HNB FINANCE PLC தனது நிதி சேவை பல்வகைப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் நோக்குடன் Prime Finance நிறுவனத்தின் முழு உரிமையையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் அவ்வாறு பெற்றுக் கொண்டுள்ள Prime Financeஇன் 07 கிளைகளை HNB Finance கையகப்படுத்தியுள்ளதுடன், கடந்த மே மாதம் 12ஆம் திகதி முதல் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்த 7 கிளைகள் மூலம் HNB FINANCE க்கு சொந்தமான மொத்த கிளைகளின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது.
HNB FINANCEஇன் புதிய பொரளை கிளை கொழும்பு 8, D.S. சேனநாயக்க மாவத்தையிலும், புதிய குருநாகல் இரண்டாவது கிளையானது 155, புத்தளம் வீதி, குருநாகல் என்ற முகவரியிலும் அமைந்துள்ளது. ஏனைய கிளைகள் கம்பஹா, நீர்கொழும்பு, வென்னப்புவ, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய நகரங்களில் HNB FINANCE என்ற வர்த்தக நாமத்தின் கீழ் அமையவுள்ளதுடன், HNB FINANCEன் மூலோபாய வணிகத் திட்டங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் ஏனைய நகரங்களுக்கும் இடமாற்றம் செய்யப்படும்.
Prime Finance நிறுவனத்தை HNB FINANCE கையகப்படுத்துவது பற்றிய உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியான ஆறு மாதங்களுக்குள், HNB FINANCE ஆனது Prime Financeஸின் முழு கிளை வலையமைப்பையும் அதன் கிளை வலையமைப்பில் ஒருங்கிணைத்து அதன் வணிக நடவடிக்கைகளைத் தொடர முடிந்தது. வளர்ந்து வரும் கிளைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக, Prime Finance வழங்கும் நிதிச் சேவைகளும் HNB FINANCEஇன் தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இந்த செயல்முறை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பை வலுப்படுத்துகிறது மற்றும் சொத்து அடிப்படையிலான Prime Finance கோப்புறை (போர்ட்ஃபோலியோ) காரணமாக நிதிச் சேவை அபாயத்தை சமநிலைப்படுத்துகிறது.
இந்த கையகப்படுத்துதலின் மூலம், Prime Finance நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த மனித வளங்களை HNB FINANCE பெற்றுக் கொள்வதுடன், புதிய காணி கட்டட விற்பனைத் துறையில் உள்ள நிதிச் சேவைகள், HNB FINANCEஇன் தற்போதைய நிதிச் சேவைகளின் போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்தும்.
“கிளைகள் ஒன்றிணைந்ததன் மூலம் HNB Finance மற்றும் Prime Finance ஆகியவற்றின் ஒன்றிணைவு முழுமையடைகின்றது. இந்த இணைப்பானது HNB Financeஇன் நிதிச் சேவைகளின் போர்ட்ஃபோலியோவை பன்முகப்படுத்துகிறது, இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள பலதரப்பட்ட நிதிச் சேவைகள் நமக்குத் தேவைப்படுவதால் இது மிகவும் சரியான தருணமாக உள்ளது. அதே நேரத்தில், இந்த நடவடிக்கை HNB FINANCEஇன் நீண்டகால வளர்ச்சித் திட்டத்தை வலுப்படுத்தும் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளைத் திறக்கும்,” என HNB FINANCEஇன் தலைவர் டில்ஷான் ரொட்றிகோ கூறினார்.
“Prime Finance குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் நாங்கள் வரவேற்கிறோம், மேலும் முக்கியமான மூலோபாய முடிவுகளை செயல்படுத்தும்போது, நிறுவனத்தின் தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வு ஆகியவற்றில் மிகுந்த அக்கறையுடன் செய்கிறோம் என்று நான் கூறுகிறேன். இந்த மைல்கல்லை HNB FINANCEஇன் வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும், இலங்கைப் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும் நிதிச் சேவைத் துறையில் இரண்டு முன்னோடிகளுக்கு இடையே ஒரு வலுவான இணைப்பாகவும் இந்த மைல்கல்லை முன்வைக்க விரும்புகிறேன்,” என HNB FINANCE PLC, முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்தார்.
HNB Finance மற்றும் Prime Finance ஆகியவற்றின் ஒன்றிணைவு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வருடாந்தர பொதுக் கூட்டத்தில் HNB Finance பங்குதாரர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் (கட்டமைப்பு மாற்றங்கள்) வழிகாட்டுதல்கள் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க, இரண்டு நிறுவனங்களின் பணிப்பாளர் சபை மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்த இணைப்பு அங்கீகரிக்கப்பட்டது.
முதல் சுற்றில், Prime Financeஇல் 87.27% பங்குகளை HNB FINANCE வாங்கியதுடன் பின்னர் மற்றொரு 9.37% பங்குகள் வாங்கப்பட்டன. HNB FINANCE பின்னர் சந்தை விதிகளின்படி பங்குச் சந்தையில் மேலும் 1.20% பங்குகளை வாங்கியது. அதன்படி, Prime Financeஇல் HNB FINANCE 97.84% பங்குகளைக் கொண்டுள்ளதுடன், மீதமுள்ள பங்குகளில் 2.16% பங்குகளை வெளிப்புற பங்குதாரர்கள் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
HNB FINANCE தொடர்பில்
2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட HNB Finance PLC இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான நிதி நிறுவனமாகும். நாடு முழுவதிலும் 77 கிளைகளைக் கொண்டுள்ள HNB Finance PLCஇனால் அமைக்கப்பட்ட நிதி சேவைகளுக்கிடையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு கடன் (SME), லீசிங் சேவை, தங்கக் கடன் சேவை, வீட்டுக் ககடன், தனிப்பட்ட கடன், கல்விக்கான கடன், சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு வசதிகள் ஆகிய சேவைகளும் இதில் பிரதானமானவையாகும்.