011 202 4848

செய்திகள்

‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் HNB FINANCE இன் டிஜிட்டல் நிதி சேவைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகளை வழங்குநரான HNB FINANCE தமது டிஜிட்டல் தகவல்கள் மற்றும் விற்பனை சேவைகளுக்காக 2020ஆம் ஆண்டின் ‘Vega’டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் விருதுக்கு தகுதிபெற்றுள்ளது. டிஜிட்டல் ஊடகத் துறையில் புத்தாக்கங்கள் மற்றும் விற்பனை சேவைகளுக்கு வருடம் தோறும் மதிப்பளிக்கும் ‘Vega’டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வு இந்தத் துறையில் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விருது வழங்கும் நிகழ்வாக குறிப்பிட முடியும். இந்த ஆண்டு தமிழ் சிங்கள புதுவருடத்தின் போது HNB FINANCE இனால் நிர்மாணிக்கப்பட்ட அபே கெதர அவுருது எனும் டிஜிட்டல் பெருநாள் உற்சவ மேம்பாட்டு வேலைத் திட்டம் ‘Vega’டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் முக்கியமாக வரவேற்புடன் ‘Arcturus Award’ விருதினைப் பெற்றது.

இந்த மதிப்பளிப்பு குறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “கொவிட் தொற்றுநோய் பரவலை அடுத்து நாடு Lockdown ஆனதன் காரணமாக எமது அன்றாட டிஜிட்டல் சேவைகள் மூலம் மக்களுக்கு சிறந்த தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த தமிழ் சிங்கள புதுவருடத்திற்கான இந்த அபே கெதர அவுருது டிஜிட்டல் மேம்பாட்டு வேலைத் திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தினோம். அதனை மக்கள் மிகவும் அன்பாக ஏற்றுக் கொண்டதுடன் இந்த சிந்தனை ரீதியான விசேடத்துவத்தை சர்வதேசத்தின் மூலம் மதிப்பளிக்கப்பட்டமை நாம் பெற்ற சிறந்த வெற்றியாகுமென நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில் புத்தாக்கங்களுக்கு செல்வதற்கும் மற்றும் நிதிச் சேவைகள் துறையில் டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக எடுத்த முயற்சிகள் தற்போது வெற்றியளித்துள்ளதாக இந்த விருதின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வருடத்தின் இறுதிக்குள் எமது சேவைகள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் மயமாகுமென எவ்வித சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறமுடியும். டிஜிட்டல் மயமாக்கல் எமது எதிர்கால சேவைகளின் தீர்மானம் மிக்க கருவியாக அமைவதுடன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சேவை மட்டத்தில் வழங்க எம்மால் முடியுமாகுமென நான் நம்புகின்றேன். சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் மூலம் சேவைகளை துரிதமாக வழங்குதல், திறன்களை உச்ச நிலைக்கு கொண்டுவருதல் மற்றும் செலவுகளை நிர்வகிப்போருக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடிவதன் ஊடாக மிகவும் சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை பெற்றுக் கொடுக்க மிக உதவியாக இருக்குமென்பதை எவ்வித சந்தேகத்திற்கிடமின்றி கூற முடியும்.” என தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக நாடு Lockdownஆன காலப்பகுதியில தமது வீடுகளிலேயே தங்கியிருந்த மக்களின் மன மகிழ்ச்சி மற்றும் புதுவருடத்திற்காக புதிய அனுபவத்தை பெற்றுக் கொடுக்க முன்கூட்டியே தமது அபே கெதர அவுருது டிஜிட்டல் மேம்பாட்டு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். இதன்போது சம்பிரதாயபூர்வ பெருநாள் விளையாட்டுக்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியதுடன் அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களது வீடுகளில் இலகுவாக இருந்து அதற்கு பங்குபற்றி போட்டியிட முடியும். தலையனை போட்டி, கண்மூடி பானை உடைத்தல், சறுக்கல் மரம், யானையின் கண்ணில் புள்ளடி இடுதல், போன்ற பெருநாள் விளையாட்டுக்கள் பல இதில் அடங்கும். மேலும் இந்த டிஜிட்டல் பெருநாள் விளையாட்டுக்களில் ஈடுபடுவோருக்காக பரிசளிப்பதற்காக விண்ணப்பிப்பதற்கும் சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் பெருநாள் சம்பிரதாயங்களை மேற்கொள்வதற்கான காலநேரம் குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCE தமது வர்த்தக நடவடிக்கைகளை சிறந்தத்திலும் மற்றும் வேகமாகவும் மேற்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பின்பற்றியதுடன் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ள புதிய சேவைகளை டிஜிட்டல் மயமாக்கலில் பலப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக நிறுவனத்தினால் கடந்த சில வருடங்களாக சிறந்த முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. Moneyworkz.lk டிஜிட்டல் நிதி சேவை கட்டமைப்பு மற்றும் eZCash போன்ற ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுக்களை வழங்குகிறது.
ஐந்தாவது தடவையாகவும் இடம்பெற்ற ‘Vega’டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வு IAA நிறுவனத்தினால் வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்படுவதுடன் தொழில்ரீதியான மற்றும் பயிற்சி ரீதியான 560 குழுக்களின் கீழ் விருதுகளுக்காக 1182 விண்ணப்பங்கள் இந்த வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 29 நாடுகளிலுள்ள நிறுவனங்களினால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் கடினமான நடவடிக்கையின் கீழ் சர்வதேச நடுவர் குழுவினால் விருதுகளுக்காக தகுதி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். HNB FINANCE இனால் இந்த வருடத்தில் வென்றெடுக்கப்பட்ட விருதானது கடந்த வருடத்திற்குள் வென்றெடுக்கப்பட்ட Hypergiant Industries, Cinétévé Experience Philip Morris, போன்ற சர்வதேச வர்த்தக இலச்சினைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.