ஒரு வீட்டை அல்லது சொத்தை கொள்வனவு செய்தல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முக்கியமான முதலீட்டுத் தீர்மானங்களில் ஒன்றாக அமையும். ஆகவே, அனேகமானவர்கள் ஒரு வீட்டைக் கொள்வனவு செய்வதால் ஏற்படுகின்ற நிதிச் சுமைக்கு நிவாரணம் தேடுவதற்காக வீட்டுக் கடன் பெறத் தீர்மானிக்கின்றனர்.
வாழ்நாள் முழுவதிலும் முக்கிய இடத்தைப் பெறுகின்ற இதுபோன்ற ஒரு முதலீட்டுக்கான முடிவினை எடுக்கும்போது கட்டாயமாக சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டுக் கடனைப் பெறுவதுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் யாவை மற்றும் உங்களால் நீண்டகாலம் எந்தளவுக்கு செலவுளைத் தாக்குப்பிடிக்க முடியும் என்பதற்கான புரிந்துணர்வு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல், உங்கள் வீட்டுக் கடன் தேவையை பூர்த்தி செய்ய மிகச்சிறந்த தெரிவினைத் தேடிக் கொள்வதும் மிகவும் முக்கியமானது.
வீட்டுக் கடனைப் பெறுமுன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்
வீட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கும் முன்னர் நீங்கள் அந்த ஆய்வை செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதோடு, கடன் உங்கள் தேவையுடன் பொருந்துகிறதா என்பதை புரிந்து கொள்வதற்கு அது உதவியாக அமையும். அதற்கு மேலதிகமாக, அந்த வீட்டுக் கடனுக்குரிய வட்டி வீதம், கடன் வழங்கும் நிறுவனத்தால் விதிக்கப்படும் நியதிகளும் நிபந்தனைகளும் யாவை என்பதை ஆராய்வதற்கும் அது உதவும். பலவிதமான அடகுக் கடன்களை வழங்குபவர்கள் அவர்களுடைய நிறுவனத்திற்கு ஏற்றவகையில் உங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பர். எனவே, உங்கள் கடன் தெரிவின்போது அத்தகை விடயங்களில் கவனம் செலுத்துவது முக்கியமானது.
நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடக் கூடிய, கடன் பெறுவதற்காக தகுதி பெறும் அளவுகோல்களில் கவனம் செலுத்துங்கள். வங்கி நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற வீட்டுக்கடன் வசதிக்காக, ஏனைய நிதிச் சேவைகளை விடவும் கூடுதலான ஆவணங்கள் தேவைப்படுவது குறிப்பிடத்த்து.
வங்கிகளினால் வழங்கப்படுகின்ற வீட்டுக்கடனைப் பெறுவதைப் போல் அல்லாமல், எச்.என்.பி பினான்ஸ் கம்பெனி உங்களுக்கு எளிமையான, சிரமங்கள் இல்லாத செயல்முறையை வழங்கியுள்ளது. 60 வயதுக்கும் குறைவான மற்றும் திருப்பிச் செலுத்த போதிய ஆற்றலைக் கொண்டுள்ள நபர் எனின், கடனுக்கான விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் இலகுவாக எச்.என்.பி பினான்ஸ் கம்பெனியில் வீட்டுக் கடனைப் பெற முடியும்.
நீங்கள் பெற்றுக்கொள்ளும் கடனுக்காக ஆயுட்காலம் முழுவதிலும் நீங்கள் எவ்வளவு தொகையைச் செலுத்தவேண்டும் மற்றும் ஏற்புடைய கட்டணங்கள் அல்லது வட்டி எவ்வளவு போன்ற கடன் நிபந்தனைகளும், நீங்கள் தெரிவு செய்யும் நிறுவனமும் பெற்றுக் கொள்ளும் கடன் வகைக்கு அமைய தீர்மானிக்கப்படும். கடன் நிபந்தனைகள் மற்றும் வட்டி விதத்திற்கான உங்கள் தகைமையை தீர்மானிக்கும்போது கடன் வழங்குபவர்கள் உங்களின் கடன் வரலாறையும் தற்போதைய செலுத்துகை வரலாறையும் ஆராய்வர். பல்வேறு நிறுவனங்களால் உங்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்படும்; எனவே, வீட்டுக்கடன் ஒன்றைத் தெரிவு செய்யும்போது கடன் உடன்படிக்கையை நன்றாக வாசித்து அனைத்து விதமான வட்டி வீதங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராயுங்கள்.
உங்கள் பிரதேசத்தில் வாழ்க்கைச் செலவு, பாடசாலை மற்றும் போக்குவரத்திற்கான செலவுகள் போன்ற உங்களுடைய அன்றாட செலவுகள் பற்றி கவனத்தில் எடுத்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய நிதி நிலைக்கு அமைய வீடு அமைந்துள்ள இடத்தை தெரிவு செய்வதானது உங்களால் ஏற்க முடியுமான தொகைக்கு பெறக்கூடிய மிகச்சிறந்த கடனை தீர்மானிப்பதற்கு உதவியாக அமையும்.
நீங்கள் வீட்டுக் கடன்பெற பதிவு செய்யும்போது, நீங்கள் கடனுக்காக திருப்பிச் செலுத்தும் தொகை உங்களுடைய செலவுகளில் சேரும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுக்குரிய எல்லாக் கொடுப்பனவுகளும் உரிய நேரத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்துகொள்ள முறையான வரவு செலவைப் பேணுதல் மிகவும் பொருத்தமானது. நீங்கள் செலவுகளில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதோடு, உங்களுடைய எல்லாக் கடன்களையும் மிக விரைவில் செலுத்தக்கூடியவாறு உங்களுடைய வருமான வெளிப்பாச்சலைக் கட்டுப்படுத்த அவசியமான முன் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கடன் கால எல்லையில், உங்களுடைய தனிப்பட்ட கடன் மீதான கொடுப்பனவுகளில் தாக்கம் ஏற்படாதவாறு காலதாமதத்தை தவிர்த்துக் கொள்ள சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, உங்களுடைய வீட்டுக் கடனை முழுமையாக செலுத்தித் தீர்க்கும் வரை வேறு குறிப்பிடத்தக்க முதலீடுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு வீட்டுக் கடனை பெறுவதாயின், உங்களுக்கு எத்திகதியில் எவ்வளவு தொகையைச் செலுத்த முடியும் என்பதை தெரிவு செய்தல் மிகவும் முக்கியமானது. அறவிடக் கூடிய அதிஉச்ச தொகை உங்கள் “நிகழ்காலப் பொறப்”பாக கருதப்படும். இந்த எல்லை ஒவ்வொரு கடன் வழங்கும் நிறுவனத்திற்கு ஏற்ப வேறுபடுவதோடு நியதிகளும் நிபந்தனைகளும் சிறிய அளவில் மாறுபடலாம். எனினும், ஓரளவுக்கு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், நீங்கள் கடன் தவணைகளைத் தவறவிடாமல் நீண்ட காலத்திற்கு எவ்வளவு தொகையைச் செலுத்துவீர்கள் என்பதை தீர்மானிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்த தவணைக் கட்டணமானது ஒப்பந்தம் செய்துகொள்ளும் மீளச் செலுத்தும் காலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். உங்களுடைய அடிப்படைக் கொடுப்பனவு அதிகமானதாக இருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய தவணைக் கட்டணத்திற்கான அழுத்தம் குறைவாக இருக்கும்.
கடனை மீளச் செலுத்துவதற்காக நீண்ட காலத்தை தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் செலுத்தவேண்டிய மாதாந்த தவணைக் கட்டணத்தின் அளவை குறைத்துக் கொள்ள முடியும். எவ்வாறாயினும், இது வட்டி வீதத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அதன் விளைவாக உயர் வட்டி வீதம் காரணமாக நீண்டகாலம் தவணைக் கட்டணத்தைச் செலுத்தும்போது கூடுதலான தொகையை மீளச் செலுத்த நேரிடும்.
மாதாந்த தவணைக் கட்டணம் தவிர்ந்த, நிர்வாக மற்றும் கடன் செயலாக்கத்திற்கான கட்டணத்தைச் செலுத்த நேரிடும். நீங்கள் செலவு செய்ய எதிர்பார்த்துள்ள விடயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான எதிர்பாராத விலைப்பட்டியல்களுக்கான கொடுப்பனவை தவிர்த்துக் கொள்வதற்கு, நீங்கள் கடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன்னர் கடன் வழங்கும் நிறுவனத்தில் கலந்துரையாடி அத்தகைய விடயங்களில் தெளிவுபெற வேண்டும்.
ஏற்கனவே கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டியிருந்தால், அது ஒரு தடவை மட்டும் செலுத்தப்படும் கட்டணமா இல்லாவிட்டால், மீண்டெழும் செலவினமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மாதாந்தக் கட்டணம் ஒன்றை செலுத்தச் வேண்டியிருந்தால் உங்களுடைய நிதித் திட்டத்தை வகுக்கும்போது மாதாந்த வரவு செலவினை கணித்து, அதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
உங்களுடைய வீட்டுக் கடன் தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய முழுமையான புரிந்துணர்வு இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். நீங்கள் கையொப்பமிடும் எல்லா ஆவணங்களையும் நன்றாக வாசித்து, எதிர்காலத்தில் உங்களுக்கு ஏற்புடைய நிபந்தனைகள், அடிக்குறிப்புகள் அல்லது மேலதிக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றி கவனம் செலுத்துங்கள். இலகுவான வீட்டுக் கடன்களை வழங்கும் எல்லா நிறுவனங்களும் உங்களுக்கு விதிக்கப்பட்ட கூடிய தண்டப் பணங்கள் பற்றிய தகவல்களை நேரடியாக வழங்காததால், விதிக்கப்படக் கூடிய எல்லாத் தண்டப் பணங்கள் பற்றியும் கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் விண்ணப்பிக்கும் கடனுக்குரிய சட்ட விதிகள், ஒழுங்குவிதிகள் பற்றியும் கடன் தொகை எவ்வாறு முழுமையாக செலுத்தி முடிக்கப்படும் என்பது பற்றியும், அத்துடன் எதிர்காலத்தில் கடன் பெறுவதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதில் செல்வாக்கு செலுத்தும் ஏனைய வரையறைகள் அல்லது தேவைப்பாடுகள் பற்றியும் முழுமையான புரிந்துணர்வு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அசையா சொத்துகள் முதலீடுகளாக இருந்தாலும், எல்லா முதலீடுகளைப் போலவே இதிலும் ஆபத்து வரவு உள்ளது. சரியான முறையில் ஆய்வு செய்வதும் முன்னாயத்தமும் இருந்தால் ஆபத்து வரவை குறைத்துக்கொண்டு இலாபத்தை ஈட்டலாம் என்ற நல்ல செய்தியும் உண்டு. நீங்கள் சொத்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கு கடன் வசதியை பெறுமுன்னர், வீட்டை கொள்வனவு செய்தல் மற்றும் கடன் வழங்கும் செயற்பாடு பற்றிய புரிந்துணர்வைப் பெற வேண்டியது மிக மிக அவசியம்.
எச்.என்.பி பினான்ஸ் கம்பெனி வழங்கும் நிவாஹன – வீட்டுக் கடனுக்காக பதிவு செய்து கொள்வதன் மூலம் நீங்கள் இந்த ஆபத்து வரவை குறைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கை கனவை நனவாக்க முடியும். இந்த கடன் வசதி மூலம் உங்களுக்கு அதிகபட்சமாக 10 வருடங்கள் மீளச் செலுத்தும் காலத்தைக் கொண்ட, நிலையான சொத்து ஒன்றின் மீதான அடைமனமாக 10 மில்லியன் ரூபா வரையான கடனைப் பெறலாம்.
குறைவான ஆவணங்களுடன் துரிதமாக கடன் செயலாக்கத்திற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கு எச்.என்.பி பினான்ஸ் கம்பெனி உங்களை நாடி வந்து வழங்கப்படும் சேவை நிவாஹன வீட்டுக் கடன் திட்டத்திலுள்ள ஏனைய நன்மைகள் ஆகும். இந்த விசேட கடன் ஊடாக எச்.என்.பி பினான்ஸ் கம்பெனி உங்கள் கனவு இல்லத்தை அமைப்பதற்கு, கொள்வனவு செய்வதற்கு அல்லது பழுது நீக்குவதற்கு வசதியான கடன் திட்டத்தை உங்களுக்காக வழங்குகிறது.