இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தமது சிறந்த சேவை தரத்தை மீண்டும் பலமான அடையாளத்தை காட்டும் வகையில் 2020 ACEF உலகளாவிய வாடிக்கையாளர் உறவுகள் விருது வழங்கும் நிகழ்வில் (ACEF Global Customer Engagement Awards 2020) தங்க விருதினை வென்றுள்ளது. HNB FINANCE நிறுவனம் இந்த விருது வழங்கும் நிகழ்வின் போது சிறந்த கௌரவமான விருதான ‘இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் உறவுகளை தொடர்ச்சியாக பேணி’ வந்ததற்காக தங்க விருதினையும், ‘வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் சிறந்த சமூக ஊடக இலச்சினை’ ரீதியாகவும் தங்க விருதினை வென்றெடுத்துள்ளது.
சிறந்த வாடிக்கையாளர் உறவுகளை தொடர்ச்சியாக பேணுவது இலகுவான விடயமாக இல்லாத போதிலும் இந்த நிலைமையை முன்னெடுத்துச் செல்வதற்காக நிறுவனம் என்ற வகையில் HNB FINANCE இனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சர்வதேச மதிப்பீடு செய்யப்பட்டமை உண்மையிலேயே நிறுவனம் மாத்திரமன்றி இந்த துறைக்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கையில் வங்கி மற்றும் நிதித்துறையில் சிறந்த சமூக ஊடக இலச்சியாக தெரிவானமை மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த கௌரவத்தை பெற்ற இலச்சினையாக தெரிவு செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட HNB FINANCE இன் அனைத்து ஊழியர்களுக்கும் புகழ் சேர்வதுடன் இணையத்தளம் மற்றும் அதற்கு வெளியிலுள்ள நிறுவனத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்கள் அதேபோன்று நிர்வகித்துச் செல்வதற்கு இவ்வாறான சர்வதேச மதிப்பீடுகள் மிகவும் உந்துதலாக இருக்கும்.
ACEF உலகளாவிய வாடிக்கையாளர் உறவுகள் விருதுவழங்கும் நிகழ்வில் வென்றெடுத்த இரு தங்க விருதுகள் மற்றும் இந்த வருடத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஏனைய உள்நாட்டு வெளிநாட்டு விருதுகள் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்ப எல்லைக்குள் வாடிக்கையாளர்களுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக HNB FINANCE இன் அர்ப்பணிப்பு சிறந்த விதத்தில் பிரதிபலித்தன. வாடிக்கையாளர்களின் தகவல்கள், சேவைத் தகவல்கள், நிறுவனத்தினது சமூக பொறுப்புணர்வு வேலைத்திட்டங்கள், மற்றும் சேவைகளை புதுப்பித்தல் போன்ற தகவல்களை HNB FINANCE இன் சமூக ஊடகங்களின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன் அவர்களது நிதி அறிவை மேம்படுத்துவதற்கும் HNB FINANCE நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2012 ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள ACEF விருத வழங்கும் நிகழ்வு இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுநர்கள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த ஆலோசனை நடவடிக்கைகளுக்காக இந்தியா, அவுஸ்திரேலீயா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இலச்சினைப்படுத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் படைப்பாற்றல் கொண்ட கருத்துக்கள் போன்ற துறைகளில் சிறந்த அறிவுடன் கூடிய தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இந்த ACEF விருது வழங்கும் நிகழ்வில் ஆசிய பசுபிக் பிராந்தியம், தெற்காசியா மற்றும் வலைகுடா பிராந்திய நாடுகளிலுள்ள நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட வாடிக்கையாளர் தொடர்பு நடவடிக்கைகள், இலச்சினைப்படுத்தல், சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம், நிறுவன ரீதியான சமூக விருந்தோம்பல் வேலைத்திட்டம், சுற்றுலாத்துறை வேலைத்திட்டங்கள், கிராமிய சந்தைப்படுத்தல் மற்றும் மனித வள வேலைத்திடங்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.