011 202 4848

செய்திகள்

Prime Finance PLC ஐ வாங்குகிறது HNB FINANCE PLC

இலங்கையின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, பிரைம் குழுமத்திற்குச் சொந்தமான நிதி நிறுவனமான Prime Finance PLCஐ முழுமையாக கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அதன் நிதி வலிமை மற்றும் நிதிச் சேவைகளின் வர்த்தக ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த மூலோபாய கையகப்படுத்துதலின் மூலம், HNB FINANCE PLC தனது வாடிக்கையாளர்களுக்கு தனது நிதிச் சேவைகளை மிகவும் நெகிழ்வான முறையில் பன்முகப்படுத்த முடியும் என்று HNB FINANCE மேலும் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முதலாவது கையகப்படுத்தல் இது என்பதுடன் இதில் A தொகுதிகளைக் கொண்ட இரண்டு நிதி நிறுவனங்களும் அடங்கும். கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, HNB FINANCE PLC மற்றும் Prime Finance PLC ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிதி நிறுவனமாக தங்கள் நிதிச் சேவைகளை மேலும் பன்முகப்படுத்த முடியும்.

இந்த கையகப்படுத்துதலின் விளைவாக, HNB Finance நிறுவனம் 2021 டிசம்பர் 20 அன்று Prime Lands மற்றும் Prime Finance உடன் ஒப்பந்தம் செய்து கொண்டதுடன். Prime Financeஸிற்கு சொந்தமான பெரும்பான்மையான பங்குகளுக்கு சொந்தக்காரர் என்ற அந்தஸ்தை இலங்கையின் முன்னணி காணி கட்டிட விற்பனை நிறுவனங்களில் ஒன்றான Prime Lands (Pvt) Ltdக்கு சொந்தமான 87.27% பங்குகளுக்கு உரிமை அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

“இந்த கையகப்படுத்தல் எங்கள் பங்குதாரர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுவாக சமூகத்திற்கு மதிப்பு சேர்க்கும். இந்த கூட்டாண்மை HNB FINANCE PLC மற்றும் Prime Group ஆகியவற்றுக்கு இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் காணி கட்டிட விற்பனைத் துறைக்கு மிகவும் உகந்த அளவிலான நிதிச் சேவைகளை எங்களுக்கு வழங்கும் என்றும் நான் நம்புகிறேன். இது தொடர்பாக, HNB FINANCEஇன் நிதிச் சேவைகள் அதிவேகமாக வளர்ச்சியடைந்து, அதன் சேவையை விரிவுபடுத்துவதோடு, மிகவும் திறமையான நிபுணர்களின் ஒருங்கிணைப்பு மூலமாகவும், நிதிச் சேவைகளை நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்தை நம்பிக்கையுடன் தொடங்கும் என்று நம்புகிறேன். என HNB FINANCE PLC இன் தலைவர் டில்ஷான் ரொட்ரிகோ தெரிவித்தார்.

இரண்டு கிளைகளையும் கையகப்படுத்துதல் மற்றும் இணைப்பதன் மூலம் HNB FINANCEஇன் தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு Prime Financeஸின் 93% சொத்து அடிப்படையிலான போர்ட்ஃபோலியோவுடன் முன்பை விட அதிக எண்ணிக்கையிலான கிளைகள் மூலம் பலதரப்பட்ட நிதிச் சேவைகளை அணுக முடியும். நிதிச்சேவை ஆவதானம் உள்ளதாக இருக்கும் மற்றும் நிறுவனத்தின் இருப்புநிலை பலப்படுத்தப்படும்.

“அனுபவம் வாய்ந்த மற்றும் அர்ப்பணிப்புள்ள குழு உறுப்பினர்களைக் கொண்ட Prime Finance குழுமத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கையகப்படுத்தல் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இரு நிறுவனங்களால் வழங்கப்படும் பலதரப்பட்ட நிதிச் சேவைகளை அணுக உதவும், மேலும் இந்த கையகப்படுத்தல் புதிய வழிகளில் புதிய வாடிக்கையாளர் குழுக்களை மேலும் ஆக்கப்பூர்வமாக சென்றடையும் பலத்தை அளிக்கும் என்பது எனது நம்பிக்கை. இந்த செயல்முறையின் மூலம், எங்களது சந்தைப் பங்கு கணிசமாக வளரும் என்றும், Prime Financeஐ கையகப்படுத்துவதன் மூலம், எங்கள் தாய் நிறுவனமான Hatton National வங்கியின் பலம், நிதிச் சேவைத் துறையின் தலைமைத்துவம் மற்றும் சேவை திறன் மற்றும் நிதி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் நான் நம்புகிறேன்.” என HNB Finance நிறுவனத்தின் முகாமைத்ததுவப் பணிப்பாளரரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.

HNB FINANCEஇன் சிறந்த நிதிச் சேவைகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பீடுகளில், நிறுவனம் ஆசியாவின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக இருமுறை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் புத்தாக்கமான மற்றும் ஆக்கப்பூர்வமான சந்தைப்படுத்தல் அணுகுமுறைகளுக்காக ஏராளமான உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. HNB FINANCEஇன் கிளை வலையமைப்பானது HNB Financeஇன் நிதிச் சேவைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு உலகளவில் நெருக்கமாகக் கொண்டுவருகிறது, இது வணிகத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் HNB FINANCEஇன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்களுக்கு பங்களிக்கிறது. இலங்கையின் நிதிச் சேவை சந்தையில் தற்போது முன்னணி சந்தைப் பங்கினைக் கொண்டுள்ள HNB FINANCE, வலுவான மற்றும் நம்பகமான நிதிச் சேவை வழங்குனராக நுகர்வோர் சமூகத்தில் தனது முன்னணி வர்த்தக நாமத்தை நிறுவியுள்ளது. ஹட்டன் நேஷனல் வங்கியானது நாட்டின் நிதிச் சேவை வழங்குனர்களில் முதலிடம் பெறுவதற்கான உந்துதல், அதன் நிதி, வர்த்தக பலம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கிறது.