இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தமது சிறந்த சேவை தரத்தை மீண்டும் வலுவானது என குறிக்கும் வகையில் அண்மையில் இடம்பெற்ற SLIM DIGIS 2.0 இல் வெண்கல விருதொன்றை தனதாக்கிக் கொண்டது. HNB FINANCE நிறுவனத்தின் இணையத்தள தேடல் தேர்வுமுறை மற்றும் இணையத்தள தேடல் சந்தைப்படுத்தல் (Search Engine Optimization and Search Engine Marketing) ஆகிய நடவடிக்கைகளுக்காக இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டது. வருடாந்தம் SLIM DIGIS விருது வழங்கும் நிகழ்வில் மதிப்பீடு செய்யப்பட்ட ஒரேயொரு நிதி நிறுவனம் HNB FINANCE என்பது குறிப்பிடத்தக்கது.
HNB FINANCE இனால் முன்வைக்கப்பட்ட “Building an organic footprint” எனும் தந்திரோபாய டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் SLIM DIGIS விருது வழங்கும் நிகழ்வின் போது இவ்வாறு விருதுக்கு தகுதி பெற்றதுடன் இந்த விருது வழங்கும் நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த HNB FINANCE PLCஇன் விற்பனைப் பிரதானி உதார குணசிங்க, “HNB FINANCE” இணையத்தளத்தில் இணைய தேடல் தேர்வுமுறை மற்றும் இணையத்தள தேடல் சந்தைப்படுத்தல் (Search Engine Optimization and Search Engine Marketing) போன்ற நடவடிக்கைகளுக்காக SLIM DIGIS விருது வழங்கும் நிகழ்வில் மதிப்பீடு செய்யப்பட்டமை மிகவும் கௌரவமானது என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி கருத முடியும். நிறுவனம் ஒன்று தமது இலக்கை நோக்கி செல்லும் போது அதற்காக பாரிய பலத்தை டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் கூலம் வழங்க முடியும். விசேடமாக கொவிட் தொற்றுநோயின் போது நிர்வகிப்பு பயணத்தின் கட்டுப்பாடுகளுடன் டிஜிட்டல் சந்தைப்படுத்தலை மிகவும் சிறந்த விதத்தில் மற்றும் ஆக்கபூர்வமாக எமது சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களை பலப்படுத்துவதற்கு ஒத்துழைப்பாக அமைந்தது. வாடிக்கையாளர் அனுபவங்களுக்காக சிறந்த மதிப்பீடுகளை வழங்கும் நிறுவனமாக நாம் எப்பொழுதும் எமது சேவைகள் குறித்து டிஜிட்டல் ஊடகங்களின் ஊடாக அறிவிப்புக்களை செய்கின்றோம். டிஜிட்டல் சேவை திறன்களை மேம்படுத்துவதற்காக எம்மால் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் ஒரு சிறந்த அனுகூலமே இவ்வாறான விருதுகளின் மூலம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி பிரதிபலிக்கின்றது.” என தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் தொற்றுநோய் பரவி வரும் காலகட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு வேகமாக பிரவேசித்த பின்னணியில் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து தரப்பினருடனும் ஆழமான, மிகவும் அர்த்தமுள்ள தொடர்பினை ஏற்படுத்துவதற்காக புத்தாக்க தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக HNB Finance நிறுவனத்திற்கு முடிந்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மிகவும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனம் வெற்றிகரமாக வாடிக்கையாளர் அனுபவங்கள், நிறுவன ரீதியான சமூக பொறுப்பு வேலைத்திட்டம், மற்றும் வாடிக்கையாளர்களின் நிதி அறிவு மேம்பாடு குறித்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கையிலுள்ள மக்களைப் பலப்படுத்த HNB FINANCE நடவடிக்கை எடுத்துள்ளது.
SLIM DIGIS விருது வழங்கும் நிகழ்வு இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் சிறந்த வரவேற்பைக் கொண்ட விருது வழங்கும் நிகழ்வாக கருதப்படுவதுடன் அனைத்து விண்ணப்பங்களும் டிஜிட்டலல் சந்தைப்படுத்தல் துறையில் குறிப்பிடத்தக்க நிபுணர்களுடன் கூடிய தொழில் வல்லுநர்களை பாரிய மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன் விருதுகளுக்காக தேர்வு செய்வதற்கு இந்த துறையிலுள்ள சர்வதேச தரநிலைகள் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் வங்கி மற்றும் நிதி, காப்புறுதி, தொலைத்தொடர்பு, சொத்து விற்பனை, சுற்றுலா விருந்தோம்பல், போன்ற துறைகளினால் முன்வைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் வேலைத்திட்டங்கள் இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டன. டிஜிட்டல் சந்தைப்படுதத்தல் துறையில் உலகளாவிய தரநிலைக்கு பிரவேசிக்கும் நோக்கில் இலங்கையிலுள்ள நிறுவனங்கள் அந்த தரநிலைக்கு கொண்டு செல்வதற்காக உற்சாகப்படுத்துதல் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையிலுள்ள எல்லையை விஸ்தரிப்பதற்கு இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தமது ஒத்துழைப்புக்களை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
HNB Finance தொடர்பாக
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 60 கிளைகள் மற்றும் 10 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.