011 202 4848

செய்திகள்

HNB FINANCE PLC ‘ஹரியட்ட கியமுத’ மேம்பாட்டு போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்

HNB FINANCE PLC இன் தலைமை அலுவலத்தின் ஆரம்ப நிகழ்விற்கு சமாந்திரமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஹரியட்ட கியமுத’ ஒன்லைன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்திற்கு கலந்து கொண்ட ஆயிரக் கணக்கானோரில் 5 மாகாண உள்ளடக்கிய 5 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

HNB FINANCE இனால் தமது நாடு முழுவதிலுமுள்ள கிளை வலைப்பின்னல் மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனை சேவைகள் மேம்பாட்டு வேலைத்திட்டம், கிளை திறப்பு, தங்கக் கடன் சேவைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட புதிய தகவல்கள் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்துதல் மற்றும் அறிவுறுத்துதல் இந்த மேம்பாட்டு வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். இதன்போது முகப் புத்தகம் அல்லது நிறுவனத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து நிறுவனத்தின் புதிய தகவல்களை பெற்றுக்கொள்வதுடன் அடுத்த கிளை திறக்கப்படும் பிரதேசத்தை சரியாக கூறுவதன் மூலம் பரிசுகளை வெல்வதற்கான சந்தர்ப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. இதன்போது அடுத்த கிளை ஆரம்பிக்கப்படும் இடம் குறித்து HNB FINANCE நிறுவனம் குறிப்பொன்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன் அந்த குறிப்பின்படி சரியான இடத்தை வாடிக்கையாளர் குறிப்பிடவேண்டும்.

விசேடமாக கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக நடமாற்றம் மற்றும் சமூக இடைவெளியை பேணுவது குறித்து பாரிய கவனம் செலுத்தி நிறுவனம் தமது விற்பனை சேவை மேம்பாட்டு வேலைத் திட்டங்கள் பலவற்றை ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. விசேடமாக முழு நாடும் லொக்டவுன் செய்யப்பட்டிருந்த போதிலும்ட ஏப்ரல் மாதம் வீடுகளில் இருந்தே ஒன்லைன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழுமையாக கலந்துகொள்ளக் கூடிய விதத்தில் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் பலவற்றை நடத்தியது. அத்துடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற ‘தினுமென் தினும’ போட்யானது புதிய பல அனுபவங்களை வழங்கிய சிறந்த வேலைத்திட்டமாகும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNB FINANCE PLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சமிந்த பிரபாத், “எமது சேவை இலாகாவை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஊடாக பலப்படுத்துவதற்காக பாரிய முதலீட்டினை நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் HNB FINANCE இன் சேவைகள் டிஜிட்டல் மற்றும் ஒன்லைன் தளங்களைப் பயன்படுத்தி மேம்படுத்துவதற்கு எமது ஒரு விற்பனை உத்தியாக குறிப்பிடமுடியும். இந்த மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக எமது சேவைத் தகவல்களை சிறந்த செலவுகளின் ஊடாக அதிகமான வாடிக்கையாளர்களுக்கு கொண்டுசெல்ல முடிந்துள்ளது. விசேடமாக கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தொடர்ச்சியாக வீடுகளில் லொக்டவுனில் இருக்க வேண்டி சூழலால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை உண்மையிலேயே சிறந்த அனுகூலங்களை தந்திருந்தன.” என தெரிவித்தார்.

‘ஹரியட்டம கியமுத’ HNB FINANCE இன் ஒன்லைன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்கள் 5 பேருக்கும் அவர்களது பரிசுகளை அவர்கள் வாழும் சூழலிலுள்ள கிளைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE Limited இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.