எல்ல பிரதேசத்தை கடந்து பதுளை பக்கமாக செல்லும்போது பாதையின் இடப்புறமாக இருக்கின்ற தமிழரசியின் ஹோட்டல் அந்த பிரதேசத்தில் அனைவருக்கும் பரிச்சயமானது. தமிழரசி இந்த ஹோட்டலை ஆரம்பிப்பதற்கு முன்னர் தள்ளுவண்டியில் சிற்றுண்டிகளை விற்பனை செய்தபோது கடையில் உணவூ உண்ணக் கூடாது என்ற கொள்கை பிடிப்பில் இருந்தவர்கள் தவிர மற்றைய அனைவருமே அவற்றை உண்டு மகிழ்ந்துள்ளனர். மலைமுகடுகளை வெண்ணிற முகில்கள் மூடிக்கொண்ட அந்த மாலைப் பொழுதில் தேநீரை ருசித்தபடி நான் தமிழரசியோடு பேசினோம்.
நான் பிறந்த ஊர் மல்வத்த. பொருளாதார பிரச்சினைகள் குடும்பத்தை படிப்படியாக சு+ழ்ந்து கொண்ட போது குடும்பச் சுமையை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. பதுளை பண்டாரவெல வீதியில் எங்களுடைய வீடு அமைந்திருந்தால் தின்பண்டங்களை தயாரித்து வீதி அருகிலே வைத்தபடி விற்பனை செய்யவேண்டும் என்று எண்ணினேன். அந்தக் காலத்தில் வாடகைக்கு கூட ஒரு கடையை என்னால் பெற முடியவில்லை. அதனால் சிற்றுண்டிகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்தேன். முறுக்கு வடை ரொட்டி ரோல்ஸ் பெட்டிஸ் போன்ற உணவூ பண்டங்களை விற்பனை செய்தேன். சிறிது காலத்தின் பின்னர் என்னுடைய தின்பண்டங்களுக்கு நல்ல கேள்வி காணப்பட்டது. தள்ளுவண்டியில் வைத்து கொண்டு அதை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
அந்தக் காலத்தில் நான் கிராமின் பற்றி அறிந்து கொண்டேன். கிராமின் கம்பனியின் திரிய கடன்தொகை அதேபோல அந்தக் கடன் திட்டத்தின் நன்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது. அந்த கடன் திட்டம் என்னுடைய தொழிலை முன்னேற்றுவதற்கு பக்க பலமாக உள்ளது என நினைத்தேன்.
அது எந்த அளவூக்கு சாத்தியமாகி உள்ளது என்றால் இன்று எனக்கென்று ஹோட்டலும் உணவூக் கடையூம் இருக்கின்றது. 60000இல் தொடங்கி கட்டம் கட்டமாக இரண்டு இலட்சம் வரை கடன் பெற்றுள்ளேன். உணவூப்பண்டங்களை விற்பனை செய்கின்றௌம். அதேபோல் உணவூ ஓடர்களையூம் எடுக்கின்றௌம். இன்னும் சிறிது காலத்தில் நான் கொள்வனவூ செய்த காணியில் ரெஸ்டாரண்ட் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.
மெதுமெதுவாக இருள் சு+ழ்ந்தது. தமிழரசி இன்னமும் சோர்ந்து விடவில்லை. அவருடைய கண்களில் எதிர்பார்ப்புகள் ஒளி வீசிக்கொண்டிருந்தமை இன்றும் என் நினைவில் உள்ளது.
பாலய்யா தமிழரசி
ரத்ன கிரி எல்ல