் மீதான கொள்கை, வாடிக்கையாளர்களின் உண்மையான இடர்ப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு படுகடன் தீHப்பனவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு நியாயமானதொரு விதத்தில் ஆளுகை செய்யப்படல் வேண்டும்.
4.1. உள்ளக முறைப்பாட்டுக் கையாளல் பொறிமுறை
அ. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் அதன் வாடிக்கையாளHகளின் மனக்குறைகளையும் முறைப்பாடுகளையும் கவனிக்கின்ற விதத்தில் முறைப்பாட்டுக் கையாளல் கொள்கையொன்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஆ. வாடிக்கையாளர்கள் வெளிவாரி உதவிகளைப் பெறவிரும்புவதற்கு முன்னதாக உள்ளக முறைப்பாட்டுக் கையாளல் செயன்முறையினூடாகத் தீர்வு காண்பதற்கு ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
இ. வாடிக்கையாளர்களினால் செய்யப்படும் முறைப்பாடுகளைக் கையாளவும் அவை தொடர்பான தீர்வுகளுக்கு வசதியளிப்பதற்குமாக ஒவ்வொரு வியாபாரத் தலத்திலும் பொறுப்புமிக்க அலுவலரொருவரிடம் அப்பொறுப்பினை ஒப்படைத்தல் வேண்டும். அத்தகைய அலுவலாpன்/ அலுவலர்களின் பொறுப்பாண்மையில் அதற்கு தீர்வு காணப்படாவிடின் அதற்கு தீர்வு காணப்படும் வரை அதற்கு அடுத்துள்ள உயர் அதிகாரிகளிடம் அடுத்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
ஈ. அனைத்து வாடிக்கையாளர்களினதும் முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்காக தரவுத்தளமொன்று நிறுவப்பட்டு தரவுத் தளத்திற்குப் பொறுப்பாக ஒரு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அந்த அலுவலரை தீர்வு காணப்படாத முறைப்பாடுகளை காலத்திற்குக் காலம் கம்பனியின் மூத்த முகாமைத்துவத்திற்கு அறிக்கையிடுவதற்குப் பொறுப்பாக்குதல் வேண்டும். மூத்த முகாமைத்துவம் தீர்வு காணப்படாத விடயத்தின் மீது சரியான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல் வேண்டும்.
உ. வியாபாரத் தலத்தில் வாடிக்கையாளர்கள் அத்தகைய முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அலுவலரிடம் ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும்.
ஊ. ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரகளினால் அனுப்பி வைக்கப்படும் வாடிக்கையாளர் முறைப்பாடுகளை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வேண்டும்.
எ. எந்தவொரு முறைப்பாடுகள் தொடர்பிலும் நியாயமானதொரு குறுகிய காலப்பகுதிக்குள் அது கிடைத்தமை பற்றி எழுத்து மூலமாக அறிவித்தல் வேண்டுமென்பதுடன் முறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் விதத்தில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனியினால் முறைப்பாட்டு நடவடிக்கைகள் தொடரப்படும் என்பது பற்றியும் முறைப்பாடுகளைக் கையாளும் அலுவலர்/ அலுவலர்களைத் தொடர்பு கொள்வதற்கான விபரங்களையும் அறிவித்தல் வேண்டும் (இந்நோக்கத்திற்காக, கம்பனி பொருத்தமான சொற்பதங்களுடன் கூடிய அச்சிடப்பட்ட படிவத்தினை பயன்படுத்தலாம்).
ஏ. முறைப்பாடுகளை வாய்வழியில் பெற்றுக் கொள்வதற்கு அல்லது எழுத்து மூலம் பெற்றுக் கொள்வதற்கு வசதியளித்தல் வேண்டுமென்பதுடன் முறைப்பாடுகளை எழுத்து மூலம் மாத்திரமே செய்வது அவசியமென வற்புறுத்தக்கூடாது.
ஐ. முறைப்பாடுகளைக் கையாளுகின்ற செயன்முறையின் எந்தவொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்கள் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படக்கூடாது.
5.1. சமத்துவமாகவும் நியாயமாகவும் நடத்துதல்
அனைத்து வாடிக்கையாளர்களும் அவர்களது சாதி, சமயம், மொழி, பால், வயது போன்றவற்றினைக் கருத்திற் கொள்ளாது அவர்களது அனைத்துக் கட்டத் தொடர்புகளிலும் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்படுதல் வேண்டும்.
5.2. சிறப்புக் கவனிப்பும் கவனமெடுத்தலும்
வயது முதிர்ந்த, உடல் ஊனமுற்ற அல்லது குறைந்த நிதியியல் அறிவினைக் கொண்ட வாடிக்கையாளர் போன்றோர் நியாயமான நிதியியல் பணிகளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அவர்களுக்கான வசதிகளைப் பெறும் விதத்தில் சிறப்புக் கவனிப்புக்களைப் பெறுவதற்கு உரித்துடையவராவர்.
6.1. தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாத்துக் கொள்ளல்
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 61ஆம் பிரிவினால் தேவைப்படுத்தப்பட்டவாறு,அனைத்து உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளும் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் வாடிக்கையாளர் தரவுகளையும் அந்தரங்க விடயங்களையும் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானதாகும்.
6.2. கொடுகடன் தகவல் பணியக அறிக்கையிடல் முறைமையும் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளலும்
வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் தொடர்பான தனிப்பட்ட தரவுகளைக் கொடுகடன் தகவல் பணியகத்துடன் பகிர்ந்து கொள்வது தொடர்பில் அவர்களுக்குப் பொருத்தமான விதத்தில்/ முழுமையாக அறிவித்தல் வேண்டுமென்பதுடன் அவர்கள் தொடர்பில் வைத்திருக்கப்படும் தரவுகளின் நோக்கம் மற்றும் நிபந்தனைகள், செயன்முறை மற்றும் பகிர்ந்தளிப்பு என்பன தொடர்பில் இரகசியத்தன்மை விதிகள் பின்பற்றப்படுதலும் வேண்டும்.
• திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப. 07.00 தொடக்கம் பி.ப. 08.30 வரை
•வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் மு.ப. 08.30 தொடக்கம் பி.ப. 05.30 வரை...
எமது வாடிக்கையாளர் சேவை உத்தியோகத்தர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆயத்தமாக உள்ளனர்.
011 202 4848
வாடிக்கையாளர் சேவை துரித அழைப்பு
• திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப. 07.00 தொடக்கம் பி.ப. 08.30 வரை
•வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் மு.ப. 08.30 தொடக்கம் பி.ப. 05.30 வரை
• திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப. 07.00 தொடக்கம் பி.ப. 08.30 வரை
011 202 4848
மீள அறவிடும் சேவை துரித அழைப்பு
• திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப. 07.00 தொடக்கம் பி.ப. 08.30 வரை
உங்களது பெறுமதி வாய்ந்த கருத்துக்களை /ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கின்றோம்.! தயவு செய்து அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....
உங்களது பெறுமதி வாய்ந்த கருத்துக்களை /ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கின்றோம்.! தயவு செய்து ஆவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
info@hnbfinance.lk
உங்களது கருத்துக்கள் /ஆலோசனைகள் தொடர்பில் அடுத்து வரும் 2 வேலை செய்யும் நாட்களுக்குள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
எங்களது அனுபவம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை உத்தியோகத்தர்கள் உங்களது நிதித் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்....
கிளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களான உங்களுக்கு…
எங்களது கிளைகளிலுள்ள முகவர்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்..
எங்களது அனுபவம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை உத்தியோகத்தர்கள் உங்களது நிதித் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.
ஒம்புட்ஸ்மன் திட்டத்தில் உள்ளடங்கியவாறு ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் பிணக்குகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அதற்...
நிதி வாடிக்கையாளர் தொடர்புத் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி
இல. 30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01.