HNB Finance தமது பேண்தகைமை நிறுவன hPதியான சமூக பொறுப்புணர்வு அணுகுமுறையின் ஒரு பிரதான அங்கமான சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்; அலுவலகத்திற்கு வீதி சமிக்ஞை பலகைகளை அன்பளிப்பு செய்தது. நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதி மற்றும் அந்தப் பகுதியிலுள்ள பல்வேறு இடங்களில் பாதசாரிகள் மற்றும் சாரதிகளின் கவனத்திற்காக இந்த வீதி சமிக்ஞை பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
HNB Finance இன் பேண்தகைமை நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வு வேலைத் திட்டத்தின் வழிகாட்டி வேலைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வீதி சமிக்ஞை பலகை அன்பளிப்பு இதற்கு முன்னா; செய்யப்பட்டதுடன் இந்த வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த வருடம் பாதசாரிகள் மற்றும் சாரதிகளின் நன்மை கருதி இந்த வீதி சமிக்ஞை பலகை தொகையானது நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்த அன்பளிப்பு செய்யூம் நிகழ்விற்கு HNB Finance இன் விற்பனை பிரதானி உதார குணசிங்க சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் திலின திஸாநாயக்க மிரிஹான பொலிஸ் நிலைய பிரதானி பொலிஸ் பரிசோதகர் துஷார மற்றும் போக்குவரத்துப் பொறுப்பதிகாரி சமிந்த கஜநாயக்க ஆகியோர்; கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வழிகாட்டி வேலைத் திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வீதி சமிக்ஞை பலகைகள் வழங்கும் வேலைத் திட்டமானது யாழ்ப்பாணம், கதிர்காமம், நுவரெலியா, கண்டி, குருணாகல் ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்வதற்கு HNB Finance ஆயத்தமாகி வருகின்றது.
பாதசாரிகள் மற்றும் சாரதிகள் வீதியைப் பயன்படுத்தும் போது ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த ஒழுக்கத்தை பராமரிக்க பாதசாரிகளைப் போன்றே சாரதிகளும் சாலை விதிகளுக்குக் கீழ்ப்படிவது மிகவும் முக்கியம் இல்லையெனில் அது உயிர் இழப்புவரை சென்றுவிடலாம். பொலிஸார் பொது ஒழுங்கை பராமரிப்பதற்கும் போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்தும் நிறுவனமாக இருப்பதால் மக்களின் ஆதரவும் வளங்களும் முக்கியமானதாகும். பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் வீதி சமிக்ஞைகள் தேவையான இடங்களில் அமைப்பதற்காக ஓரளவு செலவொன்றை ஏற்க வேண்டியுள்ளதுடன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பை மேம்படுத்தும் நிறுவனமாக இந்த காலத்திற்கேற்ற சமூகத் தேவையை நிறைவேற்றுவதற்காக இரண்டாவது தடவையாகவும் நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இந்த வீதி சமிக்ஞை பலகைகளை அன்பளிப்பு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றோம் என HNB Finance இன் விற்பனை பிரதானி உதார குணசிங்க தெரிவித்தார்.
HNB Finance தொடர்பில்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உhpமம் பெற்ற நிதி நிறுவனமாகும். குவைஉh சுயவiபெ நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 60 கிளைகள் மற்றும் 10 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLC இனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.