இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE நிறுவனத்தின் தங்கக் கடன் பிரிவினால் ‘Gold Plan’ எனும் புத்தாக்கமான நிதிச் சேவை சேவையை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தலைமையில், சுகாதார வழிகாட்டியின் வழிகாட்டுதலின் கீழ், எளிமையான முறையிலான நிகழ்வின் போது அண்மையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இன்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நகை சந்தையில், தற்போதைய விலையில் தங்க நகையை வாங்க வேண்டும் என்பது பல நுகர்வோரின் கனவாக உள்ளது. இதுபோன்ற சமயங்களில், HNB FINANCEக்கு முன்னுரிமை அளித்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த நகைகளை நடைமுறையில் உள்ள சந்தை விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதே HNB FINANCE “Gold Plan” சேவையின் நோக்கமாகும். மேலும், தங்கத்தின் தேவையும், மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிலர் தங்கத்தை முதலீடாக வாங்குகின்றனர். HNB FINANCEஆல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த “Gold Plan” நிதி வசதி அத்தகைய வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் உகந்த ஒரு வழியாக இருக்கும்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘Gold Plan’ நிதிச் சேவையானது வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எங்கள் வணிகப் பார்வையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. “Gold Plan” நிதிச் சேவையின் முதன்மை நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் நகைகளை, குறிப்பாக சொந்தமாக வைத்திருக்கும் வாய்ப்பை வழங்குவதாகும். இந்த நிதிச் சேவையானது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொடர்ந்தும் இருக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என HNB FINANCE இன் தங்கக் கடன் சேவைகளின் பிரதானி லக்ஷ்மன் ரணசிங்க தெரிவித்தார்.
“Gold Plan” சேவையின்கீழ், வாடிக்கையாளர் ஒரு பிரபல்யமான நகைக் கடையில் இருந்து வாங்க விரும்பும் தங்க நகைகளுக்கான பெறுமதியில் ஒரு பகுதியை கடனாக வாடிக்கையாளருக்கு “Gold Plan” சேவை மூலம் HNB FINANCEஆள் வழங்கப்படுகிறது. இந்தச் சேவையின் தனிச்சிறப்பு என்னவெனில், HNB FINANCE, பிணையாளர் இல்லாமல் பெற்ற கடனை வாடிக்கையாளரின் வருமானத்திற்கு ஏற்றவாறு வசதியான மாதத் தவணை அடிப்படயில் குறைந்த வட்டி விகிதத்தில் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளரால் வாங்கப்பட்ட நகைகள் அல்லது நகைகளின் கரட் மதிப்பு HNB FINANCEஇன் அனுபவம் வாய்ந்த நிபுணர் சேவையால் இலவசமாக சரிபார்க்கப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
HNB Finance தொடர்பில்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 70 கிளைகளை நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.