திரு லலித் வித்தான 2021 செப்டம்பர் 10ஆம் திகதி தொடக்கம் HNB FINANCE பணிப்பாளர் சபையில் சுயாதீன, நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். திரு லலித் 25 வருடங்களுக்கும் மேலாக தாபன பிரிவில் முகாமைத்துவம் சார் பதவிகளை வகித்துள்ளதோடு அக்காலப்பகுதியில் வங்கிகளில் வணிக மற்றும் வியாபார பிரிவுகளில் உயர் முகாமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். அவர் Brandix Group, Ernst and Young, Amsterdam Rotterdam (Amro) Bank, IBM World Trade, Corporation and Carson Cumberbatch, Ceylon Tea Services Limited மற்றும் Yamaha Corporation in (USA) போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவராவார்.
திரு லலித் வித்தான சமீப காலம் வரை ஸ்ரீலங்கன் விமான சேவை கம்பனியில் கூட்டு பிரதம நிதி மற்றும் நிர்வாக உத்தியோகத்தராகவும் பின்னர் அதன் இணைய நிறுவனமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் நிறைவேற்று உத்தியோகத்தராக பணியாற்றியுள்ளார். அவர் தற்போது Agility Consulting Services (Pvt.) Ltd தாபகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் Laugfs Gas PLC, Laugfs Maritime Services (Pvt.) Ltd மற்றும் Softlogic Life Insurance PLC இன் பணிப்பாளராகவும் செயற்பட்டு தனது பொறுப்புகளை நிறைவேற்றி தற்போது Acuity Partners (Pvt.) கம்பனியின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் Project Management Institute, Colombo Chapter உப தலைவராகவும் விளங்குகிறார். மேலும் அவர் தேசிய ஒலிம்பிக் குழுவின் நிறைவெற்றுச் சபை உறுப்பினரும் ஆவார்.
அவர் ஏற்கனவே இலங்கை வங்கி, தங்கொட்டுவ பொசிலென் PLC” Merchant Bank of Sri Lanka PLC” Ceylease Limited மற்றும் செலான் வங்கி போன்ற நிறுவனங்களில் சுயாதீனப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு திரு லலித் வித்தான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ^TRCSL&வின் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக பட்டதாரியான திரு லலித் வித்தான, ஐக்கிய இராச்சியத்தின் மன்சஸ்டர் மெட்ரோபொலிற்றன் பல்கலைக்கழகத்தில் கலைமுதுமாணி கௌரவ பட்டதாரியாவார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் மற்றும் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும், ஐக்கிய அமெரிக்க முகாமைத்துவ நிறுவனத்தில் கருத்திட்ட முகாமைத்துவ தொழில் வல்லுனருமாவார்.