“கேகாலை கொழும்பு வீதியில் ரன்வல பிரதேசத்தை கடக்கும்போது அந்தப் பெண்ணின் சிறிய பலசரக்கு கடையைக் காணலாம். கடை சிறிதுதான் ஆனாலும் வசீகரத்திற்கு பஞ்சமில்லை. நாங்கள் அந்தக் கடைக்குள் நுழையூம் போது அந்தப் பெண் சில வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். சற்று ஓய்வூ கிடைத்த நேரத்தில் அவர் எங்களுடன் பேசினார்.” என்னுடைய பெயர் டப்ளியூ மல்லிகா. சில வருடங்களுக்கு முன்னர் நான் இந்த தேநீர் கடையை சிறிதாக ஆரம்பித்தேன். காலம் கழியவே என்னுடைய இந்த தொழிலை முன்னேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. நான் அதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தபோது HNB FINANCE கம்பெனி பற்றி அறிந்து கொண்டேன்.
கேகாலை கிளையின் கலிகமுவ பிசோவெல நிலையத்தில் இணைந்து அதன் நுண் நிதி கடன் திட்டத்தில் ஒரு தொகை பணத்தை கடனாகப் பெற்றுக் கொண்டேன். எனது தேநீர் கடையை பலசரக்கு கடையாக மாற்றுவதே எனது நோக்கம். தேவையான சந்தர்ப்பத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் கடனை பெற முடிந்ததால் என்னுடைய பலசரக்கு கடை இன்று ஜொலித்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய அடுத்த திட்டம் HNB FINANCE கம்பனியில் வீட்டுக்கடன் ஒன்றைப் பெற்றுக்கொண்டு இந்த கடையூடன் இணைந்தபடி ஹோட்டல் ஒன்றை ஆரம்பிப்பதுதான். வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை காட்டும் நிதி உதவியாளர் ஒருவர் இருக்கின்றார் என்ற எதிர்பார்ப்புடன் எந்த ஒரு செயலிலும் துணிச்சலுடன் களமிறங்க எங்களால் முடியூம்”.
டப்ளியூ மல்லிகா
கேகாலை