HNB FINANCE PLC இன் புதிய தலைவராக திரு டில்சான் றொத்ரிகோ 2021ஆம் ஆண்டின் செம்டம்பர் மாதம் 17ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டிருப்பதுடன் அவர் கம்பனியின் சுயாதீனமற்றஇ நிறைவேற்றுனர் அல்லாத பணிப்பாளராகவும் செயற்படவுள்ளார்.
ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தராக திரு ஜோனத்தன் அலஸ் 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை HNB FINANCE PLC இன் தலைவராக எமது கம்பனியின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய சேவையை ஆற்றியிருப்பதோடு, இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் HNB FINANCE PLC இன் புதிய தலைவராக திரு டில்சான் றொத்ரிகோ அப்பதவியினை பொறுப்பேற்றுள்ளார்.
திரு டில்சான் றொத்ரிகோ வங்கி, காப்புறுதி, வங்கி முதலீடு, மற்றும் ஆடை தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார். அவர் தற்போது Hatton National Bank PLC கம்பனியில் நிறைவேற்றுப் பணிப்பாளர் / பிரதம தொழிற்பாட்டு உத்தியோகத்தராக பணியாற்றுவதுடன் HNB Assurance” Guardian Acuity Management” Lanka Financial Services Bureau Ltd மற்றும் Credit Information Bureau போன்ற நிறுவனங்களிலும் உயர் பதவிகளை வகித்து வருகிறார்.
தொழில் முயற்சிகளை திறம்பட நெறிப்படுத்தும் ஆற்றல், அதேபோல் வலுவான தலைமைத்துவத்தைக் கொண்ட திரு டில்சான் றொத்ரிகோ HNB வங்கியில் தொழிற்பாட்டு செயன்முறையை மேம்பாட்டின் உந்துசக்தியாக செயற்பட்டு வருகிறரர்.
திரு டில்சான் றொத்ரிகோ இலங்கைப் பணிப்பாளர்கள் நிர்வாகம் (SLID) மற்றும் ஆசிய வங்கியாளர்கள் சங்கத்தின் (தாய்வான்) கொள்கை ஆலோசகர்கள் குழுவின் உப தலைவராக தற்போது பணியாற்றி வருவதுடன் CIMA, ACCA மற்றும் Risk Professional Forum தலைவராக இரண்டு வருட காலம் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு தசாப்தத்திற்கு மேலாக பல்வேறு பட்டப் படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளுக்கான ^ CIMA, ACCA, PIM MBA & விரிவுரையாளராக கல்வித் துறையில் தனது புலமையை வெளிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. SLID கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வரும் திரு டில்சான் றொத்ரிகோ ஐக்கிய இராஜ்ஜியத்தின் CIMA மற்றும ACCA போன்ற நிறுவனங்களில் உறுப்புரிமையை கொண்டுள்ளதோடு, ஐக்கிய இராஜ்ஜியத்தின் க்ரென்;ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பை நிறைவு செய்துள்ளார்.