வெலிமட நுவரெலியா வீதியல் கெப்படிபொலயில் ஒழுங்கைக்குத் திரும்பும்போது நாம் கவரன்மான கிராமத்தை காணலாம். மரக்கறி மற்றும் பூ வளர்ப்பினை பிரதான ஜீவனோபாயமாக கொண்டுள்ள வெளிமடை மக்களின் வீடுகளில் சிறு அளவிலாவது ஏதோ ஒருவகையான பயிர் வளர்க்கப்படுவதை எளிதில் காணலாம். விபுல குமார குணரத்ன அதேபோல நிலுசி சமுதிகா தம்பதியின் முயற்சியின் பலனாக பொலிவூ பெற்றுள்ள கற்பூர நாற்றுமேடை பற்றி நிலுசி இவ்வாறு கூறுகிறார்.
என்னுடைய கணவர் இதை தொடங்கினார். நாங்கள் இந்த தொழிலை ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகின்றன. திரிய கடன் திட்டத்தின் கீழ் நாங்கள் ஆரம்பத்தில் 5000 பெற்றௌம். அதன்பின்னர் நாங்கள் நிறுவனத்துடன் நம்பகமாக கொடுக்கல் வாங்கல்களை செய்த காரணத்தினால் தேவையான நேரத்தில் தேவையான பணத்தை கடனாக பெற முடிந்தது. நாங்கள் ஒரு இலட்சத்தில் ஆரம்பித்து மூன்று இலட்சம் வரை கடன் பெற்றௌம். இந்தத் தொகையைக் கொண்டு பொரலந்தயைச் சேர்ந்நத மற்றுமொரு நண்பரையூம் இணைத்துக்கொண்டு ரோஜா பூச் செடிகளை வளர்க்கத் தொடங்கினோம்.
HNB Finance கம்பனி சுமார் 10 வருடங்களாக எமது நிதி உதவியாளராக செயற்படுகிறது. இதனால் எமது தொழில் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஒரு திட்டத்தை அமைத்துக் கொண்டு செயல்பட முடிந்தது. தொழிலுக்காக கடன் பெற்றதை போலவே HNB Finance கம்பனியில் முச்சக்கர வண்டி ஒன்றை கொள்வனவூ செய்வதற்கான லீசிங் வசதியை பெற்றுக் கொண்டோம். வியாபாரிகள் என்னை தேடி வருவதால் எமக்கு சந்தை வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டிய நிலை உருவாகவில்லை. எனக்கு நல்ல வருமானம் கிடைப்பதால் மேலும் ஒரு காணியை கொள்வனவூ செய்து எமது தொழிலை விஸ்தரிக்க எண்ணியூள்ளோம். HNB Finance கம்பனியூடன் நாம் கொண்டுள்ள இந்த உறவூ எமது வாழ்க்கைக்கு பலமாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
நிலுசி சமுதிகா
கெப்படிபொல