இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, புத்தாக்கமான வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதிச் சேவைகளில் முன்னணியில் உள்ளது, வாடிக்கையாளர்களின் வாகனக் கனவை நனவாக்குவதற்கு இலகுவாகக் கடனைப் பெறுவதற்கு வசதியாக “Auto Loan” நிதிச் சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கு வாடிக்கையாளர் வாங்க விரும்பும் கார் கடனுக்கான பத்திரமாக செயல்படுவதால், வாடிக்கையாளர் நிலையான தவணைகளில் கடனை செலுத்த முடியும். வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் பணம் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெகிழ்வான நிதித் திட்டமாக வழங்க, HNB FINANCEஇன் விற்பனை நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளர்களை அணுகி அவர்களின் கார் கனவை விரைவாக நனவாக்க உதவுவார்கள்.
“HNB FINANCE PLC, தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, வாகனக் கடன் வசதியை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. எங்களின் தற்போதைய நிதிச் சேவை வலையமைப்பில் இத்தகைய சேவையை அறிமுகப்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உகந்த நிதிச் சேவை வசதிகளைத் தொடர்ந்து அனுபவிக்கவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும் என்று நான் நம்புகிறேன்.” என HNB FINANCE PLCஇன் பிரதான முகாமையாளரும் லீசிங் பிரிவின் பிரதானியுமான ரங்கன ஷமீல் கூறினார்.
இந்த கடன் வசதி அதன் நெகிழ்வுத்தன்மையின் காரணமாக மற்ற சேவைகளில் தனித்துவமானது. அதாவது, பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சம் 84 மாதங்கள் வரையிலும், பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சம் 60 மாதங்கள் வரையிலும் கொடுக்கிறது.
கார்கள், வேன்கள், SUV, பிக்கப்கள் மற்றும் சிறிய டிரக்குகள் உள்ளிட்ட இரட்டைப் பயன்பாட்டு வாகனங்களுக்கும் இந்த கடன் வசதி பொருந்தும்.
HNB Finance தொடர்பில்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 70 கிளைகளை நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.